தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Wednesday, 6 August 2014

செய்திகள் சில . . .

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு சலுகை
2.5 கோடி சொத்து மதிப்பு மட்டுமே உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு
12847 கோடி மதிப்புள்ள பிராட்பேண்ட் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக
சிஏஜி தணிக்கை செய்வதற்கு முனைந்துள்ளது.
ஆனால், DoT இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான
முகேஷ் அம்பானியின் நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோ.
பெருமுதலாளிகளின் சேவகனாக அரசுகள் செயல்படுவதின் தொடர்ச்சியே இது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை
பொதுத்துறை நிறுவன்ங்களின் பங்கு விற்பனையில்
அசுர வேகம் காட்டுகிறது, புதிய அரசு. 
HAL, RINL நிறுவனங்களின் 10% பங்குகளையும்
SAIL நிறுவனத்தின் 5% பங்குகளையும்
TCI நிறுவனத்தை ஒட்டு மொத்தமாகவும்
விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளது.
இந்த முடிவுகளை நிதிஅமைச்சர் திரு. அருண் ஜேட்லி
பாரளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாயிலாக அரசுக்கு ரூ.35792 கோடி வருமானம்
கடந்த மூன்று ஆண்டுகளில், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து
அரசுக்கு ரூ.35792 கோடி வருமானமாக வந்துள்ளது என்று
பாராளுமன்றத்தில் தொலைத்தொடர்பு அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் BSNL மற்றும் MTNL செலுத்திய தொகையும் அடங்கும்.

தொலைத்தொடர்பு நிதி நிறுவனம்
தொலைத்தொடர்பு நிதி நிதி நிறுவனம் ஒன்றை
நிர்மாணிக்கப் போவதாக பாரளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
DoTன் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய
ஒரு பொதுத் துறை நிறுவனமாக இது இருக்கும்.
தொலைத்தொடர்பு விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான
நிதி உதவிகளைச் செய்வதே இதன் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் சேவை தனியார் நிறுவனங்களுக்கே போய்ச் சேரும்
என்பதை நம்மால் அறிய முடிகிறது.

Wednesday, 12 March 2014

செய்தித் துளிகள்



நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியம்
நேரடியாக பணி நியமனம் செய்த ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பாக ஆலோசிக்க, ED (நிதி) தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு 13.03.2014 அன்று ஃபோரம் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசிக்க இருக்கிறது. ஃபோரம் சார்பில் இந்தப் பிரச்சனை தொடர்பாக விரிவான குறிப்பு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.

NON EXECUTIVE  ஊழியர் சங்கங்களின் “கூட்டு நடவடிக்கைக் குழு”
11.03.2014 அன்று தோழர்.சந்தேஷ்வர்சிங், பொதுச் செயலர், NFTE தலைமையில் BSNLMS அலுவலகத்தில் NON EXECUTIVE சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. தோழர். அபிமன்யு, பொதுச்செயலர், BSNLEU அனைவரையும் வரவேற்று NON EXECUTIVE ஊழியர்களின் பிரச்சனைகளையும் அவற்றின் தீர்வுக்கு ஒன்றுபட்ட போராட்டங்களின் அவசியத்தையும் விளக்கினார். அதற்காக ஒரு கூட்டு நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். அனைத்துச் சங்கங்களும் தோழர்.அபிமன்யுவின் முன்மொழிதலை வரவேற்றனர்.
கூட்டு நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டு
அதன் தலைவராகத் தோழர். சந்தேஷ்வர்சிங்
கன்வீனராக தோழர். அபிமன்யு
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விரிவான ஆலோசனைகளுக்குப் பின்னர்,
NON EXECUTIVE ஊழியர்களின் தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தொகுத்து நிர்வாகத்திற்கு முதல் கட்டமாக ஒரு குறிப்பினை வழங்குவது என்றும்
26.03.2014 அன்று அனைத்துச் சங்கங்களின் பொதுச்செயலர்களும் பங்கு பெறும் ஒரு தர்ணாவை கார்ப்பொரேட் அலுவலகம் முன் நடத்துவது என்றும்
அடுத்த கட்ட நடவடிக்கைகளை பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் கலந்தாலோசிப்பது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஓய்வூதியர்களுக்கு 78.2% பலன்
தோழர் நம்பூதிரி, AIBPA பொதுச்செயலர் தோழர் ஜெயராஜ், பொருளாளர் தோழர் சலாக்கி ஆகியோர் செலவினத்துறையின் இயக்குநர் திரு.விஜயகுமார்சிங் அவர்களை 10.03.2014 அன்று ஓய்வூதியர்களுக்கு 78.2% பலன் தொடர்பாகச் சந்தித்தனர்.
துறையின் ஒப்புதலுக்காக குறிப்பு அனுப்பப்பட்டு நீண்ட காலம் ஆகியும் அதன் மீதான ஒப்புதலை வழங்குவதில் ஏற்பட்டுள்ள கடும் கால தாமதத்தைச் சுட்டிக் காட்டினர்.
தனக்கு வந்த கோப்பில் சில குறிப்புகள் இருப்பதாகவும் உயர்மட்ட அதிகாரிகள் ஒப்புதல் வழங்குவதில் அந்த குறிப்புகள் தடையாக இருக்கும் என்பதால் அந்த குறிப்புகளை நீக்கி விட்டு மீண்டும் தனக்கு கோப்பினை அனுப்பும்படி கூறி இருப்பதாகவும் சாதகமான முடிவுகளை எட்ட முயற்சி செய்வதாகவும் கூறினார்.

2014 – 15 ஆண்டிற்கு GPF  வட்டி 8.7%
2014 -15ஆம் ஆண்டிற்கான GPF வட்டி விகிதம் 8.7% என்று 04.03.2014 அன்று அரசிதழ் ஆணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Wednesday, 26 February 2014

செய்தித் துளிகள் . . .




28.02.2014 அன்று அமைச்சரவைக் கூட்டம்
28.02.2014 அன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. BSNL - MTNL இணைப்பு, அவற்றின் புத்தாக்கம் மற்றும் நிதி ஆதார உதவி போன்றவற்றில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (FORUM OF BSNL UNIONS AND ASSOCIATIONS) சார்பில் இவை தொடர்பான நமது கருத்துக்கள், கோரிக்கைகள் பிரதமர், நிதி அமைச்சர், தொலைத்தொடர்பு அமைச்சர், DoT செயலர், CMD BSNL ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
நமது கோரிக்கைகள் மீது உரிய முடிவுகள் எடுக்கப்படவில்லையென்றால் நாம் போராட்டத்தைத் துவக்குவதைத் தவிர வேறு தீர்வு இல்லை.


கற்பனைக் கடன் ரத்து
BSNL நிறுவனம் உருவாக்கப்பட்டபோது, 15 ஆண்டுகாலக் கற்பிதமான கடனாக (NOTIONAL LOAN) 7500 கோடி என்று நம் மீது திணிக்கப்பட்டது. அதாவது கடன் வாங்காமலேயே கடன் வாங்கியதாகவும் அதற்கு ஆண்டுதோறும் தவணைத் தொகையும், வட்டியும், அபராத வட்டியும் கட்ட வேண்டும் என்று BSNL நிர்ப்பந்திக்கப் பட்டது. அதன்படி தற்போது கட்ட வேண்டிய நிலுவைத்தொகை 983 கோடி ஆகும்.
28.02.2014 அன்று நடைபெற இருக்கின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பாக்கிக் கடன் தொகையை ரத்து செய்ய முடிவு எடுக்கப்படலாம் என்று BUSINESS LINE பத்திரிகைக் குறிப்பு தெரிவிக்கின்றது.

Saturday, 15 February 2014

செய்தித் துளிகள் . . .



நிதி அமைச்சரின் அநீதிப் பேச்சு!
வங்கிகளின் லாபத்தை வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு மட்டும் பயன்படுத்த முடியாது, தேச வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்” என்று, (வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும் போது) நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கூறியது வடிகட்டிய ஏமாற்று வேலை.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் என்பது ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒப்பந்தம். அதை நிறைவேற்ற மறுக்கும் வங்கி நிர்வாகக் கூட்டமைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் போராடுகிறார்கள்.
வங்கி ஊழியர்கள் போராடும் போது மட்டும்,
வங்கிகளின் லாபத்தைப் பற்றிப் பேசும் அமைச்சர்,
கார்ப்பொரேட் நிறுவனங்களும் பெருமுதலாளிகளும்
வாங்கிய பல ஆயிரம் கோடி வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்து,
வங்கிகளை நட்டத்தில் தள்ளியது ஏன்?
வாராக் கடன்களை வசூலிப்பதில் சாதாரண மக்களிடம் கடுமை காட்டும் அரசு கார்ப்பொரேட்டுகளிடமும் பெருமுதலாளிகளிடமும் சரணாகதி அடைவது ஏன்?
ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராடும் போது தேச நலன் பேசும் அமைச்சர்கள்
மற்ற நேரங்களில் தேசத்தை மறந்து போவது ஏன்?


நவம்பர் 2014ல் கொல்கத்தாவில் அகில இந்திய மாநாடு
மேற்குவங்கம், கொல்கத்தா தொலைபேசி, டெலிகாம் ஃபேக்டரி, டெலிகாம் ஸ்டோர்ஸ் ஆகிய மாநிலச் சங்கங்கள் இணைந்து அகில இந்திய மாநாட்டை நவம்பர் 2014ல் கொல்கத்தாவில் நடத்துவதற்கு முன்வந்துள்ளன.
தொழிற்சங்கப் பாரம்பரியம் மிக்க மேற்கு வங்க மாநிலத்தில் மாநாடு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமையும் என்பது நிச்சயம்.


வரி ஏய்ப்பு
பன்னாட்டு நிறுவனங்கள் வரிஏய்ப்பு மூலம் அரசுக்கு எவ்வளவு நட்டத்தைத் தருகின்றன என்பது முழுமையாகத் தெரியவில்லை என்றாலும் வோடாஃபோன் நிறுவனத்தின் வரி ஏய்ப்பை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.
ஹட்ச் பங்குகளை வாங்கியதில் 13000 கோடி வரி ஏய்ப்பு.
புனேயில் அதன் BPO நிறுவனத்தை விற்றதில் 3700 கோடி வரி ஏய்ப்பு.
தற்போது முறையற்ற பரிமாற்றங்கள் காரணமாக 3000 கோடி வரிஏய்ப்பு.
சுமார் 20000 கோடி வரி ஏய்ப்பின் மூலமாக கோடி கோடியாக லாபம் ஈட்டும் இது போன்ற நிறுவனங்களுக்குத் தான் அரசு தொடர்ந்து பல சலுகைகளை வாரி வாரி வழங்குகின்றது.

IBMல் ஆட்குறைப்பு
பொருளாதாரத் தட்டுப்பாடு காரணமாக கார்ப்பொரேட் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க இருப்பதன் அறிகுறியாக, IBM நிறுவனம் 15000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. அதன் 4 லட்சம் ஊழியர்களில் 1 லட்சம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரும் பாதிப்பு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இரட்டை இலக்க வளர்ச்சி
குஜராத், பஞ்சாப், கர்நாடகா, கேரளா தொலைத்தொடர்பு மாநிலங்களில் இரட்டை இலக்க வளர்ச்சியை ப்ச்ன்ல் அடைந்துள்ளது என்று நிர்வாகத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதற்குக் காரணமான ஊழியர்கள் அதிகாரிகள் அனைவரையும் வாழ்த்துகிறோம்!
வெல்லட்டும் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மத்திய அரசு ஊழியர்களின் 48 மணி நேர வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது. ‘மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம்’ மட்டுமே மத்திய அரசு ஊழியர்களின் ஒப்பற்ற பாதுகாவலனாகத் திகழ்கிறது, அவர்களின் கோரிக்கைகளுக்காகப் போராடுகிறது. அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.


மொபைல் கட்டணம் உயரலாம்!
2G அலைக்கற்றை ஏலத்தின் வாயிலாக அரசுக்கு ரூ.61000 கோடி வருமானம் கிடைக்க உள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு? அதிக அலைக்கற்றை கட்டணத்தைக் காரணம் காட்டி அழைப்புக் கட்டணங்களை தனியார் நிறுவனங்கள் உயர்த்தப் போகின்றன. வாடிக்கையாளர்கள் மீது சுமையை அதிகரித்து தனது லாபத்தை அதிகரிக்கும் முயற்சியில் தான் கார்ப்பொரேட் நிறுவனங்கள் முனைப்பாக செயல்படுகின்றன.

ITI புனரமைப்புக்கு ரூ.4156.79 கோடி
பொதுத்துறை நிறுவனங்கள் புனரமைப்புக் குழுவின் பரிந்த்துரையின் பேரில் பிரதமர். மன்மோகன் சிங் தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ITI நிறுவனத்திற்கு ரூ.4156.79 கோடி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.