குறைந்த பட்ச ஓய்வூதியம்
ரூ.1000
வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்.) இணைந்துள்ள தொழிலாளர்களுக்கு
குறைந்தபட்சம் ரூ.1,000 ஓய்வூதியம்
வழங்கப்படும் என பட்ஜெட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, அரசுக்கு நடப்பு
நிதியாண்டில் ரூ. 1,271 கோடி கூடுதலாக
செலவாகும். இதன் மூலம் ரூ.1,000க்கும் குறைவான
ஓய்வூதியம் பெறும் 5 லட்சம் விதவைகள்
உட்பட 28 லட்சம் பேர்
பயனடைவர். இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
மேலும் இபிஎஸ்-95 திட்டத்தின்
கீழ் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்துக்கான ஊதிய வரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய வரம்பு உயர்வால் கூடுதலாக 50 லட்சம்
தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.
மொத்தம் 44 லட்சம் பேர்
இபிஎப்ஓ திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
ஒரே பி.எப். கணக்கு எண்
தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ), ஒரே கணக்கு எண் (யுஏஎன்) திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
வேறு நிறுவனங்களுக்கு மாறினாலும், ஒரே கணக்கு எண்ணைப் பயன்படுத்த முடியும். வரும் அக்டோபரில்
இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், 5 கோடிக்கும் அதிகமான இபிஎப்ஓ சந்தாதாரர்கள் பயனடைவர்.
மத்திய பட்ஜெட் 2014-ன் எதிரொலி காரணமாக,
விலை உயர்பவை
சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள், குட்கா, பான் மசாலாக்கள்
குளிர்பானம்
இறக்குமதி செய்யப்பட்ட இரும்புப் பொருட்கள்
எவர்சில்வர் பொருட்கள்.
தொலைக்காட்சி, ஆன்லைன் விளம்பரக் கட்டணம்.
உடைந்த வைரம்
இறக்குமதி செய்யப்படும் உயர் தொழில்நுட்ப
சாதனங்கள்
போர்டபிள் எக்ஸ்-ரே இயந்திரங்கள்
விலை குறைபவை
மொபைல் போன்கள்.
கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள்
19 இன்ச்களுக்கு குறைவான எல்.இ.டி. எல்.சி.டி.
டிவி-க்கள்
காலணிகள் விலை
சோப்பு
தீப்பெட்டிகள்
லைப் மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகள்
பிளாஸ்டிக் பொருள்கள்
ஆடம்பர கற்கள்
அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்
அச்சு விளம்பரங்களுக்கான கட்டணம்
மின் புத்தகங்கள்
ஆர்.ஓ. நீர் சுத்திகரிப்பு யூனிட்டுகள்
எல்.இ.டி. விளக்குகள், எல்.இ.டி.
விளக்கு பொருத்தும் பட்டிகள்
ஸ்போர்ட்ஸ் உறைகள்
பிராண்டட் பெட்ரோல்
No comments:
Post a Comment