தலைப்புச் செய்திகள்
Saturday 28 June 2014
Thursday 26 June 2014
Wednesday 25 June 2014
உயரும் ரயில் கட்டணம்
உயர்த்தப்பட்ட
ரயில் பயணிகள் கட்டணஉயர்வு ஜூன் 25 முதல் அமலுக்கு வருகிறது. ஜூன் 25 அல்லது அதற்குப்
பிந்தைய தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்தபயணிகளுக்கும் இந்த கட்டண உயர்வு
பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம், பயணம்
தொடங்குவதற்கு முன்பு டிக்கெட் பரிசோதகர்கள் அல்லது முன்பதிவு அதிகாரிகள் மூலம்
பயணிகளிடம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இதற்காக முக்கிய
ரயில் நிலையங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே
தெரிவித்துள்ளது.
இன்று ரயில்
மறியல்
கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்திநாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள்
மற்றும் பல்வேறு
அமைப்புகள், ரயில் மறியல்
உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் புதனன்று வாலிபர், மாதர், மாணவர் சங்கங்கள்
ரயில் மறியலில் ஈடுபடுகின்றன.
ஆயுத வியாபாரிகளுக்கு ஒரு நற்செய்தி!
வரவிருக்கும் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு தாரளமாக
இருக்கும் என்றும் நாட்டின் பலத்தை வலுப்படுத்த ஆயுதங்கள் வாங்கி குவிப்பதே மத்திய
அரசின் முக்கிய இலக்காக இருக்கும் என்று மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் நிதி
மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.
இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்கவும், கொள்ளை லாபம் சம்பாதிக்கவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய
நாடுகளின் ஆயுதக் கம்பெனிகள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், அவர்களை
மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக, அமைச்சர் அருண்ஜெட்லி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Tuesday 24 June 2014
Thursday 19 June 2014
புதிய ஊழியர்கள் நியமனம் தேவை!
8100 ஊழியர்கள்
ஓய்வு பெற இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு 7200 புதிய
ஊழியர்களை நியமனம் செய்யப் போவதாக SBI சேர்மன் அறிவித்துள்ளார்.
|
BSNLன்
நிலை என்ன?
|
ஆண்டு
தோறும் 10000க்கும்
மேல் ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள். BSNL உருவாகும்போது இருந்த மூன்றரை லட்சம் ஊழியர்கள்
எண்ணிக்கை தற்போது இரண்டரை லட்சமாகக் குறைந்துள்ளது. ஆனால் புதிய ஊழியர்கள் நியமனம்
கிடையாது.
|
திறமையான
திருப்திகரமான சேவைக்குப் போதுமான ஊழியர்கள் தேவை என்பதை BSNL புரிந்து கொள்ளாமலும் அதைப் பற்றி அக்கறையின்றி இருப்பதும்
கண்டனத்திற்குரியது.
|
Friday 13 June 2014
அனைவருக்கும் ரூ.200 சிம்
23.04.2014 அன்று நடைபெற்ற தேசியக் குழுக் கூட்டத்தில்
விவாதிக்கப்பட்ட ‘அனைத்து மூன்றாம் பிரிவு நான்காம் பிரிவு ஊழியர்களுக்கும் ரூ.200க்கான
சிம்’ வழங்குவதற்கான உத்தரவு ஓரிரு நாட்களில் வரவிருக்கின்றது. இந்த உத்தரவு அலுவலகங்களில்
பணி புரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும்.
அமைச்சருக்குக் கடிதம்
- இரண்டரை இலட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இரண்டரை ஆண்டுகளாய் மனித வள இயக்குநர் பதவி காலியாக இருக்கிறது.
- இருபத்தைந்து ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனத்தில் ஆறு மாதங்களாய் நிதி இயக்குநர் பதவி காலியாக இருக்கிறது.
- 30.06.2014ல் தலைமை மேலாண்மை இயக்குநர் ஓய்வு பெற இருக்கிறார். ஆனால், அவர் இடத்திற்கு இன்னும் நியமன உத்தரவு எவருக்கும் வழங்கப்படவில்லை.
- நிறுவனத்தின் நிலையை உறுதிப்படுத்த முடிவுகளை எடுக்கும் முக்கியமான தலைமைப் பதவிகளில் ஆட்கள் இல்லை என்றால் எப்படி நிறுவனத்தை நிலை நிறுத்துவது?
- எனவே, தலைமைப் பதவிகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக தகுந்த நியமனம் மூலம் நிரப்ப வேண்டும் என்று,
அமைச்சருக்கு
நமது பொதுச்செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
Friday 6 June 2014
Tuesday 3 June 2014
புதிய அமைச்சருக்கு மனு
- 2000ல் BSNL உருவாக்கப்பட்ட போது அரசு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
- BSNLக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.
- ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை திருப்பித் தர வேண்டும்.
- புதிய துணை நிறுவனங்களை உருவாக்க வேண்டாம்.
- காலியாக உள்ள நிர்வாக இயக்குநர்கள் பதவி நிரப்பப்பட வேண்டும்
- வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் மட்டுமே ஓய்வூதிய பங்களிப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
- அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் BSNL சேவையைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
- ITS அதிகாரிகள் BSNLல் இணைய வேண்டும்.
- ஓய்வூதியர்களுக்கு 78.2% இணைப்புப் பலன் வழங்கப் பட வேண்டும்.
என்ற கோரிக்கைகளை
வலியுறுத்தி,
BSNLEU,
NFTE, BSNLMS, SNATTA, FNTO, NFTBE, AIBSNLEA, SNEA
சங்கங்கள்
கையெழுத்திட்ட கோரிக்கை மனு
ஃபோரம்
சார்பாக புதிய தொலைத் தொடர்பு அமைச்சருக்குக்
கடிதம்
வழங்கப்பட்டுள்ளது.
BSNL – MTNL இணைப்பு
BSNL – MTNL இணைப்பு தொடர்பான பிரச்சனைகளை ஆய்வதற்காக ராஜ்கோட் மத்தியச்
செயற்குழுவில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழுவின் கூட்டம் 19.07.2014
அன்று காலை 10 மணிக்கு K.G..போஸ் பவன், புதுடில்லியில்
நடைபெற இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)