தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 22 October 2013

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உரிய தேதிகளில் மாத ஊதியம் - LABOUR ENFORCEMENT OFFICER ஆய்வுதமிழ் மாநில ஒப்பந்த தொழிலாளர் சங்கமும்
BSNLEU தமிழ் மாநில சங்கமும் இணைந்து
ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில்  ஊதியம் வழங்குவது,
EPF, ESI ஆகியவற்றை
முறையாக தொழிலாளர்களின் கணக்கில் கட்டுவது
போன்ற பிரச்சனைகளை
நிர்வாகத்துடனும் தொழிலாளர் நல அதிகாரிகளுடனும்
விவாதித்து வருகிறது.

அதன் விளைவாக
BSNL காரைக்குடி மாவட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு
உரிய தேதிகளில் ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை
21.10.2013 அன்று தொழிலாளர் நல அமலாக்க அதிகாரி
(LABOUR ENFORCEMENT OFFICER)
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்திற்கு வந்திருந்து
ஆய்வு செய்தார்.
ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் விசாரனை நடத்தி
அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
வாக்கு மூலங்களையும் பெற்றிருக்கிறார்.
நிர்வாகத்திடமும் விசாரனை நடத்தினார்.
உரிய தேதிகளில் ஊதியம் வழங்கப்படாததை
பதிவு செய்து கொண்டார்.
ஒப்பந்தகாரர்களின் விவரங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டு
அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தேசித்துள்ளார்.

இவை தொடர்பாக இரண்டு மாநிலச் சங்கங்களுக்கும்
உரிய தகவல்களை நமது மாவட்டச் சங்கம் வழங்கியிருக்கிறது.
தொடர்ந்து பரிசீலித்து
ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதிகளில் ஊதியம் கிடைப்பதை
உறுதி செய்வோம்!

No comments:

Post a Comment