தலைப்புச் செய்திகள்
Showing posts with label காரைக்குடி செய்திகள். Show all posts
Showing posts with label காரைக்குடி செய்திகள். Show all posts
Saturday, 26 July 2014
Tuesday, 8 July 2014
Thursday, 26 June 2014
Thursday, 19 June 2014
புதிய ஊழியர்கள் நியமனம் தேவை!
|
8100 ஊழியர்கள்
ஓய்வு பெற இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு 7200 புதிய
ஊழியர்களை நியமனம் செய்யப் போவதாக SBI சேர்மன் அறிவித்துள்ளார்.
|
|
BSNLன்
நிலை என்ன?
|
|
ஆண்டு
தோறும் 10000க்கும்
மேல் ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள். BSNL உருவாகும்போது இருந்த மூன்றரை லட்சம் ஊழியர்கள்
எண்ணிக்கை தற்போது இரண்டரை லட்சமாகக் குறைந்துள்ளது. ஆனால் புதிய ஊழியர்கள் நியமனம்
கிடையாது.
|
|
திறமையான
திருப்திகரமான சேவைக்குப் போதுமான ஊழியர்கள் தேவை என்பதை BSNL புரிந்து கொள்ளாமலும் அதைப் பற்றி அக்கறையின்றி இருப்பதும்
கண்டனத்திற்குரியது.
|
Wednesday, 19 March 2014
மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
14.3.2014 அன்று
நமது மாவட்ட சங்க அலுவலகத்தில்
நடைபெற்ற
செயற்குழு கூட்டத்திற்கு
மாவட்ட
தலைவர் தோழர்
கேசவன் தலைமை
ஏற்றார்.
மாவட்ட
செயலாளர் தோழர்
பூமிநாதன்
RGB தேர்தலில் நமது வேட்பாளர் வெற்றி பெற நாம்
ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும்,
மார்ச்
22
அன்று நமது BSLNLEU அமைப்பு
தினம் கொண்டாட்டம் பற்றியும்
BSLNLEU & TNTCWU போராட்ட
திட்டம் பற்றியும் எடுத்துரைத்தார்.
ராஜ்கோட்டில்
நடந்த அகில இந்திய செயற்குழுவில் கலந்து கொண்ட
நமது மாநில உதவி செயலர் தோழர் பழனிசாமி,
மத்திய
செயற்குழு முடிவுகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
செயற்குழு
உறுப்பினர்களின்
பயனுள்ள செழுமையான விவாதங்களுடன் தீர்க்கமான முடிகள் எடுக்கப்பட்டு
தோழர் கனகராஜ் நன்றி
கூற
செயற்குழு
கூட்டம் இனிதே முடிந்தது.
Thursday, 13 March 2014
செய்திகள் . . .
மகளிர் தின சிறப்புக்
கூட்டம்
10.03.2014 அன்று காரைக்குடியில் மகளிர் தின சிறப்புக்கூட்டம்,
GM அலுவலகத்தில் CONFERENCE HALL -லில்
நமது உதவி பொது மேலாளர்
திருமதி.
இராஜம்மாள்
தலைமையில்
மிக சிறப்பாக
நடைபெற்றது
50-க்கும் அதிகமான பெண் தோழர்கள் கலந்துகொண்டனர்
சிறப்பு
அழைப்பளராக
தேவகோட்டை கல்லூரி
பேராசிரியை
தோழர். கண்மணி அவர்கள் கலந்துகொண்டு
பெண்களின்
பணியிட சிரமங்கள்
பற்றியும்
பெண்கள்
விழிப்புணர்வு பற்றியும்
விரிவாக எடுத்துரைத்தார்கள்
இந்த கூட்டத்தில்
BSNLEU மாவட்ட செலயலாளர் தோழர் பூமிநாதன்
NFTE மாவட்ட செலயலாளர் தோழர் மாரி
AIBSNLEA பொறுப்பாளர் தோழர் நாகராஜன்
நிர்வாகத்தின் சார்பில் DGM திரு.ஜெயச்சந்திரன்
ஆகியோர் கலந்துகொண்டு
தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்
இறுதியில்
அனைத்து பெண் தோழர்களின் கலந்துரையாடலுடன்
மகளிர்
தின கூட்டம்
இனிதே நிறைவுற்றது
மாவட்டச் செயற்குழுக்
கூட்டம்
14.03.2014 அன்று GM அலுவலகத்தில் உள்ள
BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில்
மாவட்ட தலைவர் தோழர் D.கேசவன், தலைமையில்
மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
மாநில உதவி செயலர் தோழர் பழனிச்சாமி அவர்கள்
கலந்து கொண்டு சிறப்புரை
ஆற்றுகிறார்.
மாவட்டச் சங்க நிர்வாகிகள்
கிளைச் செயலர்கள் மற்றும் அனைத்துத் தோழர்களும்
தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
. . . பூமிநாதன், மாவட்டச் செயலர்.
Subscribe to:
Posts (Atom)

















