தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 31 December 2014

                            
வெற்றி!        வெற்றி!!       வெற்றி!!!

நமது பிரதான கோரிக்கையான
முறையற்ற மாற்றல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால்,
தூத்துக்குடியில் நடைபெற இருந்த
மாநில செயலரின் உண்ணா விரத போராட்டம்
விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
போராட்ட களம் காண தயார் நிலையில் இருந்த தோழர்களுக்கும்,
பிரச்சனை தீர்வு காண உதவிய மாநில நிர்வாகத்திற்கும்
காரைக்குடி மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!

Monday 29 December 2014

மாநிலச்செயலர் உண்ணாவிரதம்

தூத்துகுடி நிர்வாகத்தின்
தன்னிச்சையான சர்வதிகார போக்கை கண்டித்தும்,
ஊழியர் விரோதப்போக்கை கண்டித்தும்
30-12-2014 அன்று
நமது மாநில செயலர்
தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்
உண்ணாவிரதம் இருக்க உள்ளார்.
உண்ணாவிரதம் போராட்டம் வெல்லட்டும் !
வெற்றி பெற  மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.

Tuesday 23 December 2014

அமெரிக்க உறவினால் சோசலிசக் கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்- ரால் காஸ்ட்ரோ

ஹவானா, டிச.22-
அமெரிக்க உறவினால் சோசலிச கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே புதிதாக தூதரக உறவு ஏற்படுத்திக் கொள்ள சமீபத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்த ஆண்டு நிறைவு செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, அமெரிக்கா கியூபா இடையில் ஏற்பட்டுள்ள புதிய உறவினால், கியூபாவில் ஒரு கட்சி ஆட்சி முறையில் சீர்திருத்தம் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ நாடாளுமன்றத்தில் பேசும்போது, அமெரிக்க உறவினால் கியூபா ஒருபோதும் தனது சோசலிசக் கொள்கைகளையும், போராட்டத்தையும் விட்டுக் கொடுக்காது. இதேபோல் அமெரிக்காவும் தனது அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும் என்று கியூபா வலியுறுத்தாது. கியூபாவுக்கு எதிராக கடந்த 50ஆண்டுகளாக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை விலக்க அமெரிக்கா முதலில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Monday 22 December 2014

     FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS

D-7, Telegraph Place, Gole Market, New Delhi – 110 001.


To
All General Secretaries of BSNL Unions/Associations
of Non-Executives and Executives

Sub: SAVE BSNL - Organising Three Days Dharna from 6 th to 8 thJanuary 2015

Dear Comrade,

As per the decision of the Forum, Three Days Dharna at SSA/Cirlce levels and at Corporate office is to be organised from 6th to 8th January 2015 jointly by the Forum affiliated unions/associations in support of our demands to the government and the BSNL Management on the issue of Revival of BSNL. It is in preparation for the Parliament March on 25th February and Indefinite Strike from 17th March 2015. During the period, a massive campaign among the workers and people has to be conducted and one crore signature to be collected on the Memorandum to be submitted to the Prime Minister on the day of the Parliament March on 25th February 2015.
     The Dharna has to be organised with massive participation in all the centres. Within the three days, we have to ensure that all the employees are involved, meaning, that every employee participates in Dharna at least one day. This will be a comitment of each and every worker to the action programme. One third of the workforce at least should be there in each day dharna.
Circulars and pamphlets be issued with details of our demands and agitation, which can be supplied to the public and other trade unions who visit the dharna site. The Forum leaders at Circle/District levels should contact leaders of fraternal unions and seek their support and solidarity. Signatures could be collected from people and members of fraternal unions during this period of dharna. Wide publicity should be given in the press about the demands and programme. Representatives of the
people like M.P.s, MLAs, Mayor, Councillors etc may be invited to inaugurate / address the dharna in support of our campaign to SAVE BSNL. Press Conference also can be conducted, wherever
feasible.
     The Three Days Dharna is a major campiagn programme, after the Lunch Hour Demonstration on 11 th December 2014 and has to be organised very effectively.
     It is requested that the General Secretaries give direction to their Circle Secretaries to initiate the preparations immediately in co-ordination with other Circle Secretaries.

Yours comradely,
VAN Namboodiri
Convener, Forum.

Saturday 20 December 2014


டிச.22-ல்    பாக்ஸ்கான் ஆலை நுழையும் போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

சென்னை, டிச. 19-
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:சென்னைக்கு அருகில் செயல்பட்டுவரும் பன்னாட்டுநிறுவனமான பாக்ஸ்கான் சட்டவிரோதமாகஉற்பத்தியை நிறுத்திஆலையை மூடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு, தற்போது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 1700 தொழிலாளர்களை டிசம்பர் 22 முதல் பணிக்கு வரக்கூடாது என்ற அறிவிப்பை செய்துள்ளது.
இத்தகைய சட்டவிரோத ஆலை மூடலை எதிர்த்து சிஐடியு தலைமையிலான பாக்ஸ்கான் இந்தியாதொழிலாளர் சங்கத்தின் சார்பில் எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் தொழிலாளர் உதவி ஆணையர் முன்பு நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தையில் பாக்ஸ்கான் நிர்வாகம் தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர் களின் பணிப் பாதுகாப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் துறையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தமிழக அரசிடம் குறைந்தவிலையில் நிலம், தங்குதடையற்ற மின்சாரம், தண்ணீர், வரி விலக்கு என புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக பல்வேறு வகைகளில் சலுகைகளைப் பெற்று உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்த இளம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி மிக குறைந்த ஊதியத்தில் பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன.
நிரந்தரத்தன்மையுள்ள பிரிவுகளில் கூட காண்ட்ராக்ட், டிரெய்னி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.இந்த பன்னாட்டு நிறுவனங்களில் பணி பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம், 8மணிநேர வேலை போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் அமலாவதில்லை. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் போன்ற அமலாக்கப்பிரிவுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.
இந்த பின்னணியில் 58 வயது வரை பணிநிரந்தர ஆணை வழங்கிய நிறுவனங்கள் இப்போது 25-28 வயதிலேயே தொழிலாளர்களை பணியிலிருந்து வெளியேற்றுகின்றனர்.பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் ‘மேக் இன் இண்டியா’ எனும் பிரதமர் மோடியின் முழக்கம் எந்தளவுக்கு ஏமாற்று வேலை என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி.பாக்ஸ்கான் நிறுவனத்தின் சட்டவிரோத ஆலை மூடலை எதிர்த்து பாக்கான் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 22.12.2014 அன்று நடைபெறும் ஆலை நுழைவு போராட்டத்திற்கு சிஐடியு தமிழ் மாநிலக்குழு முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
அன்றைய தினம் மாவட்ட தலைநகரங்களில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என சிஐடியு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களில் ஆலைமூடலுக்கு அனுமதி வழங்ககூடாது, வேலை பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிஐடியு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Friday 12 December 2014

Thursday 11 December 2014

Monday 8 December 2014

அருமைத் தோழர்களே ! நமது BSNLஅதிகாரிகள் + ஊழியர்கள் FORUM-சார்பாக பிரதமருக்கு கீழ்க்கண்ட மனு பொது மக்களிடம் 1 கோடி கையெழுத்து பெற்று சமர்பிக்க வேண்டும் ...
Charter of Demands:
         1.Filling up the posts of CMD/BSNL and Director(Finance) and DIR(HR) of BSNL Board, which are vacant for months.
2.Stop formation of subsidiary companies of BSNL.
3.Compensation for loss on landlines for rural / remote area service.
4.Procurement of equ.t for dev., expansion & better service, more focus on laying OF cable to strengthen the trans.network.
5.Transfer of Assets to BSNL
6.Drop proposal for Merger of BSNL and MTNL.
7.Spectrum Liberalisation and Trading.
8.Pension Contribution on actual basic pay instead of maximum of the pay scale for the employees absorbed from DoT to BSNL.
9.Reject the recommendation of TRAI to force BSNL to surrender 1.2 MHz spectrum in premium 900 MHz band.
10. Reject M/s Deloittee Consultant recommendations
11.Free allotment of spectrum to BSNL
12.Provide financial assistance to BSNL to expand network.
13.BBNL should be merged with BSNL
14.BSNL should start 4G Services.
15.Refund of BWA spectrum charges to BSNL by the Government for the spectrum surrendered by BSNL.
16.78.2% IDA merger fixation for pre-2007 and post-2007 Pensioners.
17.Pension Revision of BSNL Pensioners
18.Fresh Recruitment of Staff.
19.BSNL service to be mandatory to Central Government, State Government and PSUs.
20.Condition of mandatory purchase of equipments from ITI to be scrapped.
21.Implement cabinet decision on 30% superannuation benefits to BSNL direct recruited employees.
Yours faithfully,
--------------------------------------------------------------------------------------------------------------------------
வ.எண்                 பெயர்                                                   பதவி                    கையொப்பம் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
1.
--------------------------------------------------------------------------------------------------------------------------
2.
--------------------------------------------------------------------------------------------------------------------------
3.
--------------------------------------------------------------------------------------------------------------------------
அருமைத் தோழர்களே ! மக்களை சந்தித்தது 1 கோடி கையெழுத்து பெற்று, பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தி, இந்திய  பிரதமரிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துநமது BSNL நிறுவன பாதுகாப்பிற்காண போராட்டத்திற்கு இப்போதிருந்தே  தயாராகுவோம் 

Thursday 4 December 2014

Monday 1 December 2014