தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Friday, 21 February 2014

அஞ்சலி




கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் பார்வதி கிருஷ்ணன் வியாழனன்று காலமானார். அவருக்கு வயது 95. கோயம்புத்தூரில் வசித்து வந்த தோழர் பார்வதி கிருஷ்ணன், உடல் நலக்குறைவு காரணமாக வியாழனன்று காலமானார். 

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் பார்வதி கிருஷ்ணன் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்த குழுவில் தோழர்கள் என்.கே.கிருஷ்ணன், பூபேஷ் குப்தா, மோகன் குமாரமங்கலம், ஜோதிபாசு, பி.என்.ஹக்சர் ஆகியோர் இருந்தனர்.

அவர் தாயகம் திரும்பியவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் ஆலோசனைப் படி அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் தென்னிந்திய அமைப்பை உருவாக்கும் பொறுப்பினை ஏற்று செயல்பட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல அடக்குமுறைகளுக்கு ஆளானார். ஏஐடியுசி-யின்பல்வேறு பொறுப்புகளையும் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுள் ளார்.

கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து கட்சியை வழி நடத்தியுள்ளார். 1974-ம் ஆண்டு ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்ற போது அதன் போராட்டக்குழு உறுப்பினராக இருந்து போராட்டத்தை வழி நடத்தினார். இப்போராட்டத்தின் போது அவர் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிக்குழுவில் இடம்பெற்று சோவியத் யூனியன், யூகோஸ் லேவியா உட்பட பல வெளிநாடு களுக்கு பயணங்கள் மேற்கொண்டார்.பெண்கள் பிரச்சனைகளுக்காக, குறிப்பாக உழைக்கும் பெண்களின் பிரச்சனை களுக்காகவும் வீதியில் இறங்கிப் போராடி யிருக்கிறார். நாடாளுமன்றத்திலும் அவர் களுக்காக குரலெழுப்பி பல உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

Wednesday, 30 October 2013

அயர்வறியாப் போராளி தோழர் எம்.தங்கராஜ்



உத்தப்புரம் தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட பல்வேறு சமூகக்கொடுமைகளுக்கு எதிராக போராடியவரும், பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டாமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் தலித் தலைவர்கள் தேர்தலின் மூலம் பொறுப்பேற்கும் வகையில் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு முன்னணியில் நின்றவருமான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் தோழர் எம்.தங்கராஜ்  சாலை விபத்தில் திங்களன்று காலமானார்.
அவருக்கு வயது 51. மதுரை அருகே உள்ள திருமங்கலம் பகுதியில் கட்சிப்பணியாற்றி விட்டு அக்-27 ம் தேதி சொந்த ஊருக்குத் திரும்பும் போது செக்கானூரணி அருகே உள்ள சிக்கம்பட்டியில் தோழர் தங்கராஜ் சாலைவிபத்தில் சிக்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில் திங்களன்று நள்ளிரவு அவர் மரணமடைந்தார்.
வாலிபர் இயக்கத்திலிருந்து: தோழர் எம்.தங்கராஜ், கருமாத்தூர் அருகே உள்ள நத்தப்பட்டியைச் சேர்ந்த மாயாண்டி, மாயக்காள் ஆகியோரின் மகனாவார். 8 ஆம் வகுப்பு வரை படித்த அவர், ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் இணைந்து தனது இடதுசாரி இயக்கப்பணியைத் துவக்கிய அவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உசிலம்பட்டி தாலூகா செயலாளராக பணியாற்றியுள்ளார்.
இதன் பின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத் துக்கொண்ட தங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். 
பாப்பாபட்டி,கீரிபட்டி, நாட்டாமங்கலம் ஆகிய கிராமங்கள் தலித் மக்களுக்கான ஊராட்சிகளாக இருந்த நிலையில் சாதி ஆதிக்கவெறியர்களின் காரணமாக தொடர்ந்து ஜனநாயக ரீதியாக தேர்தலை நடத்தமுடியாத நிலை இருந்து வந்தது. இந்த மூன்று கிராமங்களிலும் தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவரான தோழர் எம்.தங்கராஜ், முன்னணிப் பங்கு வகித் தார்.