ரயில்வே என்பது சேவை அல்ல; வர்த்தகம்: சதானந்த கவுடா
|
ரயில்வே துறையின்
உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்க
தயாராக இருப்பதாக ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா முன்மொழிந்துள்ளார். இதற்கான விதிகளைத் தளர்த்த நாடாளுமன்றம்
வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
|
மக்களவையில் செவ்வாயன்று பகல் 12
மணியளவில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர்பேசும்போது, “ரயில்வே
துறையில் வளர்ச்சி என்பது உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முதலீடு செய்யப்படுவதைப்
பொறுத்தே அமையும். ரயில்வே துறை வருவாய் மற்றும் அரசு நிதியுதவி ஆகியவை
வளர்ச்சிக்குப் போதுமானதாக இருக்காது. எனவே ரயில்வே அமைச்சகம் அன்னிய நேரடி
முதலீட்டிற்கு கொள்கைகளை எளிதாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திடம் கேட்டுக்
கொள்ள விருக்கிறது” என்றார்.
|
தனியார்
|
தனியார் - பொதுத்துறை கூட்டு
முயற்சிகள் ரயில்வே துறைக்கு போதுமான நிதி ஆதாரங்களைத் திரட்டித் தருவதில்
வெற்றியடையவில்லை; ஆகவே
எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்றுவதில், தனியார் - பொதுத்துறை கூட்டுத் திட்டத்தை வலுப்படுத்துவது
முக்கியம் என்று தாம் கருதுவதாகவும், பல எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்ற இந்த முறையிலேயே
நிறைவேற்ற முதலீடு வரவேற்கப்படும் என்றும் அவர் கூறினார். உதாரணமாக, அதிவேக
ரயில்கள், புல்லட்
ரயில்களுக்கு அதிக முதலீடுத் தேவைப்படும் அதற்கு தனியார் மூலம் நிதிதிரட்டுவதே
சுலபமான வழி என்று அவர் கூறினார்.
|
தலைப்புச் செய்திகள்
Wednesday 9 July 2014
அந்நியருக்கு தாராளம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment