தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday, 17 August 2013

ஊதிய நிர்ணய முறைகேடு



1.10.2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 1.10.2000க்குப் பின் வரும் இன்கிரிமெண்ட் தேதியில் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது தவறு என்றும் 1.10.2000க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பதவி உயர்வு தேதியிலேயே ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு வெளியானது. அந்த உத்தரவின்படி பல போன்மெகானிக் தோழர்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பிடித்தம் செய்யப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்தப் பிரச்சினையை நமது அகில இந்திய சங்கம் முனைப்போடு கையாண்டு வருகிறது. கடிதம் வாயிலாகவும் நேரடியாகவும் நமது பொதுச்செயலர் விவாதித்து வருகிறார். அதன் பயனாக DOT உடன் இந்தப் பிரச்சினையை ஆலோசிக்க BSNL நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. அதிகமாக வழங்கப்பட்ட தொகையை பிடித்தம் செய்யவிருப்பதை நிறுத்த வேண்டும் என்றும் பொதுச்செயலர் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment