காய்கறி, பழங்கள், தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் ஆண்டுக்கு ரூ.44,000 கோடி அளவுக்கு வீணடிக்கப்படுவதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.உணவு தானியங்களை சேமிக்க போதுமான கிடங்குகள் இல்லாதது மற்றும் காய்கறி, பழங்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் போதிய அளவு இல்லாததுதான் உணவுப் பொருட்கள் வீணாவதற்குக் காரணம். காய்கறி, பழங்கள் மட்டும் ரூ.13,309 கோடிக்கு வீணாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கோதுமை, அரிசி உள்பட வீணாகும் இதர தானியங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் வீணாகும் மொத்த உணவுப் பொருட்களின் மதிப்பு ரூ.44,000 கோடியை தாண்டிவிடும்.திட்டக்குழு இது குறித்து ஆய்வு மேற்கொள்ள 2012ம் ஆண்டில் சவுமித்ரா சவுத்ரி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. தற்போnது 2.90 கோடி டன் காய்கறி, பழங்களை பாதுகாக்கும் அளவிற்கே குளிர்பதன கிடங்குகள் உள்ளன என்றும், உண்மையில் 6.13 கோடி டன்னை பாதுகாக்கும் அளவிற்கு இந்த வசதி வேண்டும் என்றும் இக்குழு தனது அறிக்கையில் தெரிவித்தது.
No comments:
Post a Comment