அயல்நாட்டு
அழைப்புகளுக்கான கட்டணத்தை சமீபத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகரித்தன.
ஆனால் பொதுத்துறை நிறுவனமான BSNL தற்போது இருக்கும் கட்டணத்தை விட 75% குறையும் வகையில்
சிறப்புக் கூப்பன்களை அறிவித்திருக்கிறது.
PRE
PAID திட்டத்தில் ரூ. 41 மதிப்பிலான சிறப்புக் கூப்பன்கள் மூலம் அமெரிக்கா, கனடா மற்றும்
சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ. 1.49 மட்டுமே ஆகும்.
இதற்கான கட்டணம் நிமிடத்திற்கு ரூ. 6.00 ஆக
இருந்தது. சீனாவிற்கான அழைப்புகளுக்கு முன்பு கட்டணம் ரூ.10. தற்போது ரூ. 1.49 மட்டுமே.
POST PAID FMC ரூ.40 திட்டத்திலும் இந்த சலுகைக் கட்டணம் இருக்கிறது. ரூ.5 ஆக இருந்த
SMS கட்டணம் ரூ. 3 ஆகக் குறைக்கப் பட்டிருக்கிறது.
ரூ.
38 STV வாயிலாக ப்ரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான அழைப்புகளுக்கு ரூ.
6 ஆக இருந்த கட்டணம் ரூ. 4.49 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.பங்களாதேசம்,
மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு ரூ.10 ஆக இருந்த அழைப்புக் கட்டணம்
STV ரூ.27 வாயிலாக ரூ.2.99 ஆகக் குறைந்திருக்கிறது.
தகவல்:
தோழர் நம்பூதிரி வலைதளம்
மக்களுக்கான
குறைந்த கட்டண சேவைகளைத் தருவதில் ஊழியர்கள் உறு துணையாக இருப்போம். லாப நட்டம் பாராமல் தொடர்ந்து மக்களுக்கான சேவை செய்து
வரும் BSNLன் நிலைத்த தன்மையை உறுதி செய்வது அரசின் கடமை.
No comments:
Post a Comment