தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 20 December 2014


டிச.22-ல்    பாக்ஸ்கான் ஆலை நுழையும் போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

சென்னை, டிச. 19-
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:சென்னைக்கு அருகில் செயல்பட்டுவரும் பன்னாட்டுநிறுவனமான பாக்ஸ்கான் சட்டவிரோதமாகஉற்பத்தியை நிறுத்திஆலையை மூடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு, தற்போது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 1700 தொழிலாளர்களை டிசம்பர் 22 முதல் பணிக்கு வரக்கூடாது என்ற அறிவிப்பை செய்துள்ளது.
இத்தகைய சட்டவிரோத ஆலை மூடலை எதிர்த்து சிஐடியு தலைமையிலான பாக்ஸ்கான் இந்தியாதொழிலாளர் சங்கத்தின் சார்பில் எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் தொழிலாளர் உதவி ஆணையர் முன்பு நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தையில் பாக்ஸ்கான் நிர்வாகம் தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர் களின் பணிப் பாதுகாப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் துறையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தமிழக அரசிடம் குறைந்தவிலையில் நிலம், தங்குதடையற்ற மின்சாரம், தண்ணீர், வரி விலக்கு என புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக பல்வேறு வகைகளில் சலுகைகளைப் பெற்று உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்த இளம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி மிக குறைந்த ஊதியத்தில் பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன.
நிரந்தரத்தன்மையுள்ள பிரிவுகளில் கூட காண்ட்ராக்ட், டிரெய்னி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.இந்த பன்னாட்டு நிறுவனங்களில் பணி பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம், 8மணிநேர வேலை போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் அமலாவதில்லை. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் போன்ற அமலாக்கப்பிரிவுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.
இந்த பின்னணியில் 58 வயது வரை பணிநிரந்தர ஆணை வழங்கிய நிறுவனங்கள் இப்போது 25-28 வயதிலேயே தொழிலாளர்களை பணியிலிருந்து வெளியேற்றுகின்றனர்.பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் ‘மேக் இன் இண்டியா’ எனும் பிரதமர் மோடியின் முழக்கம் எந்தளவுக்கு ஏமாற்று வேலை என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி.பாக்ஸ்கான் நிறுவனத்தின் சட்டவிரோத ஆலை மூடலை எதிர்த்து பாக்கான் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 22.12.2014 அன்று நடைபெறும் ஆலை நுழைவு போராட்டத்திற்கு சிஐடியு தமிழ் மாநிலக்குழு முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
அன்றைய தினம் மாவட்ட தலைநகரங்களில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என சிஐடியு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களில் ஆலைமூடலுக்கு அனுமதி வழங்ககூடாது, வேலை பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிஐடியு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment