நடப்பு நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்டு) மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ரூ.4.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முழு நிதி ஆண்டிற்கு மதிப்பிடப்பட்ட தொகையில் (ரூ.5.42 லட்சம் கோடி) 74.6 சதவீதமாகும். எனவே இந்த ஆண்டில் நிதி பற்றாக்குறை பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த அள வைக் காட்டிலும் உயரும் என்ற அச்சப்பாடு நிலவி வருகிறது.முதல் ஐந்து மாதங்களில் மொத்த செலவினம் ரூ.6.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில் நிகர வரி வசூல் ரூ.1.83 லட்சம் கோடியாகத்தான் உள்ளது. இது முழு ஆண்டிற்கான வரிவசூல் இலக்கில் (ரூ.8.84 லட்சம் கோடி) 20.8 சதவீதமாகும். இதர வருவாய் குறித்த புள்ளி விவரம் வெளியிடப்படவில்லை.கடந்த 2011-12-ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 5.8 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் வரிவசூலை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் சென்ற 2012-13-ஆம் நிதி ஆண்டில் இது 4.9 சதவீதமாக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டில் இதனை 4.8 சதவீதமாக வைத்து இருக்க பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment