தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday, 13 August 2013

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள்



BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கான
ஓய்வூதியப் பலன்கள் பற்றி
நமது பொதுச்செயலர், BSNL நிறுவனத்திற்கு
எழுதியுள்ள கடிதத்தின் சாரம்சம்.
நேரடி நியமன ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை
பரிசீலினை செய்ய அமைக்கப்பட்ட குழு
தனது பரிந்துரைகளை அளித்துள்ளது.
2% அடிப்படை ஊதியம்
மற்றும் அதற்கான பஞ்சப்படியை
நிறுவனத்தின் பங்களிப்பாக செலுத்தலாம்
என்று பரிந்துரை செய்திருக்கின்றது.
பொதுத்துறை நிறுவனங்கள் இலாகாவின் (DPE) வழிகாட்டுதலுக்கு
முற்றிலும் முரணாக இருக்கிறது,
இந்தப் பரிந்துரை.
ஓய்வூதியப் பலன்களுக்காக 30% அடிப்படை ஊதியத்தை
நிறுவனங்கள் தனது பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
ஒய்வூதியப் பலன்களின் உச்ச வரம்பான
30% நிர்ணயத்திற்கு
அடிப்படை ஊதியம் மற்றும் பஞ்சப்படியையும்
கணக்கில் கொள்ள வேண்டும்.
ஊழியர்களின் பங்களிப்பு அத்தியாவசியம் இல்லை.
என்பது தான் DPEன் வழிகாட்டுதல்கள்.
இந்த வழிகாட்டுதல்கள்
NLC, BHEL, AAI, CIL, EIL ஆகிய நிறுவனங்களில்
ஏற்கனவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
எனவே, BSNL நிறுவனமும்
அந்த வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் மூலம்
BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கான
ஓய்வூதிய நிதி மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

No comments:

Post a Comment