தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Showing posts with label ஓய்வூதியம். Show all posts
Showing posts with label ஓய்வூதியம். Show all posts

Monday, 17 February 2014

Monday, 3 February 2014

சிவகங்கை மாவட்ட ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்



புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்தும்
ஒய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்
18.02.2014 அன்று நடைபெற உள்ள தர்ணா பொராட்டத்தை
சிறப்பாக நடத்துவது பற்றி விவாதிப்பதற்காக,
சிவகங்கை மாவட்ட ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் 04.02.2014 அன்று காலை 10 மணிக்கு
கண்ணதாசன் மணிமண்டபத்தின் எதிரில் உள்ள
பூமாலை வணிக வளாகத்தில் நடைபெறும்.
ஓய்வூதியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்!

தோழமையுள்ள,
V.சுப்ரமணியன்                    K.கிருஷ்ணமூர்த்தி
செயலர்                              தலைவர்

Wednesday, 1 January 2014

AIBDPA வலைப்பூ

அகில இந்திய 
BSNL மற்றும் DOT ஓய்வூதியர்கள் சங்கம், 
காரைக்குடி கிளை
தனது வலைப்பூவை மலர விட்டிருக்கிறது.

அவர்களுக்கு நமது நல் வாழ்த்துக்கள்!

Tuesday, 3 December 2013

ஓய்வூதியர்களுக்கு 78.2%



ஓய்வூதியர்களுக்கு 78.2% இணைப்புப் பலன் மற்றும் ஓய்வூதிய முரண் ஆகியவை தொடர்பாக, திருமதி ஆன்னிஸ் மொரேஸ், DoT உறுப்பினர் (நிதி) அவர்களை தோழர். ஜெயராஜ், பொதுச்செயலர் AIBDPA, தோழர். நம்பூதிரி ஆலோசகர் AIBDPA, தோழர். அனிமேஷ் மித்ரா, துணைப் பொதுச்செயலர், BSNLEU ஆகியோர் சந்த்தித்து விவாதித்தனர்.
இரண்டு கோரிக்கைகள்  தொடர்பாகவும் DoT சில விளக்கங்களைக் கேட்டுள்ளதாகவும் அதற்கான பதில் விரைவில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

Tuesday, 29 October 2013

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


AIBDPA
காரைக்குடி
78.2% பஞ்சப்படி இணைப்புடன்
ஓய்வூதியத்தை உடனடியாகத் திருத்தி அமைக்கக் கோரியும்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
BSNL ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படியை மீண்டும் வழங்கக் கோரியும்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
DoT ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000
மருத்துவப் படியாக வழங்கக் கோரியும்

25.10.2013 அன்று
மாலை 0500 மணிக்கு BSNL காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
AIBDPA மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
தோழர் A.A. ராமன் AIBDPA முன்னிலை வகித்தார்.
தோழர். M. ராதாகிருஷ்ணன், மாநில உதவிச் செயலர் AIBDPA
தோழர். M. பூமிநாதன், மாவட்டச் செயலர் BSNLEU
ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
தோழர். V. சுப்ரமணியன், மாவட்டச் செயலர், AIBDPA நன்றி நவின்றார்.






Wednesday, 23 October 2013

78.2% பஞ்சப்படியுடன் ஓய்வூதியம்



78.2% பஞ்சப்படி இணைப்புடன் கூடிய ஓய்வூதியம் தொடர்பான கீழ்க்கண்ட பரிந்துரையை DoP&PW/DPE/DoEக்கு அனுப்ப
DOT முடிவு செய்திருக்கிறது.  

2007க்கு முந்தைய ஓய்வூதியர்களுக்கு: 78.2% பஞ்சப்படியுடன் 1.1.2007 முதல் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும். பணப்பலன் 10.6.2013 முதல் வழங்கப்படும். 1.1.2007 முதல் 9.6.2013 வரைக்குமான நிலுவைத்தொகை வழங்கப்பட மாட்டாது.

2007க்குப் பிந்தைய ஓய்வூதியர்களுக்கு: அவர்களுடைய ஊதியம் 1.1.2007 முதல் 78.2% பஞ்சப்படி இணைப்புடன் NOTIONAL அடிப்படையில் திருத்தி அமைக்கப்படும். அப்படி திருத்தி அமைக்கப்பட்ட ஊதியத்தில் ஒய்வூதியம் வழங்குவதற்கு DoP&PWவிடம் CCS Pension 33 & 34 விதிகளில் தளர்ச்சி கோரப்படும். பின்னர் அவர்களது ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும். ஓய்வூதியப் பணப்பலன் 10.6.2013 முதல் வழங்கப்படும். மற்ற ஓய்வூதியப் பலன்களான விடுப்பைக் காசாக்குதல்(Leave encashment), DCRG, Commutation  ஆகிய பலன்கள் திருத்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் வழங்கப்படும். 

நன்றி: AIBSNLEA CHQ வலைதளம்