தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Showing posts with label மத்தியச் சங்கச் செய்திகள். Show all posts
Showing posts with label மத்தியச் சங்கச் செய்திகள். Show all posts

Saturday, 26 July 2014

07.08.2014 அன்று கோரிக்கை தினம்

30 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 
கூட்டு நடவடிக்கைக் குழு அறைகூவலான   
“கோரிக்கை தினத்தை” 
சக்தியாக நடத்தும்படி
அகில இந்தியச் செயலர் வலியுறுத்தியுள்ளார்.

Tuesday, 1 July 2014

செய்தித் துளிகள் . . .

01.07.2014 முதலான பஞ்சப்படி 2.9% உயர்ந்து மொத்தம் 91.3% ஆகியுள்ளது.

BSNL- MTNL இணைப்பு பற்றி தீவிர பரிசீலனையில் இருக்கும் அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் அவர்களுக்கு ஃபோரம் கடிதம் எழுதியுள்ளது. இணைப்பு பற்றிய இறுதி முடிவு எடுப்பதற்கு முன் தீர்க்கப்பட வேண்டிய நிறுவன கட்டமைப்பு தொடர்பான பிரச்சனைகளும் மனித வளப் பிரச்சனைகளும் இருப்பதால் அவை பற்றி விவாதிக்க விரைவில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரப்பட்டுள்ளது.

திரு. R.K. உபாத்யாய் பணி ஓய்வு பெற்றார். அவர் இடத்தில் திரு. A.N.RAI, புதிய CMD ஆக 3 மாதங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஓய்வூதியர்களுக்கு 78.2% பலனை உடனடியாக வழங்கக் கோரி நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி அவர்களுக்கு AIBDPA, 30.06.2014 அன்று கடிதம் எழுதியுள்ளது.

விடுபட்ட தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம், குறைந்த பட்ச ஊதியத்திற்கு உத்தரவாதம், EPF, ESI முறையாகக் கட்டப்படுவதைக் கண்காணித்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர் நல அமைச்சர் திரு. நரேந்திரசிங் தோமர் அவர்களுக்கு BSNL தற்காலிக, ஒப்பந்த ஊழியர்கள் சம்மேளனம் (BSNLCCWF) கடிதம் எழுதி உள்ளது.

Tuesday, 24 June 2014

போன் மெகானிக் தேர்வு விதிகளில் தளர்ச்சி

போன் மெகானிக் தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதியைத் தளர்த்த வேண்டும் என்று நிர்வாகத்திற்கு நமது பொதுச்செயலர் கடிதம் எழுதி உள்ளார்.


Friday, 13 June 2014

அனைவருக்கும் ரூ.200 சிம்

23.04.2014 அன்று நடைபெற்ற தேசியக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட ‘அனைத்து மூன்றாம் பிரிவு நான்காம் பிரிவு ஊழியர்களுக்கும் ரூ.200க்கான சிம்’ வழங்குவதற்கான உத்தரவு ஓரிரு நாட்களில் வரவிருக்கின்றது. இந்த உத்தரவு அலுவலகங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும்.

அமைச்சருக்குக் கடிதம்

  • இரண்டரை இலட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இரண்டரை ஆண்டுகளாய் மனித வள இயக்குநர் பதவி காலியாக இருக்கிறது.
  • இருபத்தைந்து ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனத்தில் ஆறு மாதங்களாய் நிதி இயக்குநர் பதவி காலியாக இருக்கிறது.
  • 30.06.2014ல் தலைமை மேலாண்மை இயக்குநர் ஓய்வு பெற இருக்கிறார். ஆனால், அவர் இடத்திற்கு இன்னும் நியமன உத்தரவு எவருக்கும் வழங்கப்படவில்லை.
  • நிறுவனத்தின் நிலையை உறுதிப்படுத்த முடிவுகளை எடுக்கும் முக்கியமான தலைமைப் பதவிகளில் ஆட்கள் இல்லை என்றால் எப்படி நிறுவனத்தை நிலை நிறுத்துவது?
  • எனவே, தலைமைப் பதவிகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக தகுந்த நியமனம் மூலம் நிரப்ப வேண்டும் என்று,
அமைச்சருக்கு நமது பொதுச்செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

Tuesday, 3 June 2014

புதிய அமைச்சருக்கு மனு

  • 2000ல் BSNL உருவாக்கப்பட்ட போது அரசு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
  • BSNLக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.
  • ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை திருப்பித் தர வேண்டும்.
  • புதிய துணை நிறுவனங்களை உருவாக்க வேண்டாம்.
  • காலியாக உள்ள நிர்வாக இயக்குநர்கள் பதவி நிரப்பப்பட வேண்டும்
  • வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் மட்டுமே ஓய்வூதிய பங்களிப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
  • அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் BSNL சேவையைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
  • ITS அதிகாரிகள் BSNLல் இணைய வேண்டும்.
  • ஓய்வூதியர்களுக்கு 78.2% இணைப்புப் பலன் வழங்கப் பட வேண்டும்.

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி,
BSNLEU, NFTE, BSNLMS, SNATTA, FNTO, NFTBE, AIBSNLEA, SNEA
சங்கங்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு
ஃபோரம் சார்பாக புதிய தொலைத் தொடர்பு அமைச்சருக்குக் 
கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

BSNL – MTNL இணைப்பு

BSNL – MTNL இணைப்பு தொடர்பான பிரச்சனைகளை ஆய்வதற்காக ராஜ்கோட் மத்தியச் செயற்குழுவில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழுவின் கூட்டம் 19.07.2014 அன்று காலை 10 மணிக்கு K.G..போஸ் பவன், புதுடில்லியில் நடைபெற இருக்கிறது.

Friday, 25 April 2014

பதவி பெயர் மாற்றக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

பதவிப் பெயர்களை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு 24.04.2014 அன்று கூடுவதாக இருந்தது. NFTE செயலர் தோழர்.ராஜ்பால், அவர்களுடைய மகன் இயற்கை எய்தியதை அடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tuesday, 22 April 2014

’டவர்களுக்கென்று ஒரு துணை நிறுவனம்’ என்ற போர்வையில் நிர்வாகத்தின் தனியார்மய முயற்சி !

டவர் துணை நிறுவனம் உருவாக்குதல் தொடர்பாக நிர்வாகத்தின் அறிமுகம்.

டவர்களுக்கென்று ஒரு துணை நிறுவனத்தை உருவாக்குவது தொடர்பான வரைவுத் திட்டத்தை, நிர்வாகம் 21.04.2014 அன்று தொழிற்சங்கங்களுக்கு அறிமுகப்படுத்தியது. பெரும்பான்மையான சங்கங்கள் கலந்து கொண்டன. தோழர். அபிமன்யு, தோழர். நம்பூதிரி, தோழர்.அனிமேஷ் மித்ரா தோழர், ஸ்வபன் சக்ரவர்த்தி ஆகியோர் BSNLEU சார்பாக கலந்து கொண்டனர்.


கீழ்க்கண்ட தகவல்கள் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டன.

(i)     BSNL வசம் 60000 டவர்களுக்கு மேல் இருக்கின்றன. ஆனாலும் அவைகள் மூலமாக அதிக வருமானம் ஈட்ட முடியவில்லை.
(ii)   டவர்களின் வாயிலாக மேலும் அதிக வருமானத்தை ஈட்டுவதற்காக ஒரு டவர் துணை நிறுவனத்தை உருவாக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
(iii) இதற்கான வழிகாட்டுதலுக்காக KPMG நிறுவனம் நியமிக்கப்பட்டு அது தனது அறிக்கையை அளித்துள்ளது.
(iv)     BSNL இயக்குநர்கள் குழு இதற்கான ஒப்புதலை அளித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர் குழுவின் முன் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளது.
(v) துணை நிறுவனம் உருவாக்கப்பட்ட பின், தொழில்நுட்பத்திற்காகவும் முதலீட்டிற்காகவும் அந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் இணைக்கப் படுவார்.  


இந்த தகவல்களைத் தெரிந்து கொண்ட பின், சங்கங்கள் கீழ்க்கண்டவாறு நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.


(i)   சங்கங்களைக் கலந்து ஆலோசிக்காமல், துணை நிறுவனத்திற்கு இயக்குநர்கள் குழு,  ஒப்புதல் அளித்தது தவறு என்று கடிந்துரைக்கப்பட்டது.

(ii) துணை நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் இணைக்கப்படுவார் என்பது, பங்கு விற்பனையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்றும் அது தனியார்மயமாக்கலில் போய்த்தான் முடியும், எனவே அதை ஏற்க முடியாது என்றும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.



நமது இந்த கருத்துக்கள் நிர்வாகத்தின் உரிய மேல்மட்டத்தில் எடுத்துரைக்கப்படும் என்று பொதுமேலாளர் (ஊழியர் உறவு) தெரிவித்தார்.

Friday, 21 February 2014

செய்தித் துளிகள் . . .



ஊதிய இழப்பு ஆய்விற்கான உயர்மட்டக்குழு
1.1.2007க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற
NON-EXECUTIVE மற்றும் EXECUTIVE ஊழியர்களுக்கு
ஊதிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
EXECUTIVE ஊழியர்களின் இந்தப் பிரச்சனையின் தீர்வுக்கு
ஒரு உயர்மட்டககுழு அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்தக்குழுவின் ஆய்படு பொருளில்
NON-EXECUTIVE ஊழியர்களின் ஊதிய இழப்பும் சேர்க்கப்பட்டு
தீர்வு காணப்பட வேண்டும் என்று
CMDக்கு நமது பொதுச்செயலர் கடிதம் எழுதி உள்ளார்.

அடிப்படை ஊதியத்துடன் 50% பஞ்சப்படி இணைப்பு
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்காக
7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம்.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 90% பஞ்சப்படி பெறுகிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அடுத்து தற்போது, அடிப்படை ஊதியத்துடன் 50% பஞ்சப்படி
இணைக்கப்பட உள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.
BSNL ஊழியர்களுக்கு 50% பஞ்சப்படியை
அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்
என்ற கோரிக்கையை நமது சங்கம் ஏற்கனவே எழுப்பியுள்ளது.
மிக சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்கோட் மத்தியச் செயற்குழுவிலும்
இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Monday, 17 February 2014



அனைத்துச் சங்கங்களுக்கும் அழைப்பு
ஊதியத் தேக்க நிலை,
1.1.2007க்குப் பிறகு நியமனம் பெற்ற ஊழியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பு,
நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சனை,
பரிவு அடிப்படையாலான பணி நியமனம்,
போனஸ்,
பதவிப்பெயர் மாற்றம்,
பதவி உயர்வில் உள்ள குறைபாடுகள்,
விடுபட்ட தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம்,
மீண்டும் அனைவருக்கும் LTC,
போன்ற நீண்ட நாள் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்காக
அனைவரும் கூட்டாகப் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும்
அது தொடர்பாக கலந்து ஆலோசிக்க முன் வரும் படியும்
அனைத்துச் சங்கங்களுக்கும் பொதுச் செயலர் கடிதம் எழுதி உள்ளார்.

மனித வள இயக்குநருக்குக் கடிதம்
தேங்கிக் கிடக்கும் பல்வேறு பிரச்சனைகளின் தீர்வுக்காக
நமது சங்கத்தின் வேலைநிறுத்த அறிவிப்பின் காரணமாக
நிர்வாகத்திற்கும் நமது சங்கத்திற்கும் இடையே
18.1.2013 அன்று ஏற்பட்ட உடன்படிக்கையை
மேலும் தாமதின்றி உடனடியாக நிறைவேற்றக் கோரி
மனித வள இயக்குநருக்கு நமது பொதுச் செயலர் கடிதம் எழுதி உள்ளார்.

TM தேர்வுக்கான கல்வித் தகுதியை தளர்த்த வேண்டும்
பல மாநிலங்களில் டெலிகாம் மெகானிக் கேடரில் காலி இடங்கள் இருந்தாலும்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக இருப்பதால்
RM தோழர்கள் தேர்வு எழுத முடியவில்லை.
அந்த RM தோழர்கள் ஊதியத் தேக்கநிலையையும் அடைந்து விடுகிறார்கள்.
இரண்டு பிரச்சனைகளுக்கும் ஒருகட்ட தீர்வாகக்
கல்வித்தகுதியைத் தளர்த்தி TM தேர்வு நடத்த வேண்டும்
என்று மனித வள இயக்குநருக்கு நமது பொதுச் செயலர் கடிதம் எழுதி உள்ளார்.

Friday, 7 February 2014

ஒய்வூதியர்கள் சர்வதேச தொழிற்சங்கம்



ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின்
சர்வதேச கருத்தரங்கம் பிப்ரவரி 5, 6 தேதிகளில்
பார்சிலோனாவில் நடைபெற்றது.
அதில் 30 தேசங்களில் இருந்து சார்பாளர்கள் கலந்து கொண்டனர்.
AIBDPA சார்பாக தோழர் நம்பூதிரி சார்பாளராகக் கலந்து கொண்டார்.
தோழர். க்யும் பாக்க்ஷ் தலமை தாங்கினார்.
அதில் ஓய்வூதியர்களுக்கான சர்வதேச சம்மேளனம் உருவாக்குவது
என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“சர்வதேச ஓய்வூதியர்கள் மற்றும் பணிஓய்வு பெற்றவர்களின்
சர்வதேச தொழிற்சங்கம்”
Trade Union International of Pensioners and Retirees (TUI of P&R)
என்று அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள்!