தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday, 23 December 2014





அமெரிக்க உறவினால் சோசலிசக் கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்- ரால் காஸ்ட்ரோ

ஹவானா, டிச.22-
அமெரிக்க உறவினால் சோசலிச கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே புதிதாக தூதரக உறவு ஏற்படுத்திக் கொள்ள சமீபத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்த ஆண்டு நிறைவு செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, அமெரிக்கா கியூபா இடையில் ஏற்பட்டுள்ள புதிய உறவினால், கியூபாவில் ஒரு கட்சி ஆட்சி முறையில் சீர்திருத்தம் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ நாடாளுமன்றத்தில் பேசும்போது, அமெரிக்க உறவினால் கியூபா ஒருபோதும் தனது சோசலிசக் கொள்கைகளையும், போராட்டத்தையும் விட்டுக் கொடுக்காது. இதேபோல் அமெரிக்காவும் தனது அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும் என்று கியூபா வலியுறுத்தாது. கியூபாவுக்கு எதிராக கடந்த 50ஆண்டுகளாக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை விலக்க அமெரிக்கா முதலில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment