மத்திய
அரசாங்கம்
தற்போது
முன்
மொழிந்துள்ள
உணவுப்
பாதுகாப்பு
நட
வடிக்கைகளில்
ஜீவனில்லை
என்று
நாம்
சொல்வதற்கு
பல்வேறு
காரணங்கள்
உள்ளன.
குறிப்பாக
அனைவருக்குமான
பொதுவான
உணவுப்
பாதுகாப்பு
இந்த
முன்மொழிவுகளில்
இல்லை.
மொத்த
மக்கள்
தொகையில்
67 சதவீதம்
பேர்
மட்டுமே
இதன்
கீழ்
பயனாளிகளாக
இருப்பார்கள்.
இதனால்
ஏற்கனவே
உணவுப்
பாதுகாப்பினை
அனைவருக்கும்
பொதுவானதாக
அமலாக்கிக்
கொண்
டிருக்கும்
மாநிலங்களுக்கு
இந்த
முன்
மொழிவுகள்
பங்கம்
விளைவிப்பதாக
உள்ளன.
உலகிலேயே
சிறந்ததொரு
பொது
விநியோகத்
திட்டத்தினை
அமலாக்கி
வரும்
கேரளா
போன்ற
மாநிலங்களில்
மத்திய
அரசால்
ஏற்கனவே
அமல்
படுத்தப்பட்ட
வறுமைக்
கோட்டிற்குக்
கீழ்
மற்றும்
மேல்
என்ற
ஏற்பாடே
பெரும்
கஷ்
டங்களை
விளைவித்தது.
தற்போதைய
முன்மொழிவுகளால்
திரிபுரா
போன்ற
மாநிலங்களிலும்
பிரச்சனை
ஏற்படும்.
எதிர்
விவாதங்கள்
இப்படிப்பட்ட பல குறைபாடுகள் உள்ள,
ஜீவனற்ற
முன்மொழிவுகளுக்கும்
கூட
எதிர்ப்புகள்
எழுந்துள்ளன.
உணவுப்
பாதுகாப்பு
என்ற
பெயரிலான
இந்த
‘மறுபகிர்மான
நடவடிக்கை’
என்பது,
அரசின்
செயல்பாடுகளில்
இருந்து
அல்லது
அரசிலிருந்து
நடுத்தர
மக்களின்
வெளியேற்றத்திற்குக்
காரணமாகிவிடும்
என்று
சில
விமர்சகர்களால்
வியாக்கியானம்
செய்யப்படுகிறது.
எப்படிப்பட்ட
வியாக்கியானம்
தெரியுமா?
நடுத்தர
வகுப்பினருக்கு
அரசின்
மறுபகிர்மான
நடவடிக்கைகளால்
எந்தவிதப்
பயனும்
இல்லை.
அவர்கள்
செலுத்தும்
வரி
வருமானங்களை
அரசு
வேறு
செலவினங்களுக்குப்
பயன்படுத்துகிறது
என்பதால்
அவர்கள்
வரி
செலுத்தாமல்
இருப்பதற்கான
வழிகளை
தேடுகின்றனர்.
அரசின்
சேவைகள்
அவர்களுக்குப்
போதுமானதாக,
தரம்மிக்கதாக,
ஒழுங்காகக்
கிடைப்பதில்லை.
எனவே,
அவர்கள்
தில்லியில்,
குர்கானில்
உள்ளது
போன்று
தங்களுக்கான
‘காலனிகளை’
அமைத்துக்
கொண்டு
அங்கேயே
தடையில்லா
மின்சார
வசதி
போன்ற
பல
வசதிகளை
ஜெனரேட்டர்கள்
மூலம்
அமைத்துக்
கொண்டு
தங்களுடைய
பாதுகாப்பினை
உத்தரவாதப்
படுத்திக்கொள்ளும்
நடவடிக்கைகளில்
இறங்கியுள்ளனர்.
அரசின்
பொது
சுகாதாரத்திலிருந்து
விலகி
தனியாரை
தேடிச்
செல்கின்றனர்.
அரசுப்
பள்ளிகளை
விடுத்து
தனியார்
பள்ளிகளிலும்,
வெளி
நாடுகளிலும்
தங்கள்
குழந்தைகளைப்
படிக்க
வைத்து
வேலைக்கு
அனுப்புகின்றனர்.
அரசாங்கத்தின்
தரம்
குறைந்த,
ஒழுங்கற்ற
சேவைகளையே
நடுத்தர
வர்க்கம்
தன்னுடைய
வெளியேற்றத்திற்குக்
காரணமாகக்
கூறுகிறது.
இதையே
நடுத்தர
வர்க்கம்தான்
வரி
செலுத்தாமல்
இருப்பதற்கான
நியாயமான
காரணமாக
முன்னிறுத்துகிறது.
இப்படிப்பட்ட
மெத்தப்
படித்த,
‘திறமையான’
நடுத்தர
வர்க்கம்
அரசின்
நடவடிக்கைகளில்
இருந்து
‘விலகிச்
செல்வது’
என்பது
ஆபத்தானது;
அதைத்
தடுக்க
அரசு
தன்னுடைய
அனைத்து
விதமான
மறுபகிர்மான
நடவடிக்கை
களையும்
கைவிட
வேண்டும்
என்று
இந்த
விமர்சகர்கள்
வியாக்கியானம்
செய்கிறார்கள்.‘ஊழலும்’
ஒரு
காரணமாம்தற்போது
‘ஊழல்’
என்பது
அரசு
இயந்
திரங்களிலும்,
அரசியல்
தளங்களிலும்
மலிந்து
போயுள்ளது.
ஊழல்
அரசியல்
வாதிகள்
தங்களுடைய
பாக்கெட்டுகளை
நிரப்பிக்
கொள்வதற்கு,
மத்தியதர
வர்க்கம்
எதற்காக
வரி
செலுத்த
வேண்டும்
என்று
கேள்வி
எழுப்பப்படுகிறது.
அரசின்
மறு
பகிர்மான
நடவடிக்கைகளே
கூட
‘ஊழல்’
படுகுழியில்
புதைக்கப்படும்
எனும்போது,
அதற்காகத்
தாங்கள்
செலுத்தும்
வரி,
ஊழல்
நடவடிக்கைகளை
மேலும்
அதிகப்படுத்தி
விடும்
என்று
மத்திய
தர
வர்க்கம்
வாதாடுவதாக
அந்த
விமர்
சகர்கள்
கூறுகிறார்கள்.
அரசு
ஏழைகளுக்காக
எடுக்கும்
எல்லாவிதமான
மறு
பகிர்மான
நடவடிக்கைகளும்
ஊழலுக்கு
வழி
வகுத்துவிடும்
என்று
வாதாடி,
வரி
செலுத்தாமல்
இருப்
பதையும்,
அரசின்
மறு
பகிர்மான
நடவடிக்
கைகளை
எதிர்ப்பதையும்
நியாயப்படுத்து
கின்றனர்.
‘விலகலின்’ காரணமாகவேதான்
ஊழல்ஊழல்
என்பது
கண்டிப்பாக
எதிர்க்
கப்பட
வேண்டிய
ஒன்று.
ஆனால்,
அதுவே
ஏழைகளுக்கான
மறு
பகிர்மான
நடவடிக்கைகளை
எதிர்ப்பதற்கான
விவாதமாக
இருக்க
முடியாது.
உண்மையைச்
சொல்ல
வேண்டும்
என்றால்,
‘ஊழல்’
என்பதே
அரசிடம்
இருந்து
‘விலகி’
இருப்பதாகக்
கூறிக்கொண்டு
அரசாங்கச்
சொத்துக்களை
எளிதில்
திருடி
தங்கள்
சொத்துக்களை
அதிகப்படுத்திக்
கொள்ள
லாம்
என்ற
சிந்தனையோடு
அதை
நியாயப்படுத்துபவர்களால்
தான்
செய்யப்
படுகிறது.
எனவே,
யாரோ
ஊழல்
செய்யக்
கூடாது
என்பதற்காக,
‘அரசிற்கு
நான்
நியாயமாகச்
செலுத்த
வேண்டிய
வரியினை
செலுத்தாமல்
எனது
பாக்கெட்
டிற்குள்ளேயே
வைத்துக்
கொள்வேன்,
அதில்
என்ன
தவறு?’
என்று
கேட்கும்
மனநிலை
ஊழல்
பேர்வழிகளின்
‘விலகல்’
மனநிலைக்கு
ஒப்பானது
என்று
தான்
சொல்ல
முடியும்.
முதலாளித்துவத்தின்
குணாம்சம்
சொந்த லாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக
அரசாங்கக்
கஜானாவிற்குச்
சேர
வேண்டிய
வரியினைச்
செலுத்தாமல்
ஏய்க்கும்
போக்கு
முதலாளித்துவ
அமைப்பின்
கீழ்
நியாயப்
படுத்தப்படுகிற
ஒன்று.
தனியார்
லாபத்தினை
பெருக்குவது
என்பதுதான்
முதலாளித்துவத்தின்
உந்து
சக்தி.
அடுத்தவர்களின்
நலன்களை
உறிஞ்சி
சொந்த
நலனைப்
பெருக்கிக்
கொள்வதை
அதிகாரப்பூர்வமாக
நியாயமாக்கும்
நடவடிக்கைகள்
முதலாளித்துவ
அமைப்பில்
இருப்பதும்
ஆச்
சரியமில்லை.
அப்படிப்பட்ட
மனநிலையில்
உள்ளவர்கள்
அரசின்
உள்சேர்மானமாக
இருப்பதிலும்
ஆச்சரியமில்லை.
அரசு
தனது
மறு
பகிர்மான
நடவடிக்கைகளை
கைவிட
வேண்டும்;
ஏனெனில்
அவை
வளர்ச்சிக்குப்
பங்கம்
விளை
விக்கும்
என்று
இவர்கள்
முதலில்
கூறி
னார்கள்.
‘சொட்டுச் சொட்டாக
பயன்கள்
கீழிறங்கும்’
என்று
சொல்லப்பட்ட
கொள்கை
பொய்த்துப்
போன
பின்னணியில்,
அதுவே
ஏழைகளின்
வாழ்நிலையை
முன்னேற்றப்
போதுமானது
என்று
சொல்லப்பட்ட
வாதமும்
கைவிடப்பட்டது.
அதன்
பிறகு
கையில்
உள்ள
சிறு
அளவு
காசினை
அல்லது
உணவினை
எதிர்
காலத்தில்
பெருக்கும்
விதமாக
ஏழைகளுக்கான
திட்டங்களை
அமலாக்கும்
நடைமுறை
போதும்
என்று
வாதிடப்பட்டது.
தற்போது
திறமை
மிக்க,
படித்த,
அறிவாளிகள்
நிறைந்த,
வசதி
படைத்த
மத்திய
தர
வர்க்கம்
அரசின்
இந்த
மறு
பகிர்மான
நடவடிக்கைகளை
விரும்ப
வில்லை,
அதனால்
அவற்றைக்
கைவிட
வேண்டும்
என்று
சொல்லப்படுகிறது.
ஜனநாயக
விரோதம்
இந்த
விவாதங்கள்
ஜனநாயகத்திற்கு
விரோதமான
விவாதங்கள்
என்பது
ஒரு
புறம்.
உண்மையில்
இவை
அடிப்படையிலேயே
தவறானவையும்
கூட.
ஒரு
ஜன
நாயக
நாட்டின்
சமுதாயம்
என்பதும்,
அரசியல்
அமைப்பு
முறைகளும்
அரசியல்
தளங்களும்
வெளியேறக்கூடிய
விலகல்
மனப்பான்மை
உள்ள
‘சலன
புத்தி’
கொண்டவர்களின்
விருப்பு
வெறுப்புகளுக்கு
ஏற்ப
கட்டமைக்கப்பட
வேண்டும்
என்று
கூறுவது
எப்படி
ஜனநாயகப்
பூர்வமானதாக
இருக்க
முடியும்?
சமீப
காலமாக
இது
மாதிரியான
விவா
தங்களும்,
கண்ணோட்டங்களும்
வெட்கமில்லாமல்
வெளிப்படையாக
முன்
வைக்கப்படுகின்றன.
டைம்ஸ்
ஆப்
இந்தியா
தன்னுடைய
வாசகர்கள்
மத்தியில்,
வரி
செலுத்துபவர்கள்
வரி
வருமானத்தை
பகிர்வது
குறித்து
கருத்து
சொல்வதில்
தவறு
என்ன
இருக்கிறது
என்ற
விவாதத்தினை
எழுப்பியுள்ளது.
நிச்சயமாக
இந்த
விவாதம்
அதனுடைய
வசதிபடைத்த
நடுத்தர
வகுப்பு
வாசகர்களின்
மனதைக்
கவ்விப்
பிடிக்கும்.வரி
செலுத்துபவர்கள்
தான்
அரசின்
வருமானம்
எப்படி
செலவு
செய்யப்பட
வேண்டும்
என்பதை
தீர்மானிப்பார்கள்
என்று
சொல்வது
ஜனநாயகப்பூர்வமாக
அனைத்து
மக்களாலும்
தேர்ந்தெடுக்கப்பட்ட
ஒரு
ஜனநாயக
அரசின்
உரிமையை
தட்டிப்
பறிப்பதாகும்.
அரசு
அமைப்பில்
அதிகாரம்
செலுத்தும்
செல்வந்தர்களுக்கு
மற்றவர்களை
விட
அதிகமாக
கருத்துக்
கூறும்
உரிமை
உள்ளது
என்று
முன்
வைப்பதே
ஜனநாயகத்தை
உடைத்தெறியும்
விவாதமாகும்.
‘நாங்கள்
பயனாளிகள்
இல்லை;
எனவே
எங்களுக்கு
வரி
விதிக்கக்கூடாது’
என்பது
‘நடுத்தர
மக்கள்
அரசில்
இருந்து
வெளியேறி
விடுவார்கள்’
என்னும்
விவாதத்தினை
நியாயப்
படுத்துவதில்
வெளிப்படுகிறது.
எனவே,
இந்த
தவறான
விவாதங்கள்
தடுக்கப்பட
வேண்டியவை.
சமூகத்தின்
வருமானமும்
சொத்துக்களும்
சமூக
முன்னுரிமைகளுக்கு
ஏற்ப
பெரும்பகுதி
பொது
மக்களால்
சமூக
ரீதியாகத்
தீர்
மானிக்கப்படும்.
மாற்றப்படும்.
மாற்றிப்
பயன்படுத்தப்படும்.
அப்படி
சமூகத்தின்
சொத்துக்களை,
வருமானங்களை
மறு
பகிர்மானம்
செய்வதை
யாராவது
எதிர்ப்
பார்களானால்,
அவர்களுடைய
சொத்துக்
களையும்
வருமானங்களையும்
அவர்களி
டம்
இருந்து
எடுப்பது
என்பது
தான்
சரியாக
இருக்க
முடியும்.
சாத்தியமாகவும்
இருக்கும்.
அதனால்
சமூகம்
முடமாக்கப்
படுவது
தடுக்கப்பட
முடியும்.
அதற்கான
மாற்று
ஏற்பாடுகளைச்
செய்ய
முடியும்.
பொதுவுடைமையே
வழிஇந்த
ஆரம்பக்கட்ட
ஆலோசனை
என்பது
சோஷலிசத்திற்கு
அடிப்
படையாக
அமையும்.
மார்க்ஸ்
இதனை
வெகு
காலத்திற்கு
முன்பே
சொல்லிச்
சென்றுள்ளார்.
ரிக்கார்டோவின்
வழி
வந்த
ஹாட்ஜ்ஸ்கின்
என்ற
ஆங்கில
பொது
வுடைமைச்
சிந்தனையாளர்
உற்பத்திக்
கான
வழிமுறைகள்,
கருவிகள்
மற்றும்
வாழ்வாதார
அத்தியாவசியப்
பொருட்கள்
எதுவும்
இல்லாமல்
ஒரு
சமுதாயம்
எதுவுமே
செய்ய
முடியாது
எனும்போது,
அந்தச்
சமுதாயத்திற்கு
முதலாளிகள்
என்ற
ஒரு
பிரிவினர்
தேவையில்லை
என்று
கூறியுள்ளார்.
அந்தச்
சமுதாய
மானது
உற்பத்திக்
கருவிகள்
மற்றும்
வழி
முறைகளை,
வாழ்வாதாரத்திற்கான
அடிப்படை
அம்சங்களை
கூட்டுடமை
யாக்குவதன்
மூலம்
முதலாளிகளே
இல்லாமல்
வாழ
முடியும்.அதேபோல
இந்தியாவில்
இன்று
வசதிபடைத்தவர்கள்
மற்றும்
வசதி
படைத்த
நடுத்தர
வர்க்கத்தினர்
அரசின்
மறு
பகிர்மான
நடவடிக்கைகளினால்
‘விலகிச்
செல்வோம்’
என்று
அச்சுறுத்து
வார்களேயானால்,
அவர்களது
அச்சுறுத்
தலை
ஒரு
ஜனநாயக
அரசு
வெறும்
‘வீண்
பேச்சாகவே’
கொள்ள
வேண்டும்.
அவர்
கள்
அப்படி
வெளியேறி
விட
முடியாது.
அவர்களுடைய
இருப்பு
அதாவது
செல்வச்
செழிப்பு
என்பது,
இந்த
சமு
தாயத்தின்
உபரியிலிருந்து
வந்தது.
எனவே,
ஒரு
ஜனநாயக
அரசு
அதனுடைய
மறு
பகிர்மான
நடவடிக்கைகளை
பெரும்
பகுதி
பொது
மக்களால்
தீர்மானிக்கப்
படும்
சமூக
முன்னுரிமைகளின்
அடிப்
படையில்
தொடர்ந்து
செய்ய
வேண்டும்.
நிறுத்தக்
கூடாது.
ஒருவேளை,
அவர்கள்
இந்த
சமூக
உபரியின்
மூலம்
தாங்கள்
பெற்ற
செல்வத்
தின்
அதிகாரத்தினால்
அரசின்
மறு
பகிர்மான
நடவடிக்கைகளை
எதிர்ப்பார்
களேயானால்,
ஒரு
ஜனநாயக
அரசிற்கு
அவர்களுடைய
சொத்துக்களை
மற்றும்
வருமானங்களை
பொதுவுடைமையாக்குவதில்
எந்தவிதமான
மன
உறுத்தலோ
அல்லது
பச்சாதாப
உணர்வோ
தேவையில்லை.
வரி
விதிப்பதையும்,
அதை
சமூகத்
தேவைகளுக்காக
மாற்றி
விடுவதையும்
அவர்கள்
எதிர்ப்பார்களானால்
பொதுவுடைமைப்
போராளிகள்
நெடுங்காலமாகக்
கூறி
வருவது
போல,
செல்வந்தர்களின்
சொத்துக்களையும்
வருமானங்களையும்
பொதுவுடைமையாக்குவதில்
எந்தத்
தயக்கமும்
தேவை
யில்லை.
அதுதான்
தற்போதைய
அவசியமும்
கூட!
நன்றி: தீக்கதிர்
No comments:
Post a Comment