கால்நடை தீவன ஊழல் வழக்கில் பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளித்தது.
லாலு பிரசாத் தவிர மூன்று முறை பிகார் மாநில முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன்னாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.பி. ஜெகதீஷ் சர்மா, நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 44 பேர் குற்றவாளி என்றும் ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள வீர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜெகன்னாத் மிஸ்ரா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் படிக்க>>>
No comments:
Post a Comment