தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 9 July 2014

செய்தித் துளிகள் . . .

ரயில்வேயில் தனியார்மய அறிவிப்பு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

ரயில்வே துறையில் அந்நிய முதலீடு மற்றும் தனியார்மயம் ஊக்குவிக்கப்படும் 
என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு AIRF பொதுச்செயலர் தோழர். சிவ்கோபால் மிஷ்ரா 
கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். 
ரயில்வேயில் தனியார்மயமாக்கல் முயற்சியை அனுமதிக்க முடியாது 
என்று அறிவித்திருக்கிறார்.

குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000
தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் – 95ன் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 
குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.1000 வழங்க முடிவு செய்திருப்பதாக 
அமைச்சர் திரு.விஷ்ணுதேவ் சாய் எழுத்துப்பூர்வமாக 
பாரளுமன்றத்தில் பதில் அளித்திருக்கிறார். 
இதன் வாயிலாக 25 லட்சம் ஓய்வூதியர்கள் 
பயனடைய இருக்கிறார்கள்.

35 பொதுத்துறை நிறுவனங்களில் தலைமை நிர்வாகிகள் இல்லை

BSNL, MRNL, NHPC, COAL INDIA உட்பட 35 பொதுத்துறை நிறுவனங்களில்
CMD, MD, CHAIRMAN போன்ற தலைமைப் பதவிகளில் நபர்கள் இல்லை 
என்று பாரளுமன்றத்தில் அமைச்சர் திரு.ராதாகிருஷ்ணன்
எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார். 
தலைமைப் பதவிகளில் தகுந்த நபர்களை நியமிக்காமல் இருப்பது
அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை 
   வெகுவாகப் பாதிக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.

ஒளிரும் பாரதம்?

கிராமப்புறங்களில்ரூ.32க்கும் நகர்புறங்களில் ரூ.47க்கும் 
குறைவாகச் செலவு செய்பவர்கள் தான் 
வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் ஏழைகள் 
என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் 
திரு.ரங்கராஜன் தலைமையிலான கமிட்டி அறிவித்துள்ளது. 
பொருந்தாத அளவுகோலை நிர்ணயித்து 
வறுமையை ஒழித்து விட்டோம் என்று 
மார் தட்டும் மடமையை எப்படி ஏற்பது? 

இதிலும் வேடிக்கை என்னவென்றால், 
இந்த அளவுகோலின் அடிப்படையில் கூட 
40 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கிறார்கள். 
நவீன பொருளாதாரம் சமூகத்திற்குத் தந்த பரிசு தான் இது.

No comments:

Post a Comment