தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 18 November 2015

ஒப்பந்த ஊழியர்களின் அவல நிலை

ஒப்பந்த ஊழியர்களின் அவல நிலை 


 காரைக்குடி BSNL  ஒப்பந்த தொழிலாளியின் நிலை  மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதுவரை வாங்கிக் கொடிருந்த  கூலியை குறைத்ததோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே வாங்கியகூலியிலும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது .  அதனால்,

18.11.2015 அன்று காரைக்குடி BSNL, G.M. அலுவலக  வளாகத்தில் BSNLEU, NFTEBSNL, TNTCWU மற்றும் TMTCLU ஆகிய சங்கங்கள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம்  நடத்தின. BSNLEU மற்றும் NFTEBSNL ஆகிய சங்கங்களின் மாவட்டச் செயலர்கள் முறையே P.மகாலிங்கம் மற்றும் V.மாரி ஆகியோர் கூட்டுத்தலைமை வகித்தனர். 

நாகர்கோவிலில் இருந்து வந்திருந்த TNTCWU சங்கங்கத்தின் மாநில உதவிச்செயலர் தோழர் C.பழனிச்சாமி  அவர்கள் சிறப்புரையாற்றினார்.

50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் 

1)  சராசரியாக மாதத்தில் 26 தினங்களுக்கு கூலி  2) 2005 ஆம் ஆண்டிலிருந்து  பிடித்து வைக்கப் பட்டுள்ள EPF தொகையை    சம்பந்தப்பட்ட  தொழிலாளியின் கணக்கில் சேர்ப்பது 3) விடுபட்டுப்போன போனஸ் வழங்க ஏற்பாடு செய்வது 4) ESI CARD, ID CARD, WAGE SLIP வழங்குவது 

போன்ற கோரிக்கைகளுக்காக, இடையிடையே கோஷங்களையும் முழக்கினர். 
காரைக்குடி BSNL நிர்வாகத்தோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையில்,  சராசரியாக மாதத்தில் 26 தினங்களுக்கு கூலி என்கிற கோரிக்கை தவிர மற்றவைகளுக்கு ஆவன செய்வதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப்போன போனஸ் வழங்க, ஒப்பந்தக்காரர்களுக்கு கடிதம் கொடுக்கப்படும்  

No comments:

Post a Comment