தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday, 1 October 2013

முதியோர் தினம் - அக்டோபர் 1



முதுமை என்பது வெகு
தொலைவில் இல்லை,
நம்மை வந்து அரவணைப்பதற்கு..

தள்ளாமை என்பது
வயோதிகத்தின் வெளிப்பாடு.

நம்மை அரவணைத்த
கைகளை நாம் அரவணைக்க
வேண்டிய நேரம்
பிறப்பில் இருந்து வாலிப
வயதுவரை நம்மை
செம்மைப் படுத்திய
அவர்களது வாழ்வை
சீரழிய விடலாமா ?

பாசத்திற்காக ஏங்குபவர்கள்
உடம்பு தளர்ந்தாலும்
மனதை தளர விடாதவர்கள்

தன்னிடம் உள்ள அனைத்தையும்
உன்னிடம் தந்தவர்கள், தனக்காக
எதுவும் வைத்துக்கொள்ளாமல்.

அவர்களுக்கு வசதி வாய்ப்பை
கொடுக்க முடியாவிட்டாலும்
உன் அருகில் வைத்துக் கொள்
அதுவே அவர்களுக்குள் யானை
பலம் வந்தது போல் தோன்றும்.

 
நீ ஜனித்த பொழுது அவர்கள்
அடைந்த ஆனந்தத்திற்கு
அளவே இல்லை.

இப்பொழுது அவர்கள்
குழந்தைகளுக்கு சமம்.

கவனித்துக் கொள்ள வேண்டியது
நம் கடமை அல்லவா?
முதுமையை போற்றுவோம்
முதியவர்களுக்கு துணையாய் இருப்போம்


No comments:

Post a Comment