தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday, 21 April 2014

சீர்மிகு கோவையில் சிறப்புக் கருத்தரங்கம்


ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின்படி
தமிழ் மாநில சங்கம் சார்பாக திறந்த வெளி கருத்தரங்கம்
மாநில தலைவர் தோழர் K.மாரிமுத்து தலைமையில்
கோவை மத்திய தொலைபேசி நிலைய வளாகத்தில்
மிக சிறப்பாக நடைபெற்றது.

வந்திருந்த அனைவரையும்
கோவை மாவட்ட செயலர் தோழர் ராஜேந்திரன் 
வரவேற்று உரை ஆற்றினார். 
மத்திய தொழிற்சங்கங்களின் 10 அம்ச கோரிக்கைகளும்,
அதற்கான போராட்டங்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய
நமது மாநில செயலர் தோழர் S செல்லப்பா அவர்கள்

தன் உரையில் பொதுத்துறை உருவான வரலாற்றையும்,
பொதுத்துறை நிறுவனங்கள் தன் லாபத்தில் அரசுக்கு அளித்த
மிக பெரிய பங்களிப்பையும் சுட்டி காட்டினார்.
உலகமயமாக்கல், தனியர்மயமாக்கல் கொள்கையை அமல்படுத்தும்
தற்போது உள்ள காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும்
அதற்கு முந்திய  பிஜேபி தலைமையிலான
தேசிய ஜனநாய கூட்டணி  அரசும்
பொது துறையை சீரழிக்கும் கொள்கையை கடைபிடிப்பதையும்
அதை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் 1991 முதல் இதுவரை நடத்திய
16 வேலைநிறுத்த போராட்டங்களிலும் நமது BSNLEU சங்கம்
பங்கேற்றதின் விளைவாகத்தான் இன்று வரை
1% பங்குகள்கூட விற்கப்படாமல் நமது BSNL நிறுவனம்
காக்கப்பட்டு உள்ளதை நினைவூட்டினார்.
மேலும் ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியமாக
ரூபாய் 10,000/- வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்
10 அம்ச கோரிக்கையில் உள்ளதை சுட்டி காட்டினார்.
மத நல்லிணக்கமும் தொழிலாளி வர்க்க கடமையும் என்ற தலைப்பில்
உரை நிகழ்த்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்
மாநில தலைவர்  தோழர் P சம்பத்

தன் உரையில் இந்தியாவின் பிரிவினைக்கு காரணமான
மதவாத சக்திகளின் போக்கை வரலாற்று சான்றுகளுடன் சுட்டி காட்டினார். தேச தந்தை மகாத்மாவின் படுகொலைக்கு காரணமான
மதவாத சக்திகள் மீண்டு எழுவது
தேச நலனுக்கு  மிக ஆபத்து என்பதையும்,
இந்தியாவில் மதவாத சக்திகளுக்கு எதிராக
உறுதியாக போராடக்  கூடிய ஒரே அமைப்பு
இடதுசாரிகள் மட்டுமே என்பதை அவர் ஆணித்தரமாக கூறினார்.
பாபரி மசூதி தாக்கபட்ட நேரத்தில்
இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் மட்டுமே
சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் நடைபெறவில்லை
என்பதை அவர் கூறினார்.
அதன்பின் தாராள மயமாக்கல் கொள்கையும்,
தொலை தொடர்பு கொள்கையும் என்ற தலைப்பில்
உரையாற்றிய நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள்

தாராளமய கொள்கையால், பொதுதுறை நிறுவனங்கள்
எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதையும், இக்கொள்கையால்
அரசு துறையில் ஊழல் புரையேடி போகும் அவலத்தையும் சுட்டி காட்டினார். கடந்த 2014 பிப்ரவரி மாதம் முதல்
30,000 கோடி ரூபாய் அந்நிய நாட்டு பணம்
இந்திய பங்கு சந்தையில் முதலீடாக கூடியதன் நோக்கம் பற்றியும்,
குஜராத் மாநிலத்தில் பெண்கள் பெருமளவில்
ரத்த சோகை நோயால்  அவதிப்படுவதையும்,
அந்த மாநில அரசு தினமும் 10 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வறுமை கோட்டிற்கு மேல் வாழ்வதாக கூறுவதின் 
அவலத்தையும் சுட்டி காட்டினார்.
கார்போரேட்  நிறுவனங்களும், அவைகளின் பெரும்பாலான ஊடகங்களும்  மோடியை தூக்கி நிறுத்துவதன் நோக்கத்தை அவர்   எடுத்துரைத்தார்.
ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின்படி
அனைத்து மாநிலங்களிலும் இக்  கருத்தரங்கம்
வெற்றிகரமாய்   நடைபெறுவதை சுட்டி காட்டினார்.
நிலுவையில் உள்ள  கோரிக்கைகளுக்காக
அனைத்து சங்கங்களும் இணைந்து போராட உள்ள சூழலையும்
அவர் கூறினார்.

தோழர் வெங்கட்ராமன் நன்றியுரை கூற கருத்தரங்கம் இனிதே முடிவுற்றது.

No comments:

Post a Comment