தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 21 February 2014

அஞ்சலி




கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் பார்வதி கிருஷ்ணன் வியாழனன்று காலமானார். அவருக்கு வயது 95. கோயம்புத்தூரில் வசித்து வந்த தோழர் பார்வதி கிருஷ்ணன், உடல் நலக்குறைவு காரணமாக வியாழனன்று காலமானார். 

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் பார்வதி கிருஷ்ணன் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்த குழுவில் தோழர்கள் என்.கே.கிருஷ்ணன், பூபேஷ் குப்தா, மோகன் குமாரமங்கலம், ஜோதிபாசு, பி.என்.ஹக்சர் ஆகியோர் இருந்தனர்.

அவர் தாயகம் திரும்பியவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் ஆலோசனைப் படி அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் தென்னிந்திய அமைப்பை உருவாக்கும் பொறுப்பினை ஏற்று செயல்பட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல அடக்குமுறைகளுக்கு ஆளானார். ஏஐடியுசி-யின்பல்வேறு பொறுப்புகளையும் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுள் ளார்.

கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து கட்சியை வழி நடத்தியுள்ளார். 1974-ம் ஆண்டு ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்ற போது அதன் போராட்டக்குழு உறுப்பினராக இருந்து போராட்டத்தை வழி நடத்தினார். இப்போராட்டத்தின் போது அவர் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிக்குழுவில் இடம்பெற்று சோவியத் யூனியன், யூகோஸ் லேவியா உட்பட பல வெளிநாடு களுக்கு பயணங்கள் மேற்கொண்டார்.பெண்கள் பிரச்சனைகளுக்காக, குறிப்பாக உழைக்கும் பெண்களின் பிரச்சனை களுக்காகவும் வீதியில் இறங்கிப் போராடி யிருக்கிறார். நாடாளுமன்றத்திலும் அவர் களுக்காக குரலெழுப்பி பல உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.