தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 28 October 2016

27/10/2016 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு 
செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து துணை நிறுவனம் ஆரம்பிக்கும் 
அரசின் தவறான முடிவினை எதிர்த்து அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி 
BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன்
ஆகியோர் கூட்டுத்தலைமையேற்றனர்.
SNEA மாவட்டச்செயலர் தோழர்.பாண்டியன் துவக்கி வைத்தார்.
AIBSNLEA சார்பாக தோழர்.நாகராஜன் உரையாற்றினார்.
AIBSNLOA  சார்பாக தோழர்.கணேசன் கருத்துரைத்தார்.
தோழர்.பூமிநாதன் முழக்கமிட...
NFTE கிளைச்செயலர்  தோழியர்.கார்த்திகா நன்றியுரைக்க 
ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே நமது துயரோட்டும்..
என்ற உணர்வுடன் கூட்டம் முடிவுற்றது.
இது.. துவக்கமே... தொடர்ந்து இணைந்து  போராடுவோம்...

Wednesday 26 October 2016


BSNL நிறுவனம் பாடுபட்டுக் கட்டமைத்த 
65000 செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து 
துணை நிறுவனம் என்ற பெயரில் 
தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிடும் 
மத்திய அரசின் தனியார் ஆதரவுக்கொள்கையை... 
BSNLஐக் கூறு போடும்... 
பொதுத்துறை விரோதக் கொள்கையை... 
 வன்மையாகக்   கண்டித்து 
BSNL  அனைத்து அதிகாரிகள் 
மற்றும் ஊழியர் சங்கங்கள் 
இணைந்த  நாடு தழுவிய

கண்டன   ஆர்ப்பாட்டம் 

27/10/2016 - வியாழன் - பகல் 12.00 மணி 
பொதுமேலாளர் அலுவலகம்  - காரைக்குடி.

கோபுரங்களை சாய்க்க விடமாட்டோம்...
BSNLஐ ஓய்க்க விடமாட்டோம்...
தோழர்களே... வருக...தோளுயர்த்தி வருக...
அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் 
காரைக்குடி.

Saturday 1 October 2016




ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ்

 இன்று(அக்-01) காரைக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் ஒப்பந்த ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய போனஸ் பற்றி பேச்சு வார்த்தை நடத்தி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் உடன் கூடிய தீபாவளியாக அமைய மாவட்ட சங்கம் சபதம் ஏற்றுள்ளது