பிஎஸ்என்எல்-க்குப்
புத்துயிர்
அளித்திட’’
பிஎஸ்என்எல்
ஊழியர்களின்
சிறப்பு
மாநாடு
புதுதில்லியில்
சனிக்கிழமையன்று
நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு
பிஎஸ்என்எல்
நிறுவனத்தில்
உள்ள
அனைத்து
சங்கங்களின்
சார்பிலும்
ஆயிரத்திற்கும்
மேற்பட்ட
ஊழியர்கள்
வந்து
பங்கேற்றனர்.
பிஎஸ்என்எல்
நிறுவனத்தில்
பணியாற்றும்
அதிகாரிகள்
மற்றும்
ஊழியர்கள்
அனைவரையும்
உள்ளடக்கியுள்ள
பிஎஸ்என்எல்
சங்கங்களின்
கூட்டமைப்பின்
சார்பில்
இந்த
சிறப்பு
மாநாடு
ஏற்பாடு
செய்யப்
பட்டிருந்தது.
சிறப்பு
மாநாட்டிற்கு
கூட்டமைப்பின்
தலைவர்
சி.
சிங்
தலைமை
வகித்தார்.
கூட்டமைப்பின்
கன்வீனர்
விஏஎன்
நம்பூதிரி
சிறப்பு
மாநாட்டின்
பிரகடனத்தை
முன்மொழிந்து
பேசினார்.
பிஎஸ்என்எல்
நிறுவனத்திற்கு
எந்தவிதத்தில்
புத்துயிர்
அளித்திடலாம்
என்பதையும்
அதன்மூலம்
நுகர்வோருக்கு
சிறந்த
முறையில்
சேவை
செய்திடலாம்
என்பதையும்
விளக்கினார்.
சிறப்பு
மாநாட்டை
வாழ்த்தி
குருதாஸ்
தாஸ்
குப்தா,
எம்.பி,(பொதுச்
செயலாளர்,
ஏஐடியுசி),
ஸ்வதேஷ்
தேவ்ராய்,
(செயலாளர்,
சிஐடியு),
பி.என்.ராய்,
(பொதுச்
செயலாளர்),
பிஎம்எஸ்,
டாக்டர்
உதித்ராஜ்,
(தலைவர்,
அகில
இந்திய
தலித்/பழங்குடியினர்
ஊழியர்கள்
மகாசம்மேளனம்)
மற்றும்
இதர
சங்கங்
களின்
தலைவர்கள்
உரை
யாற்றினர்.
கன்வீனர் முன்மொழிந்த
பிரகடனத்தின்மீது
பிரதிநிதிகளின்
விவாதங்களுக்
குப்
பின்,
பிரகடனம்
ஒரு
மனதாக
நிறைவேற்றப்பட்டது.
பிரகடனத்தில்
மத்திய
அரசு
பிஎஸ்என்எல்
நிறுவனத்திற்கு
அளித்துள்ள
உறுதிமொழிகளை
நிறை
வேற்ற
வேண்டும்
என்றும்,
நிறுவனத்தைத்
திறனுடன்
நடத்திட
திறமையான
நிர்வாகம்
தேவை
என்றும்
கோரப்பட்டுள்ளது.
இதுபோன்ற
சிறப்பு
மாநாடுகளை
மாநிலங்கள்
மற்றும்
மாவட்டங்கள்
அளவிலும்
நடத்தி,
கூட்டமைப்பின்
கோரிக்கைகளை
விரிவான
அளவில்
பிரச்சாரம்
செய்திடவும்
இச்சிறப்பு
மாநாட்டில்
தீர்மானிக்கப்
பட்டது.
நன்றி: தீக்கதிர்
No comments:
Post a Comment