தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 28 August 2013

பொருளாதாரச் சுனாமி காத்திருக்கிறது மக்களவையில் இடதுசாரிகள் எச்சரிக்கைமக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றிவரும் மோசமானக் கொள்கைகளே நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு காரணம் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அதிகாரத்திலிருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வெளியேற்றுவதே, நாட்டின் பொருளாதார நிலை மை சீரடைய வழி என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாடினர்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை அனைத்துப் பொருட்களின் விலைகளும் மிகக்கடுமையாக அதிகரித்துவரும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்திக்கத் துவங்கியுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் பல்வேறு கட்சிகளது உறுப்பினர்கள் திங்களன்று பிரச்சனை எழுப்பினர். 1991ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் கவலை தெரிவித் தனர்.
நாட்டின் நிலைமை நாளுக்கு நாள்மோசமாகி வரும் நிலையிலும் கூட, எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று மழுப்பிவரும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நிதியமைச்சர் .சிதம்பரத்தையும் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் விமர்சித்தனர். பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை அரசு இழந்துவிட்டது என்று விவாதத்தில் பேசிய பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
நாடு மிகப்பெரிய அழிவை நோக்கிச் சென்று கொண் டிருக்கிறது என்றும், ஒரு பெரிய பொருளாதாரச் சுனாமி காத்திருக்கிறது என்றும் இடதுசாரிக் கட்சிகளின் உறுப் பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் கூட்டணி அரசின் நாசகரக் கொள்கைகளே இதற்குக் காரணம் என்றும் சாடினர். சமாஜ்வாதி உறுப்பினர் சைலேந்திர குமார் பேசுகையில், 1991ல் ஏற்பட்ட நெருக்கடிச் சூழல் நிகழ்ந்துவிடுமோ என்று அச்சமாக உள்ளது எனக்கூறினார்.
யாரும் பதற்றப் படத்தேவையில்லை என்று நிதியமைச்சர் சிதம்பரம் மீண்டும் மீண்டும் கூறிவருவதை சுட்டிக்காட்டிய அவர், சிதம்பரத்தின் வார்த்தைகளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்றும் குறிப்பிட்டார். நாடு கடுமையான நெருக்கடியை சந்திக்கும் போதிலும் பிரதமரும் நிதியமைச்சரும் அமெரிக்காவின் நெருக்கடியை தீர்ப்பதற்கே முயற்சிக்கிறார்கள் என்று சிபிஐ தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.No comments:

Post a Comment