தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday, 31 October 2013

பத்திரிகைகளில் இருந்து . . .




அரசியல்வாதிகள் தலையீட்டில் இருந்து அதிகாரிகளை பாதுகாக்க
சட்டம் அவசியம்: உச்ச நீதிமன்றம்<<<செய்தி>>>

ஒட்டுக்கேட்புப் புகார்: அமெரிக்க என்எஸ்ஏ மறுப்பு <<<செய்தி>>>


இந்திராவின் மரணம், அவரின் ரத்தத்தை மட்டுமல்ல, எளியவர்களின் ரத்தத்தையும் சேர்த்தே சிந்தச்செய்தது ! <<<செய்தி>>>

தனியார் லாபப் பாதைக்கு தடம் புரட்டப்படும் ரயில்வே

சுமார் 1,15,000 கி.மீ. நீள தடங்களுடன், 7,500 நிலையங்களுடன், தினமும் இரண்டரைக் கோடிப் பேர் பயணம் செய்கிற, 28 லட்சம் டன் சரக்குகள் கொண்டு செல்லப்படுகிற இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வேயாக வளர்ந்திருக்கிறது. நிர்வாக அலட்சியம், ஊழல்கள், ஊழியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு குறைபாடுகளுக்கிடையேயும் இந்த மகத்தான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதற்கு அடிப்படையான காரணம் இது அரசுத்துறையாக இருப்பதுதான்.
160 வயதாகும் இந்திய ரயில்வேயின் இந்தப் பெருமையை மென்மேலும் வளர்த்துச் செல்வதற்கு மாறாக, தனியார்மயமாக்கலை நோக்கித் தடம்புரளச் செய்யும் முயற்சியில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கூச்சமில்லாமல் இறங்கியிருக்கிறது. சில வெளிநாடுகளில் இருப்பது போன்ற அதிவேக ரயில்கள், அதற்கென்றே ஒதுக்கப்பட்ட இருபக்கப் பாதுகாப்புச் சுவர்களுடன் கூடிய தனியான தடங்களில் இயக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருக்கிறது. மத்திய அரசு சாம் பிட்ரோடா தலைமையில் அமைத்த நவீனப்படுத்தலுக்கான ஆலோசனைக் குழு, 5 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களைப் பரிந்துரைத்திருக்கிறது.

அவற்றில் 60,000 கோடி ரூபாய் செலவில் அதிவேக ரயில்களுக்கான தனித் தடம் அமைப்பதும் ஒன்றாகும். இப்போது ரயில்வே அமைச்சகம் உயர் வேக ரயில் கார்ப்பரேசன் (எச்எஸ்ஆர்சி) என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே செவ்வாயன்று (அக்.29) இந்த நிறுவனத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார். பிட்ரோடா குழுவின் யோசனையைப் போல அல்லாமல், தற்போதுள்ள தடங்களிலேயே மணிக்கு 160 முதல் 200 கி.மீ. வரை வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் கூட்டுத்துறை அடிப்படையில் அந்த ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் அருணேந்திர குமார் தெரிவித்திருக்கிறார். புதிய நிறுவனத்தின் தலைவர் சதிஷ் அக்னிஹோத்ரி, மாநில அரசுகளும் தனியார் துறையினரும் இதில் பங்காளிகளாக இருப்பார்கள் என்று கூறி இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ரயில்வேயில் மிக அதிகமாக     வருமானம் தருகிற அகமதாபாத் - மும்பை, அமிருதசரஸ்-லூதியானா -சண்டிகர் - தில்லி, ஆக்ரா-லக்னோ - வாரணாசி - பாட்னா, சென்னை - திருவனந்தபுரம், பெங்களூரு- சென்னை ஆகிய தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுமாம்.

அதிவேக ரயில்கள் வேண்டும்தான். ஆனால், அதை ஏன் தனியார் லாபத்துக்கான ஏற்பாடாக மாற்ற வேண்டும்? 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் முதலீடுகள் தனியாரிடமிருந்து ரயில்வே துறைக்கு வரும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் அதில் 4 சதவீதம் அளவுக்குக் கூட வரவில்லை என்பதே அனுபவம். அதுபோல் இந்தத் திட்டத்திற்கும் தோல்வியடையும் வாய்ப்புகளே அதிகம். ஆகவே, சீனாவைப் போல அரசு முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் ரயில்வே சேவை களை வலுப்படுத்துவதும், அதிவேக ரயில்கள் போன்ற புதிய திட்டங்களைத் தொடங்குவதுமே பலனளிக்கும் என்று தொழிற்சங்கத்தினரும் ரயில்வே சேவைகளைக் கவனித்துவருகிற வல்லுநர்களும் கூறுகிறார்கள். அரசு மூடிக் கொண்ட தனது காதுகளைத் திறந்து இதை உற்றுக்கேட்க வேண்டும்.
நன்றி: தீக்கதிர்