தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 23 October 2013

உரிக்காமலே கண்ணீர்பருப்பு இல்லாமல் சாம்பாரா என்று சொல்வதுண்டு. ஆனால் வெங்காயம் இல்லாமல் சாம்பார் செய்வதுண்டோ? சாம்பாரில் முருங்கைக்காய் சேர்க்காமல் சுவை கூடுமோ? தற்போது வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலையைக் கேட்டால் மயக்கம்தான் வருகிறது.வெங்காயத்தின் விலையைக் கேட்டதும் உரிக்காமலேயே கண்ணீர் வரும் நிலைமை. தலைநகர் தில்லியிலே கிலோ 90 ரூபாய் என்றால் சொல்லவும் வேண்டுமோ! கடந்த வாரம் விற்றதைவிட இந்த வாரம் முப்பது சதவீதம் விலை உயர்ந்துள்ளது என்று சந்தை நிலவரம் தெரிவிக்கிறது.


முருங்கைக்காய் கிலோ எழுபத்தைந்து ரூபாய் என்றும் ஒரு காய் பதினைந்து ரூபாய் என்றும் விலையைக் கேட்டதும் மக்கள் அதிர்ச்சியடைந்து போயுள்ளனர். இனிமேல் சாம்பார், குழம்பை மக்கள் மறந்துவிட வேண்டியதுதான் போலும்.மகாராஷ்ட்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரப்பிரதேசத்திலிருந்து வெங்காயம் வரத்து குறைந்ததுதான் விலை உயர்வுக்குக் காரணம் என்று தில்லி வியாபாரிகள் கூறுகின்றனர். வெங்காய ஏற்றுமதிக்கு கட்டுப்பாடும் இறக்குமதிக்கு அனுமதியும் கொடுத்த பிறகும் இந்த நிலை என்றால் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது என்றே பொருள்.முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் வெங்காயத்தை ஏற்றுமதி செய்தும் இறக்குமதி செய்தும் வியாபாரிகள் கொள்ளையடித்த நிகழ்வு நடந்தது.

இதில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உறவினரும் வாஜ்பாயின் உறவினரும் `நல்ல பலன்அடைந்தார்கள் என்பது பின்னால் அம்பலமானது.பற்றாக்குறையைப் பயன்படுத்தி பதுக்கல் பேர் வழிகள் விலையை உயர்த்தியும் பதுக்கி வைத்தும் கொள்ளை லாபம் அடிப்பார்கள். ஆனால் வெங்காய விவசாயிகளுக்கு எவ்விதப் பயனும் ஏற்படுவதில்லை. அரசும் கட்டுபடியான விலை நிர்ணயம் செய்வதில்லை.

சேமித்து வைப்பதற்கான கிட்டங்கி வசதியும் கிடையாது. பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள், இந்திய பெரும்முதலாளிகளின் நிறுவனங்கள் மட்டுமே லாபத்தை `அறுவடைசெய்கின்றன. அறுவடைச் சமயத்தில் மழை பெய்வதால் வெங்காயம் சேதமடைந்து விளைச்சல் குறைவது ஒரு காரணம் என்றால் இடைத்தரகர்கள், வியாபார நிறுவனங்களின் நடவடிக்கைகள் முக்கியக் காரணங்களாகும்.முருங்கைக்காய் மட்டுமல்ல, தக்காளியும் விலை உயர்ந்துவிட்டது. பைலின் புயலும் மழையும் தற்காலிக தற்போதைய காரணம் எனக் கூறினாலும் பண்டிகைக் காலத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தி விலையை உயர்த்துவதற்கான `சந்தைநடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

மாநில அரசுகள் வெங்காயம் பதுக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா உபதேசம் செய்துள்ளது மட்டும் போதாது.காய்கறிகளின் விலையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உணவுப் பண்டங்களின் விலையை உயர்த்தும் கள்ள மார்க்கெட் கொள்ளையும் கறுப்புச் சந்தை நடவடிக்கையும் அரசு நிர்வாகத்தால் தடுக்கப்பட வேண்டும். மீறி தவறு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

நன்றி: தீக்கதிர்

No comments:

Post a Comment