தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday, 23 October 2013

78.2% பஞ்சப்படியுடன் ஓய்வூதியம்



78.2% பஞ்சப்படி இணைப்புடன் கூடிய ஓய்வூதியம் தொடர்பான கீழ்க்கண்ட பரிந்துரையை DoP&PW/DPE/DoEக்கு அனுப்ப
DOT முடிவு செய்திருக்கிறது.  

2007க்கு முந்தைய ஓய்வூதியர்களுக்கு: 78.2% பஞ்சப்படியுடன் 1.1.2007 முதல் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும். பணப்பலன் 10.6.2013 முதல் வழங்கப்படும். 1.1.2007 முதல் 9.6.2013 வரைக்குமான நிலுவைத்தொகை வழங்கப்பட மாட்டாது.

2007க்குப் பிந்தைய ஓய்வூதியர்களுக்கு: அவர்களுடைய ஊதியம் 1.1.2007 முதல் 78.2% பஞ்சப்படி இணைப்புடன் NOTIONAL அடிப்படையில் திருத்தி அமைக்கப்படும். அப்படி திருத்தி அமைக்கப்பட்ட ஊதியத்தில் ஒய்வூதியம் வழங்குவதற்கு DoP&PWவிடம் CCS Pension 33 & 34 விதிகளில் தளர்ச்சி கோரப்படும். பின்னர் அவர்களது ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும். ஓய்வூதியப் பணப்பலன் 10.6.2013 முதல் வழங்கப்படும். மற்ற ஓய்வூதியப் பலன்களான விடுப்பைக் காசாக்குதல்(Leave encashment), DCRG, Commutation  ஆகிய பலன்கள் திருத்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் வழங்கப்படும். 

நன்றி: AIBSNLEA CHQ வலைதளம்


No comments:

Post a Comment