தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 18 February 2014

மத்திய பட்ஜெட்



மத்திய இடைக்கால பட்ஜெட் மற்றும் மத்திய நிதியமைச்சர் .சிதம்பரம்
பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

* வருமானவரி விகிதத்தில் மாற்றம் இல்லை.
* ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி.
* ரூ.10 கோடி வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு 3 சதவீத கூடுதல் வரி.
* 2013-14 நிதியாண்டில் உணவுப் பயிர் உற்பத்தி 263 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* 2013-14-ல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 4.6 சதவீதம்; இது, அடுத்த ஆண்டில் 4.1 சதவீதம். வருவாய் பற்றாக்குறை 2013-14-ல் 3 சதவீதம்.
* 2012-13-ல் 88 பில்லியன் டாலர்களாக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தற்போது 45 பில்லியன் டாலர்களாக உள்ளது.
* சிறிய கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு உற்பத்தி வரி 12-ல் இருந்து 8 சதவீதமாக குறைப்பு.
* எஸ்.யு.வி. வாகனங்களுக்கு உற்பத்தி வரி 30-ல் இருந்து 24 சதவீதமாக குறைப்பு.
* பெரிய மற்றும் நடுத்தர கார்களுக்கு உற்பத்தி வரி 27-ல் இருந்து 24 சதவீதமாகவும், 24-ல் இருந்து 20 சதவீதமாகவும் குறைப்பு.
* மொபைல் போன்களுக்கான உற்பத்தி வரி 6 சதவீதமாக குறைப்பு.
* மூலதனப் பொருள்கள் மீதான உற்பத்தி வரி 12-ல் இருந்து 10 சதவீதமாக குறைப்பு.
* மார்ச் 31, 2009-க்கு முந்தைய மாணவர்களின் கல்விக் கடன்களுக்கான வட்டி செலுத்துவதில் சலுகை. இதன்மூலம் 9 லட்சம் பேர் பயனடைவர். அதாவது, 9 லட்சம் மாணவர்களின் கல்விக் கடன் வட்டியை அரசே செலுத்தும்.
* அன்னியச் செலாவணியில் 2013-14-ல் கூடுதலாக 15 பில்லியன் டாலர்கள். | 67 இந்தியர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிப்பு.
* நடப்பு நிதியாண்டில் ரூ.40,000 கோடியில் இருந்து ரூ.16,027 கோடியாக முதலீடு விலக்கல் இலக்கு (Disinvestment target) குறைப்பு. அடுத்த ஆண்டில் ரூ.36,925 கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு.
* நிர்பயா நிதிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.
* ஜனவரி இறுதி வரை 296 முதலீடுகளுக்கு ரூ.6.6. லட்சம் அனுமதி.
* 2013-14-ன் 3-வது மற்றும் 4-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.2 சதவீதம். | அரசுக் கடன் ரூ.4.57 லட்சம் கோடி.
* 2014-15 நிதியாண்டில் திட்ட செலவு ரூ.5.55 லட்சம் கோடி; திட்டமிடப்படாத செலவு ரூ.12.08 லட்சம் கோடி.
* அடுத்த நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.11,200 கோடி வழங்க ஒப்புதல்.
பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து ரூ.88,188 கோடி பங்கினைப் பெறுகிறது அரசு. | அரசு பங்குகளை பொதுமக்களுக்கு விற்பதன் மூலம் 2013-14-ம் ஆண்டில் 40,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.16,027 கோடி மட்டுமே திரட்டப்பட்டது. 2014-15-ம் ஆண்டில் ரூ.36,925 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2013- 14-ல் பொதுத் துறை நிறுவனங்களால் ரூ.2.57 லட்சம் கோடி அளவில் முதலீட்டுச் செலவு.
* கல்பாக்கம் அணு உலையில் விரைவில் 500 மேகாவாட் மின் உற்பத்தி; நாட்டில் புதிதாக 7 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
* 2014-15-ல் தேசிய சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் 4 மிகப் பெரிய மின் திட்டங்கள்.
* வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் நிதியாக ரூ.1,200 கோடி.
* இதுவரை 57 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் திட்டம் நிறைவேற அரசு உறுதி. தற்போதைக்கு மானிய சிலிண்டர் பெற ஆதார் கட்டாயம் என்ற திட்டம் நிறுத்தி வைப்பு.
* உணவு, உரம் மற்றும் எரிவாயு மானியத்துக்கு ரூ.2,46,397 கோடி.  மாநில அரசுகளுக்கான மத்திய அரசின் நிதி உதவி ரூ.3.38 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
* பாதுகாப்புத் துறைக்கு 10 சதவீதம் உயர்த்தி, ரூ.2.24 லட்சம் கோடியாக ஒதுக்கீடு. | ஆயுத போலீஸ் படையை வலுப்படுத்த ரூ.11,009 கோடி ஒதுக்கீடு.
* ராணுவத்தினருக்கு 2014—15 ஒரே பிரிவு - ஒரே ஓய்வூதியம் (ஒன் ரேங்க் - ஒன் பென்ஷன்) அறிமுகம். இதற்கு ரூ.500 கோடி கணக்கிடப்பட்டுள்ளது.
* 2014 நிதியாண்டின் ஏற்றுமதி இலக்கு 326 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது, 6.3 சதவீத உயர்வு.
* சிறுபான்மையினருக்கான வங்கிக் கணக்கு எண்ணிக்கை, 10 ஆண்டுகளில் 14,15,000-ல் இருந்து 43,53,000 ஆக உயர்வு.
* கடன் மேலாண்மை அலுவலகம் அமைக்க அரசு பரிந்துரை. இது, அடுத்த நிதியாண்டில் இருந்து இயங்கும்.
* சேவை வரி விதிக்கும் வேளாண் பொருட்கள் பட்டியலில் இருந்து அரிசிக்கு விலக்கு. அதாவது, அரசி மீதான சேவை வரி ரத்து.
* ரத்த சேமிப்பு வங்கிகளுக்கு சேவை வரியில் இருந்து முழு விலக்கு.
* தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நேரடி மானியத் திட்டத்தில் உள்ள குறைபாடு நீக்கப்பட்டு மீண்டும் நடைமுறைக்கு வரும்.
* சமூக நீதி அமைச்சகத்துக்கு ரூ.6730 கோடி ஒதுக்கீடு.
* பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு.
* நாட்டில் 14 கோடி மக்கள் வறுமை கோட்டில் இருந்து நிலை மேம்படுத்தப்பட்டுள்ளனர்.
* சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு ரூ.33,725 கோடி.
* மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு ரூ.67,398 கோடி.
* சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கு ரூ.6730 கோடி.
* குடிநீர் மற்றும் வடிகால் அமைச்சகத்துக்கு ரூ.15,260 கோடி ஒதுக்கீடு.
* மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.21,000 கோடி ஒதுக்கீடு.
* வீட்டு வசதித் துறை அமைச்சகத்துக்கு ரூ.6000 கோடி.
* ரயில்வே துறைக்கான ஒதுக்கீடு, ரூ.29,000 கோடியாக உயர்வு.
* உணவு மானியத்துக்கு ரூ.1,16,000 கோடி ஒதுக்கீடு.
* மானியங்களுக்கு ரூ.2,46,397 கோடி ஒதுக்கீடு.
* தேசிய திறன் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு கூடுதலாக ரூ.1000 கோடி.
* தேசிய வேளாண் - வனக் கொள்கைக்கு அரசு ஒப்புதல்.
* தற்போது நாட்டில் 3.9 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலைகள் உள்ளன.
* கல்விக்கு ரூ.79,541 கோடியை அரசு செலவிட்டுள்ளது.
* 236 மில்லியன் டன் உணவுப் பயிர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 554 மில்லியன் டன் நிலக்கிரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
* உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 67 சதவீத மக்கள் பயனடைகின்றனர்.
* உலகின் மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.