தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 23 August 2016

 செப்-13ல்   காரைக்குடி    மாவட்ட மாநாடு 

 மாநில செயலர்  தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்  Thursday 18 August 2016

செயற்குழு மற்றும் பணி ஒய்வு பாராட்டு 

    காரைக்குடியில் 18.08.2016 அன்று மாவட்ட செயற்குழுவும்  மற்றும் 
பணி ஓய்வு பெற்ற மாவட்ட துணைத் தலைவர் தோழர் U.குழந்தை  சாமி அவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது  

   மாவட்ட தலைவர் தோழர் M. பூமிநாதன் தலைமை தாங்கினார் 
மாவட்ட செயலர் தோழர் P.மகாலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்

 மாநில சங்க அமைப்புசெயலர்தோழர் R. கிறிஸ்டோபர் சிறப்புரை ஆற்றினார்.

   பணி ஓய்வு பெற்ற மாவட்ட துணைத் தலைவர் தோழர் U.குழந்தை  சாமி அவர்களை  தோழர் P. ரவி  சிவகங்கை  பாராட்டி பேசினார்.

கிளை செயலர்கள் S.தியாகராஜன், R.சேரன்  N.குணசேகரன்  D.கேசவன் ஆகியோர் அமைப்பு நிலை பற்றி பேசினர்.

 கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன: 

1)செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தை சிறப்பாக செய்வது 
2)அகில இந்திய மாநாட்டு நிதியாக உறுப்பினர் ஒவ்வொருவரும் தலா      ரூ.1000/-தருவது, 
3)மாவட்ட மாநாட்டை காரைக்குடியில் செப்டம்பர் 10 அன்று நடத்துவது    இதற்கென ஒவ்வொரு கிளையும் ரூ .2000/- தருவது , 
4)தலமட்ட பிரச்சனைகளுக்கு  போராட்டம் அறிவிப்பது. 

தோழர்  M. மணிவாசகம் நன்றி கூறி முடித்து வைத்தார்    

தோழர் R. கிறிஸ்டோபர் சிறப்புரை ஆற்றுகிறார் 
மாவட்ட சங்க நிர்வாகிகள் 


பணி ஓய்வு பெற்ற மாவட்ட துணைத் தலைவர் தோழர் U.குழந்தை  சாமி அவர்களுக்கு மாநில சங்க அமைப்புசெயலர்தோழர் R. கிறிஸ்டோபர் நினைவுப் பரிசு வழங்குகிறார்  Tuesday 16 August 2016

மாவட்ட செயற்குழு

    18.08.2016 வியாழன்  அன்று காலை 10 மணிக்கு காரைக்குடி பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள நமது சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் M. பூமிநாதன் தலைமையில் நடைபெறும்

ஆய் படு  பொருள் :

1. செப் - 2  பொது வேலை நிறுத்தம்
2.  அகில இந்திய மாநாட்டிற்கான நிதி
3. காரைக்குடி மாவட்ட மாநாடு
4. இன்ன பிற  தலைவர் அனுமதியுடன்

நமது மாநில சங்க அமைப்பு செயலர்
தோழர். R.மெய்யப்பன் கிறிஸ்டோபர் 

                   சிறப்புரை ஆற்றுகிறார் 

மாவட்ட சங்க நிர்வாகிகளும் கிளை செயலர்களும் குறித்த நேரத்திற்கு வந்து செயற்குழுவை சிறப்பாக நடத்தி தர வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்

Friday 12 August 2016

Tuesday 2 August 2016கிளை மாநாடு – ராமநாதபுரம்

  03.08.2016 அன்று மாலை 5 மணியளவில் ராமநாதபுரம் தொலைபேசி நிலையத்தில், கிளைத்தலைவர் Com. K. போஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும்

நமது மாநில செயலாளர்
       Com. A.பாபுராதாகிருஷ்ணன்
சிறப்புரை ஆற்றுகிறார்


அனைவரும் வருக!