தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday, 22 April 2014

’டவர்களுக்கென்று ஒரு துணை நிறுவனம்’ என்ற போர்வையில் நிர்வாகத்தின் தனியார்மய முயற்சி !

டவர் துணை நிறுவனம் உருவாக்குதல் தொடர்பாக நிர்வாகத்தின் அறிமுகம்.

டவர்களுக்கென்று ஒரு துணை நிறுவனத்தை உருவாக்குவது தொடர்பான வரைவுத் திட்டத்தை, நிர்வாகம் 21.04.2014 அன்று தொழிற்சங்கங்களுக்கு அறிமுகப்படுத்தியது. பெரும்பான்மையான சங்கங்கள் கலந்து கொண்டன. தோழர். அபிமன்யு, தோழர். நம்பூதிரி, தோழர்.அனிமேஷ் மித்ரா தோழர், ஸ்வபன் சக்ரவர்த்தி ஆகியோர் BSNLEU சார்பாக கலந்து கொண்டனர்.


கீழ்க்கண்ட தகவல்கள் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டன.

(i)     BSNL வசம் 60000 டவர்களுக்கு மேல் இருக்கின்றன. ஆனாலும் அவைகள் மூலமாக அதிக வருமானம் ஈட்ட முடியவில்லை.
(ii)   டவர்களின் வாயிலாக மேலும் அதிக வருமானத்தை ஈட்டுவதற்காக ஒரு டவர் துணை நிறுவனத்தை உருவாக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
(iii) இதற்கான வழிகாட்டுதலுக்காக KPMG நிறுவனம் நியமிக்கப்பட்டு அது தனது அறிக்கையை அளித்துள்ளது.
(iv)     BSNL இயக்குநர்கள் குழு இதற்கான ஒப்புதலை அளித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர் குழுவின் முன் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளது.
(v) துணை நிறுவனம் உருவாக்கப்பட்ட பின், தொழில்நுட்பத்திற்காகவும் முதலீட்டிற்காகவும் அந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் இணைக்கப் படுவார்.  


இந்த தகவல்களைத் தெரிந்து கொண்ட பின், சங்கங்கள் கீழ்க்கண்டவாறு நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.


(i)   சங்கங்களைக் கலந்து ஆலோசிக்காமல், துணை நிறுவனத்திற்கு இயக்குநர்கள் குழு,  ஒப்புதல் அளித்தது தவறு என்று கடிந்துரைக்கப்பட்டது.

(ii) துணை நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் இணைக்கப்படுவார் என்பது, பங்கு விற்பனையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்றும் அது தனியார்மயமாக்கலில் போய்த்தான் முடியும், எனவே அதை ஏற்க முடியாது என்றும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.



நமது இந்த கருத்துக்கள் நிர்வாகத்தின் உரிய மேல்மட்டத்தில் எடுத்துரைக்கப்படும் என்று பொதுமேலாளர் (ஊழியர் உறவு) தெரிவித்தார்.

No comments:

Post a Comment