தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 8 October 2013

பட்டுக்கோட்டையின் பாட்டு - அது பதினெட்டுச் சுவைக் கூட்டு!




ஐந்தே ஆண்டுகளில் அமரத்துவப் பாடல்களை
அள்ளி வழங்கிய பட்டுக்கோட்டையின்
நினைவு நாள் – இன்று.

உல்லாசமாய் ஊர் சுற்றித் திரிந்த திரைப்பாடல்களை
உழைப்பவர் பக்கம் திசை திருப்பியவன்;

காதலை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்த காலத்தில்
உழைப்பவர் அவலத்தை ஊருக்குச் சொன்னவன்;

இலக்கின்றி அலைந்த இசைப்பாடல்களுக்குள்
இலட்சியத்தைப் புகுத்தியவன்;

அமைதியாய் முனகிக் கொண்டிருந்த வரிகளில்
முருக்கேற்றி கொள்கை முழக்கமிட்டவன்;
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

அவனது மரணம் விட்டுச் சென்ற வெற்றிடம்
அப்படியே இருக்கிறது இன்றும் - நிரப்பப் படாமல்!

காதலைச் சொல்கிறேன் என்று
காமத்தை உச்சரிக்கிறார்கள், இன்று.

பிறள் நெறியே வெற்றிக்கான நடைமுறை என்று -
கூச்சமின்றி கூவி விற்கிறார்கள்.

இவர்களின் இடுப்பொடிக்கும்
இன்னுமொரு பட்டுக்கோட்டையே
இன்றைய தேவை.

No comments:

Post a Comment