அனைத்துச் சங்கங்களுக்கும் அழைப்பு
ஊதியத் தேக்க நிலை,
1.1.2007க்குப் பிறகு நியமனம் பெற்ற
ஊழியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பு,
நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சனை,
பரிவு அடிப்படையாலான பணி நியமனம்,
போனஸ்,
பதவிப்பெயர் மாற்றம்,
பதவி உயர்வில் உள்ள குறைபாடுகள்,
விடுபட்ட தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம்,
மீண்டும் அனைவருக்கும் LTC,
போன்ற நீண்ட நாள் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்காக
அனைவரும் கூட்டாகப் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும்
அது தொடர்பாக கலந்து ஆலோசிக்க முன் வரும் படியும்
அனைத்துச் சங்கங்களுக்கும் பொதுச் செயலர் கடிதம் எழுதி உள்ளார்.
மனித வள இயக்குநருக்குக் கடிதம்
தேங்கிக் கிடக்கும் பல்வேறு பிரச்சனைகளின் தீர்வுக்காக
நமது சங்கத்தின் வேலைநிறுத்த அறிவிப்பின் காரணமாக
நிர்வாகத்திற்கும் நமது சங்கத்திற்கும் இடையே
18.1.2013 அன்று ஏற்பட்ட உடன்படிக்கையை
மேலும் தாமதின்றி உடனடியாக நிறைவேற்றக் கோரி
மனித வள இயக்குநருக்கு நமது பொதுச் செயலர் கடிதம் எழுதி உள்ளார்.
TM தேர்வுக்கான கல்வித்
தகுதியை தளர்த்த வேண்டும்
பல மாநிலங்களில் டெலிகாம் மெகானிக் கேடரில் காலி இடங்கள் இருந்தாலும்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக இருப்பதால்
RM தோழர்கள் தேர்வு எழுத முடியவில்லை.
அந்த RM தோழர்கள் ஊதியத் தேக்கநிலையையும் அடைந்து விடுகிறார்கள்.
இரண்டு பிரச்சனைகளுக்கும் ஒருகட்ட தீர்வாகக்
கல்வித்தகுதியைத் தளர்த்தி TM தேர்வு நடத்த வேண்டும்
என்று மனித வள இயக்குநருக்கு நமது பொதுச் செயலர் கடிதம் எழுதி
உள்ளார்.