தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday, 4 October 2013

JCM



BSNL உதயமாகி இதுவரை
28 தேசீயக் கவுன்சில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
29வது தேசீயக் கவுன்சில் கூட்டம்
ஒரு புதிய பரிமானத்துடன்
ஒரு புதிய அணுகுமுறையுடன் நடைபெற இருக்கிறது.
80% ஊழியர்களின் சார்பாக
முதன்மைச் சங்கமான BSNLEU
அடுத்த சங்கமான NFTE ஆகிய சங்கங்களின்
பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

தேசீய அளவில் தீர்வு காணப்பட வேண்டிய
ஊழியர்கள் பிரச்சனைகள் ஏராளம்.
அவைகளைப் பட்டியலிட்டு
ஏற்கனவே போராட்டக் களத்தில் இருக்கிறது, BSNLEU.
ஆர்ப்பாட்டம், தர்ணா ஆகிய போராட்டங்களை முடித்து
வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வேளையில்
நிர்வாகத்தின் அழைப்புக்கு இணங்க
முதற்கட்ட பேச்சுவார்த்தை முடித்து
9ம் தேதி இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கும் தயாராக இருக்கிறது.
பேச்சு வார்த்தையில் பலனில்லை எனில்
25.10.2013 அன்று வேலை நிறுத்தம் என்று அறிவிப்போடு
களத்தில் நிற்கிறது BSNLEU.

இந்த சூழ்நிலையில் முதன்மை
மற்றும் அடுத்த சங்கங்களின் பிரதிநிதிகள்
பங்கேற்கும் தேசீயக் கவுன்சில் கூட்டம்
அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.
கூட்டு பேர சக்தியை மேலும் வலுவாகப் பிரயோகப் படுத்த
புதிய வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.

காரைக்குடி தலமட்டக்குழுவும் 29.10.2013 அன்று கூட இருக்கின்றது.
தேசீய அளவிலும் தலமட்டத்திலும்
புதிய வாய்ப்புகளை உருவாக்கி
ஊழியர்கள் நலனுக்காக பாடுபடுவோம்!
ஒற்றுமையைக் கட்ட பாடுபடுவோம்!
ஒன்றுமையை கட்டி பாடுபடுவோம்!


No comments:

Post a Comment