ஊதிய இழப்பு ஆய்விற்கான உயர்மட்டக்குழு
1.1.2007க்குப் பிறகு பணி நியமனம்
பெற்ற
NON-EXECUTIVE மற்றும் EXECUTIVE ஊழியர்களுக்கு
ஊதிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
EXECUTIVE ஊழியர்களின் இந்தப் பிரச்சனையின் தீர்வுக்கு
ஒரு உயர்மட்டககுழு அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்தக்குழுவின் ஆய்படு பொருளில்
NON-EXECUTIVE ஊழியர்களின் ஊதிய இழப்பும் சேர்க்கப்பட்டு
தீர்வு காணப்பட வேண்டும் என்று
CMDக்கு நமது பொதுச்செயலர் கடிதம் எழுதி உள்ளார்.
அடிப்படை
ஊதியத்துடன் 50% பஞ்சப்படி இணைப்பு
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்காக
7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டிருப்பதை அனைவரும்
அறிவோம்.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 90% பஞ்சப்படி பெறுகிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அடுத்து
தற்போது, அடிப்படை ஊதியத்துடன் 50% பஞ்சப்படி
இணைக்கப்பட உள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.
BSNL ஊழியர்களுக்கு 50%
பஞ்சப்படியை
அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்
என்ற கோரிக்கையை நமது சங்கம் ஏற்கனவே எழுப்பியுள்ளது.
மிக சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்கோட் மத்தியச் செயற்குழுவிலும்
இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.