உயர்த்தப்பட்ட
ரயில் பயணிகள் கட்டணஉயர்வு ஜூன் 25 முதல் அமலுக்கு வருகிறது. ஜூன் 25 அல்லது அதற்குப்
பிந்தைய தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்தபயணிகளுக்கும் இந்த கட்டண உயர்வு
பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம், பயணம்
தொடங்குவதற்கு முன்பு டிக்கெட் பரிசோதகர்கள் அல்லது முன்பதிவு அதிகாரிகள் மூலம்
பயணிகளிடம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இதற்காக முக்கிய
ரயில் நிலையங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே
தெரிவித்துள்ளது.
இன்று ரயில்
மறியல்
கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்திநாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள்
மற்றும் பல்வேறு
அமைப்புகள், ரயில் மறியல்
உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் புதனன்று வாலிபர், மாதர், மாணவர் சங்கங்கள்
ரயில் மறியலில் ஈடுபடுகின்றன.
No comments:
Post a Comment