தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 26 November 2015

நான் ஒரு பெருமைமிகு இந்தியன் - அமீர்கான் . . .

நாட்டில் சகிப்பற்ற தன்மை பெருகி வருவதாகவும்அதுமக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை அளிப்பதாகவும்,பிரபல இந்தி நடிகர் அமீர்கான் கூறியிருந்த நிலையில்அதற்கு எதிர்ப்பு தெரிவித்துசங்-பரிவார் கூட்டம்நாடுமுழுவதும் கூச்சலில் இறங்கியுள்ளது.அமீர்கான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்டமதவெறி அமைப்புக்கள் வெளிப்படையாகவே மிரட்டலும் விடுத்து வருகின்றன.பா..எம்.பி.யும்இந்துத்துவவெறியைக் கிளப்பும் வகையில் தொடர்ந்து பேசி வருபவருமான யோகி ஆதித்ய நாத்,” இந்தியாவை விட்டு அமீர்கான்செல்வதை ஒருவரும் தடுக்கவில்லைமேலும் நாட்டின் மக்கள் தொகையைக் குறைக்க இது உதவும்“ என்றுவிஷத்தைக் கக்கினார்.மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் அமைச்சரும்சிவசேனா தலைவருமான ராம்தாஸ் காதம், “அமீர்கான் இங்குஇருக்க விரும்பவில்லை எனில் பாகிஸ்தான் செல்லட்டும்என்று கூறினார். “இந்தியாவை தன்நாடாக உணராதவர்கள் தேசப்பற்று பற்றியும் ‘சத்யமேவ ஜெயதே’ பற்றியும் பேசக்கூடாது” என்று சிவசேனாவின்பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கம் சாடியது. “மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு வளர்ந்து வரும் புகழையும்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை;
அதன்காரணமாகவே அமீர் கானை தூண்டிவிட்டு இவ்வாறு அவர்கள் பேச வைத்துள்ளனர்” என்று பாஜக தலைவர்களில்ஒருவரான ஷாநவாஸ் ஹூசைன் விமர்சித்தார்.இந்நிலையில், ‘நாட்டில் சகிப்பற்ற தன்மை நிலவுகிறது’ என்ற தனதுகருத்தில் இப்போதும் உறுதியுடன்இருப்பதாகவும்தற்போது தனக்கு எதிராக கூச்சலிடு பவர்கள்தனது கருத்தைநிரூபித்து இருப்பதாகவும் அமீர்கான் பதிலடி கொடுத்துள்ளார்.மேலும்தான் ஒரு பெருமித இந்தியன் என்றும்,தனக்கோதன் மனைவிக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும் அவர்கூறியுள்ளார்.இதுதொடர்பாக அமீர்கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “கடந்த காலத்திலும் சரிதற்போதும்சரி நானும் என் மனைவியும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லைஎனக்குஎதிராகப் பேசுபவர்கள் எனது பேட்டியை பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது வேண்டுமென்றே தவறாக பேசுகிறார்கள்என்றுதான் சொல்ல வேண்டும்என்னை தேச எதிர்ப்பாளன் என்று அழைக்கும் அனைவருக்கும் ‘நான் ஒரு பெருமைமிகுஇந்தியன்‘ என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்இதை சொல்வதற்கு யாரின் ஒப்புதலும் தேவையில்லைஏனெனில்நான் இந்தியாவை நேசிக்கிறேன்இங்கு பிறந்தது எனது நல்வாய்ப்புநான் மனம் திறந்துபேசியதற்காகஎன்னைநோக்கி சரமாரியாக கூச்சலிட்டவர்கள் அனைவருமே நான் குறிப்பிட்ட (சகிப்புத் தன்மை குறைகிறதுஎன்ற அந்தகருத்தை தான் நிரூபித்திருக்கிறார்கள்இது என்னை வருத்தமடையச் செய்கிறதுஆனால்நான் ஏற்கெனவே கூறியகருத்துகளில் உறுதியாகஇருக்கிறேன்“ என்று அந்த அறிக்கையில் அமீர்கான் குறிப்பிட்டுள்ளார்.மேலும்இந்தியா என்றஅழகான நாட்டின் ஒருமைப்பாடுபன்முகத்தன்மைமொழிகள்கலாச்சாரங்கள்வரலாறுசகிப்புத்தன்மைஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள அமீர்கான்இவ்விஷயத்தில் தனக்கு ஆதரவாகஇருந்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்இதனிடையேஅமீர்கானுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்படவேண்டும் என்றுவழக்கறிஞர் ஒருவர் கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

Wednesday 18 November 2015

ஒப்பந்த ஊழியர்களின் அவல நிலை

ஒப்பந்த ஊழியர்களின் அவல நிலை 


 காரைக்குடி BSNL  ஒப்பந்த தொழிலாளியின் நிலை  மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதுவரை வாங்கிக் கொடிருந்த  கூலியை குறைத்ததோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே வாங்கியகூலியிலும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது .  அதனால்,

18.11.2015 அன்று காரைக்குடி BSNL, G.M. அலுவலக  வளாகத்தில் BSNLEU, NFTEBSNL, TNTCWU மற்றும் TMTCLU ஆகிய சங்கங்கள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம்  நடத்தின. BSNLEU மற்றும் NFTEBSNL ஆகிய சங்கங்களின் மாவட்டச் செயலர்கள் முறையே P.மகாலிங்கம் மற்றும் V.மாரி ஆகியோர் கூட்டுத்தலைமை வகித்தனர். 

நாகர்கோவிலில் இருந்து வந்திருந்த TNTCWU சங்கங்கத்தின் மாநில உதவிச்செயலர் தோழர் C.பழனிச்சாமி  அவர்கள் சிறப்புரையாற்றினார்.

50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் 

1)  சராசரியாக மாதத்தில் 26 தினங்களுக்கு கூலி  2) 2005 ஆம் ஆண்டிலிருந்து  பிடித்து வைக்கப் பட்டுள்ள EPF தொகையை    சம்பந்தப்பட்ட  தொழிலாளியின் கணக்கில் சேர்ப்பது 3) விடுபட்டுப்போன போனஸ் வழங்க ஏற்பாடு செய்வது 4) ESI CARD, ID CARD, WAGE SLIP வழங்குவது 

போன்ற கோரிக்கைகளுக்காக, இடையிடையே கோஷங்களையும் முழக்கினர். 
காரைக்குடி BSNL நிர்வாகத்தோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையில்,  சராசரியாக மாதத்தில் 26 தினங்களுக்கு கூலி என்கிற கோரிக்கை தவிர மற்றவைகளுக்கு ஆவன செய்வதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப்போன போனஸ் வழங்க, ஒப்பந்தக்காரர்களுக்கு கடிதம் கொடுக்கப்படும்  

Monday 9 November 2015


தீபாவளி  நல்வாழ்த்துக்கள் 

எளிதில் பற்றிக்கொள்ளும் தீ,  சாதி, மதம்  - இவைகள்
எதிலும் பற்றிக் கொள்ளாதீர்
தீப ஒளி  ஏற்றுங்கள்
தீபாவளி போற்றுங்கள்


 Image result for images for diwali in tamil






ஒப்பந்த  ஊழியர்களுக்காக  இணைந்த  போராட்டம் 

இன்று (09.11.2015) காரைக்குடி BSNL பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மதியம் 01.00 மணிக்கு  BSNLEU மற்றும் NFTEBSNL ஆகிய இரு சங்கங்களின் சார்பில் ஒப்பந்த ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது.
கோரிக்கைகள் 

BSNL நிர்வாகமே !
மத்திய அரசின்  வழிகாட்டுதலின்படி  8.33 சதவீத  போனஸ் வழங்குக 
வாரவிடுமுறை  நாட்களை தொழிலாளர்  நலச்  சட்டத்தில்  குறிப்பிட்டுள்ளதைப்  போல கணக்கிட்டு  மாதத்திற்கு  சராசரியாக  26
தினங்களுக்கு  கூலி  வழங்குக 
E.S.I., EMPLOYMENT CARD, WAGE SLIP , UAN ஆகியவற்றை  வழங்க  ஆவன செய்க 
2005 ஆம்  ஆண்டிலிருந்து  பிடித்து  வைத்துள்ள  EPF தொகையை  கணக்கில்  செலுத்த  உடனடியாக நடவடிக்கை எடு