தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 4 October 2013

டிசம்பரில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நாளை தயாரிப்பு மாநாடு: மத்திய அரசு ஊழியர் சம்ளேனம் அறிவிப்பு



மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அமைப்பு மற்றும் வேலை நிறுத்த தயாரிப்பு மாநாடு சனிக்கிழமையன்று (அக்.5) சென்னையில் நடைபெறுகிறது. இது குறித்து சம்மேள னத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.துரைப்பாண்டியன் வியாழனன்று (அக்.3) செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:

மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்களுக்கும் ஒரு முறை ஊதிய மாற்றம் செய்யப்படுகிறது. மத்தியஅரசு ஊழியர் களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் செய்யப்படுகிறது.1.1.2011 முதல் 7வது ஊதியக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக மத்திய அரசு 7வது ஊதியக் குழு அமைத்துள்ளது.

மேலும், அக்குழுவின் முடிவுகள் 2016 ஜனவரி மாதம் முதல் அமலாக்கப்படும் என்று அறி வித்துள்ளது. 7வது ஊதியக்குழு பரிந் துரைகளை 1.1.2011 தேதியி லிருந்து அமல்படுத்த வேண்டும். 50 விழுக்காடு பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து நிதிப் பயன்களையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை திசை திருப்பும் வகை யில் அரசின் அறிவிப்பு உள்ளது.

எனவே, மேற்கண்ட கோரிக்கைகளோடு 3 லட்சம் கிராம அஞ்சல் துறை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, அவர்களை 7வது ஊதியக்குழு வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓராண்டு காலியாக இருந்தால் அந்த பணியிடங்களை நிரப்பத் தேவை யில்லை என்ற அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும், பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வு பெறுவதற்குள் குறைந்தது 5 பதவி உயர்வு வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் காலவரையரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடை பெற உள்ளது.இதனையொட்டி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் அக்.5 அன்று சென்னை தி.நகரில் உள்ள ஜெர்மன் ஹாலில் வேலை நிறுத்த தயாரிப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment