தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 30 August 2013

நிலக்கரி ஊழல் : கோப்புகள் மாயமான விவகாரம் : ஆவணங்களை அழிக்க முயற்சியா? அரசு மீது உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்நிலக்கரிப் படுகை ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட போது அதில் ரூ.1.86 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மெகா ஊழல் தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில் முக்கியமான கோப்புகள் மாயமாகியிருப்பது ஆவணங்களை அழிக்கும் முயற்சியா? என உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது.பிரதமர் மன்மோகன் சிங் வசம் நிலக்கரித் துறை இருந்தபோது 2006ம் ஆண்டில் நடைபெற்ற நிலக் கரிப் படுகை ஒதுக்கீட்டில்தான் இந்தப் பெரும் ஊழல் நடந்தது.

இதுதொடர்பாக மத்தியப் புலனாய்வுக்கழகம்(சிபிஐ) விசாரணை செய்கிறது. இந்த விசாரணை முடிவடையாத நிலையில் முக்கியமான கோப்புகள் மாயமாகின. இதுகுறித்து சிபிஐ கூறுகையில், அரசு தரப்பில் இருந்து முக்கியமான 225 கோப்புகள் இன்னும் வரவில்லை. 13 போலீஸ் எப்..ஆர்.கள் அடிப்படையில் இந்த கோப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன எனத் தெரிவித்தது. ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரிப் படுகைகள் மிக குறைவான விலைக்கு தனியாருக்கு த் தரப்பட்டுள்ளது என்றும், இதனால் ரூ.1.86 லட்சம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த வழக்குகள் பதிவுசெய்யப் பட்டுள்ளன.

இந்த நிலையில் அரசு 2 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப்பத்திரத்தில், மாயமான 7 கோப்புகளை தேடுவதற்கான முயற்சியில் உள்ளதாக தெரிவித்தது. மாயமான கோப்புகள் விவரங்களை தொகுத்து அட்டர்னி ஜெனரலிடம் 5நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் சிபிஐக்கு அறிவுறுத்தியிருந்தது.மேலும் தேவைப்படும் கோப்புகளை 2 வார காலத்திற்குள் சிபிஐயிடம் அளிக்க வேண்டும் என்றும் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விசாரணை மந்தமான கதியில் செல்வதற்கும் நாட்டின் தலைமை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. மாயமான கோப்புகள் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் பிரதமரை ஏற்கெனவே வற்புறுத்தியுள்ளன.

பொது கணக்குக் குழு : நிலக்கரி ஒதுக்கீடு கோப்புகள் மாயமானது குறித்து உச்ச நீதி மன்றமும் சி.பி.ஐயும் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது நாடாளு மன்றத்தில் பொது கணக்குக் குழுவும் (பிஏசி) மாயமான ஆவணங் கள் குறித்து கேள்வி எழுப்புகிறது.

நிலக்கரித் துறை அமைச்சகம் இன்னும் நிலக்கரிப் படுகை ஒதுக்கீடு நியாய மான முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நியாயப் படுத்துவதற்கான ஆவணங்களை இணைக்கவில்லை என பொது கணக்கு குழு குற்றம் சாட்டியுள்ளது. நிலக்கரிப்படுகை ஒதுக்கீடு குறித்து கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம்(சிஏஜி) கேள்வி எழுப்பிய பின்னர் ஒதுக்கீட்டிற்கு பிந்தைய ஆதாரமாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்றும் பிஏசி கூறியுள்ளது.

காங்கிரஸ் தரப்பில் தற்போது எம்பிக்களாக உள்ள இருவருக்கு நிலக்கரி படுகை ஒதுக்கீட்டில் தொடர்பு உள்ளதாக நிலக்கரித் துறை அமைச்சகத் தரப்பு தகவல்கள் உணர்த்துகின்றன. மொத்தம் 218 நிலக்கரிப்படுகைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கும் நிலக்கரிப்படுகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு விவரங்களை பொது கணக்குக்குழு ஆய்வு செய்தது. இதில் 55 மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட படுகைள் ஒதுக்கீடு செய்யப்பட் டிருப்பது தெரிய வந்தது.

இதில் 28 நிறுவனங்கள் தனியார் துறையை சார்ந்ததாக உள்ளன. நிலக்கரிப் படுகை ஒதுக்கீடு தன்னிச்சையாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
(பிடிஐ)

No comments:

Post a Comment