தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 28 April 2016

Saturday 23 April 2016


 
              காரைக்குடி கிளை

பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்

அருமைத்தோழரே !

   காரைக்குடி கிளையின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 26.04.2016 செவ்வாய் அன்று மாலை 4 மணிக்கு காரைக்குடி G.M அலுவலக வளாகத்தில் உள்ள நமது சங்க அலுவலகத்தில் கிளைத்தலைவர் தோழர். M. மணிவாசகம் தலைமையில் நடைபெறும். காரைக்குடி SSA வின் தேர்தல் பொறுப்பாளர் தோழர். C. பழனிச்சாமி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

ஆய்படுபொருள்:

1.   தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான களப்பணிகள்
2.   தலமட்ட பிரச்சனைகள்
3.   இன்ன பிற தலைவர் அனுமதியுடன்

உறுப்பினர் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்!

தோழமையுடன்
M. மணிவாசகம்
    கிளைத்தலைவர்




வாக்குச் சாவடி ஏஜெண்டுகள்

   
  நமது சங்கத்தின் சார்பில் கீழ்கண்ட தோழர்கள் வாக்குச் சாவடி ஏஜெண்டுகளாக செயல்படுவார்கள் :

1.  காரைக்குடி        - R. கனகராஜன் TM
                     – N. குணசேகரன் TM

2.  பரமக்குடி          - S. ஜெகதீஸ்வரன் TM
                     – M. லக்ஷ்மணன் Sr.TOA

3.  சிவகங்கை        - U. குழந்தைச்சாமி TM
                     – M. தவமணி TTA

4.  ராமநாதபுரம்      - S. முனியசாமி TM
                    - D. கேசவன்  TM

வாக்கு எண்ணிக்கைப் பிரதிநியாக P. மகாலிங்கம் செயல்படுவார்.


சிறப்பாக செயலாற்ற வாழ்த்துக்கள்! – உங்கள்
செயலாலே சிறக்கட்டும் வாக்குகள்!!


Tuesday 19 April 2016

Wednesday 13 April 2016

Friday 8 April 2016

வெற்றிகரமான தர்ணா போராட்டம்

வெற்றிகரமான தர்ணா போராட்டம் 

   காரைக்குடி யில்  07.04.2016 அன்று தர்ணா போராட்டம்
 வெற்றிகரமாக நடைபெற்றது.
   மாவட்ட  துணைத்தலைவர்
 தோழர்  U.குழைந்தைச்சாமி தலைமை தாங்கினார்.
 மாவட்டச் செயலர் தோழர் P.மகாலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்
நாகர்கோவிலில் இருந்து வந்திருந்த தோழர் C.பழனிச்சாமி,
 தேர்தல் பொறுப்பாளர் KKD SSA
  சிறப்புரை ஆற்றினார்
AIBDPA சங்கம் சார்பில் அதன் மாவட்டச்செயலர்  ஓய்வுபெற்ற SDE, தோழர்.V.சுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார்  
   40 சதவிகித உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் 
   தோழர் P.ரவி,  சிவகங்கை நன்றியுரை நிகழ்த்தினார்  .
விண்ணதிரும் கோஷங்கள் முழங்கப்பட்டன 
Add caption

Add caption

Add caption

Monday 4 April 2016



 காரைக்குடியில் தர்ணாப் போராட்டம்
 

    எல்லோருக்கும் போனஸ் கேட்டால் யாருக்குமே போனஸ்கிடைக்காது என்று நிர்வாகம் சொல்லவேண்டிய பதிலைச் சொன்ன அதே NFTE சங்கம்தான்  இன்றும் நிர்வாகம் தந்துவிடுவதுபோல் சொன்ன மிகக் குறைந்த 2 DIGIT (ரூ.10 முதல் 99 வரை) போனஸைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிறது. ஆனால், நமது அகில இந்தியச் சங்கமோ குறைந்தபட்ச உற்பத்தி திறனுடன் இணைந்த ஊக்கத்தொகையாக ரூ.7000 வழங்கக் கோருகிறது. அதனை வலியுறுத்தி 07.04.2016 அன்று காரைக்குடி GM அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 05.00 மணி வரை தர்ணாப் போராட்டம் நடைபெறும்.

தலைமை :தோழர்.P.மகாலிங்கம்


சிறப்புரை : தோழர். C.பழனிச்சாமி   
                                          தேர்தல்பொறுப்பாளர் KKD SSA                   
அனைவரும் வருக! ஆதரவு தருக!!