ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பான சிஏஜி அறிக்கை, பார்லி.,யில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அரசுக்கு சாதகமாக பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. முறைப்படி எந்த ஒரு விதிமுறைகளும் கையாளப்படவில்லை என சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக வெளிநாடுகளில் விசாரணை நடத்துவதற்காக தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனுக்களையும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் 3 முறை நிராகரித்துள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் இந்தியாவிலேயே நடத்தப்பட வேண்டும் எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் வாங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் எவையும் பரிசோதிக்கப்படவில்லை. அடிப்படை விலை புள்ளியும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதாகவும், இதில் தாமதம் ஏற்பட்டதாகவும் சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment