தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Friday, 5 September 2014

‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை போவதோ?’



கோவை சிறையில் வ.உ.சி. இழுத்த செக்கு 
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 
1907ம் ஆண்டில் வ.உ.சி. நடத்திய சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைச் சேர்ந்த எஸ்எஸ் கேய்லி கப்பல்.

கப்பலோட்டிய தமிழன் எனவும், செக்கிழுத்த செம்மல் எனவும் போற்றப்பட்ட வ.உ.சியின் நடவடிக்கைகள், ஏதோ ஏகாதிபத்தியத்தினை எதிர்த்தார், கப்பலோட்டினார் அதனால் தண்டனை பெற்று சிறையில் செக்கிழுத்தார் என்பது மட்டும், அவரது தியாகம் அல்ல. அவரின் நடவடிக்கைகளை நினைத்தால் நாம் பின்பற்ற வேண்டிய ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.சுதேசி கப்பல் தொழில் என்பது வியாபாரம் மாத்திரம் அல்ல.

ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையினை சுதேசி கப்பல் விடுவதன் மூலம் வ.உ.சி. தீவிரப்படுத்தினார். அதில் மக்களையும் பங்கு பெற வைத்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையில் ஒன்றுதான் சுதேசி கப்பல் தொழில் என மக்களை புரிய வைத்தார். அதனால் வ.உ.சி.யின் நடவடிக்கைகளுக்கு மக்கள் துணை நின்றனர். இரண்டு கப்பல்கள் வாங்கிட பொதுமக்களும் பணம் அளித்தனர்.வ.உ.சி.யின் நடவடிக்கைகளுக்கு பின்னால் மக்கள் துணை நிற்பதைப் பார்த்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பிரிட்டிஷ் கம்பெனி கப்பலில் கொழும்பிற்கும் தூத்துக்குடிக்கும் பயணக் கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 75 பைசாவிற்கு குறைத்தது.

ஆனால் மக்கள் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சியை புரிந்து வ.உ.சி.யின் சுதேசி கப்பலுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வரை நஷ்டமாகியது.அதேபோல், வ.உ.சி. சுதேசி கப்பல் விடுவது மாத்திரமல்லாமல் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கோரல் மில்லில் நடக்கும் கொடுமைகளை கண்டும் வெகுண்டெழுந்தார். கூலி குறைவு, பத்து வயது சிறுவன் கூட கொடுமையாக வேலை வாங்கப்படுதல், தவறு செய்தால் பிரம்படி போன்ற ஏகாதிபத்தியத்தின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டிட போராட்டம் நடத்தினார்.கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. 50 சதவீதம் ஊதிய உயர்வையும் கோரல் மில் தொழிலாளர்கள் பெற்றனர்.

ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட சலுகைகளையும் பெற்றனர். கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக தூத்துக்குடி நகராட்சி, ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்டு வந்த ரயில்வே மற்றும் இதர நிறுவனங்களும் வ.உ.சி.யால், தங்கள் நிறுவனங்களிலும் வேலைநிறுத்தம் வரக் கூடும் என்ற அச்சத்தில் தங்கள் தொழிலாளர்களுக்கும் 50 சதவீதம் ஊதிய உயர்வினை அளித்தனர். வ.உ.சி.யின் தொழிற்சங்க போராட்டம் தொழிலாளர்களை பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரிலும் அனைத்து தரப்பு தொழிலாளர்களையும் பங்கெடுக்க வைக்க உதவி செய்தது.அடுத்த சில நாட்களில் கோரல்மில் தொழிலாளர்களின் போராட்டத்தினைத் தொடர்ந்து 1908 மார்ச் 10 அன்று விபின் சந்திரபால் விடுதலை நாளை சுயராட்சியம் நாளாக கொண்டாட வ.உ.சி. உள்ளிட்ட தலைவர்கள் முடிவு செய்தனர்.
ஆனால் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இத்தகைய கொண்டாட்டத்திற்கு தடை விதித்தது. ஆனாலும் தடை உத்தரவை மீறி வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை நாள் கொண்டாட்டத்தை நடத்தினர். இவ்விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாததைக் கண்டித்து பர்மா எண்ணெய் (பெட்ரோல்) நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வ.உ.சி., சுப்பிரமணியசிவா, பத்மநாப ஐயங்கார் உள்ளிட்ட தலைவர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கைது செய்தது. இதனைக் கண்டித்து பெஸ்ட் கம்பெனி ஊழியர்கள், கசாப்புக் கடைக்காரர்கள், குதிரை வண்டி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வ.உ.சி.யின் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக போராடினர்.இத்தகைய நடவடிக்கைகளில் பங்கேற்ற கோரல்மில் தொழிலாளர்கள் தாங்கள் சில நாட்களுக்கு முன்பு பெற்ற ஊதிய உயர்வைக் கூட இழந்தனர்.

பொருளாதாரத்தை இழந்தாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை தொழிலாளிகளிடம் ஊட்டி அனைத்துத் தரப்பு தொழிலாளிகளையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது வ.உ.சியின் வெற்றி. வ.உ.சி.யின் நடவடிக்கைகளை பார்த்து அஞ்சிய அரசாங்கம் தூத்துக்குடியிலும், திருநெல்வேலி போன்ற பகுதிகளிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை மேலோங்கி இருக்கிறது என அரசாங்கத்திற்கு அப்போதைய ஆட்சித் தலைவர் (வின்ச் துறை) ரிபோர்ட் அனுப்பினார்.

வ.உ.சி.யின் போராட்டங்களை பாரதி தனது பாடல்களில்நாட்டி லெங்கும் ஸ்வாந்திர வாஞ்சையைநாட்டினாய்; கனல் - மூட்டினாய்;வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளேமாட்டுவேன்; வலி - காட்டுவேன்.கோழைப் பட்ட ஜனங்களுக் குண்மைகள்கூறினாய்; - சட்டம் - மீறினாய்;ஏழைப்பட்டிங்கு இரத்தல் இழிவென்றேஏசினாய்; வீரம் - பேசினாய்.என கலெக்டர் வின்ச் வ.உ.சி.வுக்கு சொல்லுவது போலவும் அதற்கு பதிலாக வ.உ.சி. கலெக்டருக்கு பதில் மொழியாகபொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளைகொண்டுபோகவோ? நாங்கள் சாகவோ?அழுது கொண்டிருப் போமோ? - ஆண்பிள்ளைகள்அல்லமோ? - உயிர் - வெல்லமோ?நாங்கள் முப்போது கோடி ஜனங்களும்நாய்களோ? - பன்றிச்சேய்களோ?நீங்கள் மட்டும் மனிதர்களோ? இதுநீதமோ? - பிடி - வாதமோ?எனப் பாடியுள்ளார்.

இப்படிப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்து நான்கரை ஆண்டு காலம் கடுங்காவல் சிறை தண்டனையை அனுபவித்தார். தான் சார்ந்த காங்கிரஸ் கட்சி கூட வ.உ.சி.யை கைவிட்டபோதும், தன்னுடைய கொள்கைகளை விடாமல் தொடர்ச்சியாக வாழ்நாள் முழுவதும் போராடியவர் வ.உ.சி.

- மா.முருகன், தூத்துக்குடி

Friday, 11 July 2014

அனைத்து அரசும் தனியாரை நோக்கி . . .


பட்ஜெட் செய்திகள்

குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000
வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்.) இணைந்துள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, அரசுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 1,271 கோடி கூடுதலாக செலவாகும். இதன் மூலம் ரூ.1,000க்கும் குறைவான ஓய்வூதியம் பெறும் 5 லட்சம் விதவைகள் உட்பட 28 லட்சம் பேர் பயனடைவர். இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்துக்கான ஊதிய வரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய வரம்பு உயர்வால் கூடுதலாக 50 லட்சம் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.

மொத்தம் 44 லட்சம் பேர் இபிஎப்ஓ திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

ஒரே பி.எப். கணக்கு எண்
தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ), ஒரே கணக்கு எண் (யுஏஎன்) திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. வேறு நிறுவனங்களுக்கு மாறினாலும், ஒரே கணக்கு எண்ணைப் பயன்படுத்த முடியும். வரும் அக்டோபரில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், 5 கோடிக்கும் அதிகமான இபிஎப்ஓ சந்தாதாரர்கள் பயனடைவர்.


மத்திய பட்ஜெட் 2014-ன் எதிரொலி காரணமாக,
விலை உயர்பவை
 சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள், குட்கா, பான் மசாலாக்கள்
 குளிர்பானம்
 இறக்குமதி செய்யப்பட்ட இரும்புப் பொருட்கள்
 எவர்சில்வர் பொருட்கள்.
 தொலைக்காட்சி, ஆன்லைன் விளம்பரக் கட்டணம்.
 உடைந்த வைரம்
 இறக்குமதி செய்யப்படும் உயர் தொழில்நுட்ப சாதனங்கள்
 போர்டபிள் எக்ஸ்-ரே இயந்திரங்கள்

விலை குறைபவை
 மொபைல் போன்கள்.
 கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள்
 19 இன்ச்களுக்கு குறைவான எல்.இ.டி. எல்.சி.டி. டிவி-க்கள்
 காலணிகள் விலை
 சோப்பு
 தீப்பெட்டிகள்
 லைப் மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகள்
 பிளாஸ்டிக் பொருள்கள்
 ஆடம்பர கற்கள்
 அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்
 அச்சு விளம்பரங்களுக்கான கட்டணம்
 மின் புத்தகங்கள்
 ஆர்.ஓ. நீர் சுத்திகரிப்பு யூனிட்டுகள்
 எல்.இ.டி. விளக்குகள், எல்.இ.டி. விளக்கு பொருத்தும் பட்டிகள்
 ஸ்போர்ட்ஸ் உறைகள்
 பிராண்டட் பெட்ரோல்
 எச்.ஐ.வி / எய்ட்ஸ் மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள்
 டி.டி.டி பூச்சிக்கொல்லி மருந்துகள்



பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய பொருளாதார ஆய்வறிக்கை

2012-13ம் ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனம் ஓ.என்.ஜி.சி. என்றும் அதிக நஷ்டத்தை அடைந்தது பிஎஸ்என்எல் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2012-13ம் நிதி ஆண்டில் லாபமீட்டிய 149 நிறுவனங்களின் மொத்த லாபம் 1,43,559 கோடி ரூபாய். மாறாக நஷ்டமடைந்த 79 நிறுவனங்களில் இழப்பு 28,260 கோடி ரூபாய் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஓஎன்ஜிசி, என்டிபிசி, ஃபெர்டிலைசர் கார்ப்பரேஷன், கோல் இந்தியா மற்றும் பிஹெச்இஎல் ஆகிய ஐந்து நிறுவனங்கள் லாபமீட்டிய நிறுவனங்களின் பட்டியலில் முதலில் இருக்கின்றன.

மாறாக பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏர் இந்தியா, சிபிசிஎல் மற்றும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் ஆகியவை அதிக நஷ்டமடைந்த நிறுவனங்கள் ஆகும். டிவிடெண்ட், வட்டி ஆகியவை மூலமாக மத்திய அரசுக்கு கிடைத்த வருமானம் 2011-12ம் ஆண்டை விட 2012-13ம் ஆண்டில் சிறிதளவு அதிகரித்திருக்கிறது

Thursday, 10 July 2014

பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகைகள்

வருமான வரி தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு
வருமான வரி விகிதங்களில் மாற்றம் இல்லை
ரூ. 2 லட்சம் வரை வரி இல்லை என்ற வரம்பு 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
80C சேமிப்பு உச்சவரம்பு 1 லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டுக்கடனுக்கான வட்டி சலுகை 1.5 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான வருமான உச்ச வரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

செய்தித் துளிகள் . . .

ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், EPF, ESI
நமது தொடர் முயற்சியால், தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சட்ட பூர்வமான குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான EPF, ESI போன்றவை உத்தரவாதப் படுத்த வேண்டும் என்றும் 08.07.2014 அன்று BSNL கார்ப்பொரேட் அலுவலகம் மீண்டும் ஒரு உத்தரவை வெளியிட்டிருக்கிறது.

தொலைத்தொடர்பு சேவைக்கு கட்டமைப்பு அவசியம் இல்லை, லைசென்ஸ் போதும்.

சொந்தமாக தொலைத்தொடர்பு கட்டமைப்பு இல்லாத நிறுவனங்களும் தொலைத்தொடர்பு அளிக்க அனுமதிப்பது தொடர்பாக தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. கட்டமைப்பு இல்லாவிட்டாலும் லைசென்ஸ் இருந்தால் போதும், கட்டமைப்பு பகிர்தல் மூலம் தொலைத்தொடர்பு சேவையைத் தர இயலும் என்ற நிலை உருவாக இருக்கிறது.

Wednesday, 9 July 2014

செய்தித் துளிகள் . . .

ரயில்வேயில் தனியார்மய அறிவிப்பு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

ரயில்வே துறையில் அந்நிய முதலீடு மற்றும் தனியார்மயம் ஊக்குவிக்கப்படும் 
என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு AIRF பொதுச்செயலர் தோழர். சிவ்கோபால் மிஷ்ரா 
கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். 
ரயில்வேயில் தனியார்மயமாக்கல் முயற்சியை அனுமதிக்க முடியாது 
என்று அறிவித்திருக்கிறார்.

குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000
தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் – 95ன் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 
குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.1000 வழங்க முடிவு செய்திருப்பதாக 
அமைச்சர் திரு.விஷ்ணுதேவ் சாய் எழுத்துப்பூர்வமாக 
பாரளுமன்றத்தில் பதில் அளித்திருக்கிறார். 
இதன் வாயிலாக 25 லட்சம் ஓய்வூதியர்கள் 
பயனடைய இருக்கிறார்கள்.

35 பொதுத்துறை நிறுவனங்களில் தலைமை நிர்வாகிகள் இல்லை

BSNL, MRNL, NHPC, COAL INDIA உட்பட 35 பொதுத்துறை நிறுவனங்களில்
CMD, MD, CHAIRMAN போன்ற தலைமைப் பதவிகளில் நபர்கள் இல்லை 
என்று பாரளுமன்றத்தில் அமைச்சர் திரு.ராதாகிருஷ்ணன்
எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார். 
தலைமைப் பதவிகளில் தகுந்த நபர்களை நியமிக்காமல் இருப்பது
அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை 
   வெகுவாகப் பாதிக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.

ஒளிரும் பாரதம்?

கிராமப்புறங்களில்ரூ.32க்கும் நகர்புறங்களில் ரூ.47க்கும் 
குறைவாகச் செலவு செய்பவர்கள் தான் 
வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் ஏழைகள் 
என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் 
திரு.ரங்கராஜன் தலைமையிலான கமிட்டி அறிவித்துள்ளது. 
பொருந்தாத அளவுகோலை நிர்ணயித்து 
வறுமையை ஒழித்து விட்டோம் என்று 
மார் தட்டும் மடமையை எப்படி ஏற்பது? 

இதிலும் வேடிக்கை என்னவென்றால், 
இந்த அளவுகோலின் அடிப்படையில் கூட 
40 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கிறார்கள். 
நவீன பொருளாதாரம் சமூகத்திற்குத் தந்த பரிசு தான் இது.
நன்றி: தினமணி

அந்நியருக்கு தாராளம்

ரயில்வே என்பது சேவை அல்ல; வர்த்தகம்: சதானந்த கவுடா
ரயில்வே துறையின் உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்க தயாராக இருப்பதாக ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா முன்மொழிந்துள்ளார். இதற்கான விதிகளைத் தளர்த்த நாடாளுமன்றம் வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
மக்களவையில் செவ்வாயன்று பகல் 12 மணியளவில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர்பேசும்போது, “ரயில்வே துறையில் வளர்ச்சி என்பது உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முதலீடு செய்யப்படுவதைப் பொறுத்தே அமையும். ரயில்வே துறை வருவாய் மற்றும் அரசு நிதியுதவி ஆகியவை வளர்ச்சிக்குப் போதுமானதாக இருக்காது. எனவே ரயில்வே அமைச்சகம் அன்னிய நேரடி முதலீட்டிற்கு கொள்கைகளை எளிதாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திடம் கேட்டுக் கொள்ள விருக்கிறதுஎன்றார்.
தனியார்
தனியார் - பொதுத்துறை கூட்டு முயற்சிகள் ரயில்வே துறைக்கு போதுமான நிதி ஆதாரங்களைத் திரட்டித் தருவதில் வெற்றியடையவில்லை; ஆகவே எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்றுவதில், தனியார் - பொதுத்துறை கூட்டுத் திட்டத்தை வலுப்படுத்துவது முக்கியம் என்று தாம் கருதுவதாகவும், பல எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்ற இந்த முறையிலேயே நிறைவேற்ற முதலீடு வரவேற்கப்படும் என்றும் அவர் கூறினார். உதாரணமாக, அதிவேக ரயில்கள், புல்லட் ரயில்களுக்கு அதிக முதலீடுத் தேவைப்படும் அதற்கு தனியார் மூலம் நிதிதிரட்டுவதே சுலபமான வழி என்று அவர் கூறினார்.

Thursday, 26 June 2014

Wednesday, 25 June 2014

உயரும் ரயில் கட்டணம்

உயர்த்தப்பட்ட ரயில் பயணிகள் கட்டணஉயர்வு ஜூன் 25 முதல் அமலுக்கு வருகிறது. ஜூன் 25 அல்லது அதற்குப் பிந்தைய தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்தபயணிகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம், பயணம் தொடங்குவதற்கு முன்பு டிக்கெட் பரிசோதகர்கள் அல்லது முன்பதிவு அதிகாரிகள் மூலம் பயணிகளிடம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இதற்காக முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இன்று ரயில் மறியல்

கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்திநாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் புதனன்று வாலிபர், மாதர், மாணவர் சங்கங்கள் ரயில் மறியலில் ஈடுபடுகின்றன.

ஆயுத வியாபாரிகளுக்கு ஒரு நற்செய்தி!

வரவிருக்கும் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு தாரளமாக இருக்கும் என்றும் நாட்டின் பலத்தை வலுப்படுத்த ஆயுதங்கள் வாங்கி குவிப்பதே மத்திய அரசின் முக்கிய இலக்காக இருக்கும் என்று மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.


இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்கவும், கொள்ளை லாபம் சம்பாதிக்கவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆயுதக் கம்பெனிகள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக, அமைச்சர் அருண்ஜெட்லி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Wednesday, 21 May 2014

அஞ்சலி . . .

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும்,
முன்னாள் மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினருமான
தோழர்.ஆர்.உமாநாத்
இன்று திருச்சி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 92.
உமாநாத் சிறு வயதிலேயே 1930-ல் நடந்த அந்நிய துணி எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர். கல்லூரியில் பயின்றபோது வேலையின்மைக்கு எதிராக கண்ணனூர் முதல் சென்னை கோட்டை வரை நடந்த பட்டினி பாதயாத்திரையில் பங்கேற்றார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் 1940 ஆம் ஆண்டு தன்னை கட்சியின் முழுநேர ஊழியராக இணைத்துக்கொண்டு தலைமறைவாக இருந்து கட்சி பணிகளை மேற்கொண்டார்.
பிரிட்டிஷ் ஆட்சியை வன்முறை மூலம் தூக்கி எறிய சதி செய்ததாக கைது செய்யப்பட்டு, சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். 9 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய உமாநாத், பல போராட்டங்கள், உண்ணாவிரதத்திற்கு தலைமை வகித்துள்ளார்.
தோழர் உமாநாத் நடத்திய உண்ணாவிரத போராட்டங்கள் மிகவும் பிரபலமானவை. பெரும் வெற்றிகளை ஈட்டியவை. 2 வாரம், 3 வாரம், 4 வாரம் என்று அவர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். உயிர் போகும் நிலைவரினும் கோரிக்கைகள் நிறைவேறாமல் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றதே இல்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை குத்தகை விவசாயிகளுக்கு பெற்றுத் தந்ததில் உமாநாத் பங்கு மகத்தானதாகும்.
7 வருடங்கள் 10 மாதங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 7 வருடங்கள் 2 மாதங்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். உமாநாத் சோவியத் யூனியன், மக்கள் சீனம், நிமேனியா, பல்கேரியா, ஆஸ்திரேலியா, ரோமாபுரி, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளுக்கு சென்றவர். கட்சி உறுப்பினராக தொடங்கி அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக தன்னை உயர்த்திக் கொண்டவர்.
தோழர் உமாநாத் இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் உழைப்பாளிகளின் உரிமைக்களுக்காக சிம்ம கர்ஜனை செய்தவர். பல தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாவதற்கு வித்திட்டவர். பல தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாவதற்கு இவரது போராட்டங்கள் உதவின.
ஆலைப் பிரச்சினை முதல் உலக பிரச்சினை வரை பொதுமக்களுக்கு புரியும் வகையில் பேசி புரிய வைப்பதில் உமாநாத் நிகரற்றவர். தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்கள் இயக்கத்தை சிஐடியு மூலம் உருவாக்கியே தீரவேண்டும் என்று உமாநாத் உறுதியாக நின்றார். பெண்களிடம் உள்ள அறியாமையையும், மூடநம்பிக்கைகளையும் விரட்டி அவர்கள் பாரதி பாடியதுபோல் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்ந்த ஞானச்செருக்கும் கொண்டவர்களாக பெண்ணுரிமைக்காக போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர் உமாநாத்.