தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday, 31 August 2013

பொருளாதார நெருக்கடி - யார் காரணம்?



அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் இதுவரை 16 சதவீதம் சரிவடைந்துள்ளது. நிதி ஆண்டின் தொடக்கத்தில் ரூ 54 ஆக இருந்த டாலர் தற்போது ரூ65 ஆக குறைந்துள்ளது. இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது. பன்னாட்டு நிதிமூலதன கும்பலுக்கு இந்திய சந்தையை திறந்து விட்டதற்கான விலையை ஒட்டுமொத்த இந்திய மக்களும் தரப் போகிறார்கள். அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை நிறுத்தப் போவதால் அன்னிய நிதி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை பெருமளவில் விலக்கிக் கொண்டுள்ளன. இதனால் ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிந்துள்ளது. ஏற்கெனவே நடப்புக்கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் இந்த டாலர் வெளியேற்றத்தை குறைப்பதென்பது பெரும் சவாலாக இந்திய அரசுக்கு மாறியிருக்கின்றது. ரூபாய் மதிப்பு சரிவால் கச்சாஎண்ணையின் கொள்முதல் செலவு பெருமளவில் அதிகரிக்கும். அதன் தொடர்விளைவாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படும். இது சங்கிலித் தொடர்போன்று விலைவாசி உயர்வையும் மக்களின் வாங்கும் திறனையும் குறைத்து மேலும் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லும்.

ஒரு நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் எனில் அந்நாடு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்க வேண்டும். ஆனால் இந்திய ஆளும் வர்க்கம் பன்னாட்டு முதலாளிகளின் கைக்கூலிகளாகவும் அவர்களின் நலனை காப்பாற்றுவதற்காக இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களைக் கொலை செய்யவும் தயங்காத கொலைகார கும்பலாகவும் இருப்பதால் அனைத்துத் துறைகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நிதியாதிக்க கும்பலுக்கும் திறந்துவிட்டனர். அவர்கள் தங்கள் விருப்பம்போல் கொள்ளையடிக்க அனுமதி கொடுத்தனர். இதன் விளைவாக ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியும் வீழ்ச்சியடைந்து இன்று முடமாகிக் கிடக்கின்றது. பெரும்பாலான தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியைக் குறைத்துள்ளன. பல லட்சம் தொழிலாளிகள் வேலையிழப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

வங்கத்தில் தர்ணா

மேற்கு வங்கத்தில் தற்காலிக மற்ரும் ஒப்பந்த ஊழியர்கள் 48 மணி நேர தர்ணா போராட்டத்தை நடத்தியுள்ளனர். விடுபட்ட தற்காலிக ஊழியர்களின் நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை முன் வைத்துப் போராடும் வங்கத்தோழர்களுக்கு நமது செவ்வணக்கம்.

JCM வழக்கு

JCM உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக FNTO தொடுத்த வழக்கு 29.08.2013 அன்று மாண்புமிகு கேரளா உயர்நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்தது. நமது தரப்பு தயார்நிலையில் இருந்த போதும் FNTO தரப்பில் மேலும் கால அவகாசம் கேட்டதால் விசாரனை நடைபெறவில்லை. செப் 9ம் தேதிக்கு விசாரனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தறி கெட்டுத் தாக்கும் இந்தியப் பொருளாதாரம்


ஓய்வூதியர்கள் சங்கத்தின் தர்ணா போராட்டம்

ஓய்வூதியர்களின் 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
காரைக்குடி AIDBPA
29.08.2013 அன்று தர்ணா நடத்தியது.
தோழர். முத்துராமலிங்கம் தர்ணாவுக்கு தலைமை தாங்கினார்.

மாவட்டச் செயலர், தோழர். V. சுப்ரமண்யன் வரவேற்புரை ஆற்றினார்.
CITUவின் மூத்த தோழர். C. சுப்ரமணியமன் துவக்கவுரை ஆற்றினார்.

கோரிக்கைகளை விளக்கியும்
போராட்டத்தை வாழ்த்தியும்

தோழர். மோஹன்தாஸ், மாவட்டச் செயலர், AIBSNLEA
தோழர். மாரி, மாவட்டச் செயலர், NFTE
தோழர். பூமிநாதன், மாவட்டச் செயலர், BSNLEU
தோழர். பாலசுப்ரமணியன், AIBSNLEA
தோழர். ஜீவானந்தம், TNGEA
தோழர். ஜனநேசன், ஆசிரியர்கள் சங்கம்
தோழர். ராதாகிருஷ்ணன், AIDBPA
ஆகியோர் பேசினர்.

தோழர். முத்துகிருஷ்ணன் நன்றி நவின்றார்.

தர்ணா காட்சிகள் சில:





Friday, 30 August 2013

பிரதமருக்குக் கடிதம்

BSNL புத்தாக்கம் தொடர்பாக திரு. ககன் தாஸ் MP, அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். BSNL உருவாகும் போது அரசு அளித்த உத்தரவாதங்களில் இருந்து தற்போது பின்வாங்குவதால் தான் BSNL நலிவடைகிறது என்பதைச் சுட்டிக்காட்டியும் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


GPF FUND ALLOTMENT IN SEPTEMBER

ஓணம் பண்டிகை வருவதால் செப்டம்பர் 5ம் தேதியில் வைப்பு நிதிப் பணம் (GPF advance / withdrawal) பெறுவதற்கு ஏதுவாக வைப்புநிதி ஒதுக்கீட்டை விரைந்து அனுப்ப வேண்டுமென்று பொதுச் செயலர் கடிதம் எழுதியுள்ளார்.



நிலக்கரி ஊழல் : கோப்புகள் மாயமான விவகாரம் : ஆவணங்களை அழிக்க முயற்சியா? அரசு மீது உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்



நிலக்கரிப் படுகை ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட போது அதில் ரூ.1.86 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மெகா ஊழல் தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில் முக்கியமான கோப்புகள் மாயமாகியிருப்பது ஆவணங்களை அழிக்கும் முயற்சியா? என உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது.பிரதமர் மன்மோகன் சிங் வசம் நிலக்கரித் துறை இருந்தபோது 2006ம் ஆண்டில் நடைபெற்ற நிலக் கரிப் படுகை ஒதுக்கீட்டில்தான் இந்தப் பெரும் ஊழல் நடந்தது.

இதுதொடர்பாக மத்தியப் புலனாய்வுக்கழகம்(சிபிஐ) விசாரணை செய்கிறது. இந்த விசாரணை முடிவடையாத நிலையில் முக்கியமான கோப்புகள் மாயமாகின. இதுகுறித்து சிபிஐ கூறுகையில், அரசு தரப்பில் இருந்து முக்கியமான 225 கோப்புகள் இன்னும் வரவில்லை. 13 போலீஸ் எப்..ஆர்.கள் அடிப்படையில் இந்த கோப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன எனத் தெரிவித்தது. ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரிப் படுகைகள் மிக குறைவான விலைக்கு தனியாருக்கு த் தரப்பட்டுள்ளது என்றும், இதனால் ரூ.1.86 லட்சம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த வழக்குகள் பதிவுசெய்யப் பட்டுள்ளன.

இந்த நிலையில் அரசு 2 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப்பத்திரத்தில், மாயமான 7 கோப்புகளை தேடுவதற்கான முயற்சியில் உள்ளதாக தெரிவித்தது. மாயமான கோப்புகள் விவரங்களை தொகுத்து அட்டர்னி ஜெனரலிடம் 5நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் சிபிஐக்கு அறிவுறுத்தியிருந்தது.மேலும் தேவைப்படும் கோப்புகளை 2 வார காலத்திற்குள் சிபிஐயிடம் அளிக்க வேண்டும் என்றும் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விசாரணை மந்தமான கதியில் செல்வதற்கும் நாட்டின் தலைமை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. மாயமான கோப்புகள் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் பிரதமரை ஏற்கெனவே வற்புறுத்தியுள்ளன.

பொது கணக்குக் குழு : நிலக்கரி ஒதுக்கீடு கோப்புகள் மாயமானது குறித்து உச்ச நீதி மன்றமும் சி.பி.ஐயும் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது நாடாளு மன்றத்தில் பொது கணக்குக் குழுவும் (பிஏசி) மாயமான ஆவணங் கள் குறித்து கேள்வி எழுப்புகிறது.

நிலக்கரித் துறை அமைச்சகம் இன்னும் நிலக்கரிப் படுகை ஒதுக்கீடு நியாய மான முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நியாயப் படுத்துவதற்கான ஆவணங்களை இணைக்கவில்லை என பொது கணக்கு குழு குற்றம் சாட்டியுள்ளது. நிலக்கரிப்படுகை ஒதுக்கீடு குறித்து கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம்(சிஏஜி) கேள்வி எழுப்பிய பின்னர் ஒதுக்கீட்டிற்கு பிந்தைய ஆதாரமாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்றும் பிஏசி கூறியுள்ளது.

காங்கிரஸ் தரப்பில் தற்போது எம்பிக்களாக உள்ள இருவருக்கு நிலக்கரி படுகை ஒதுக்கீட்டில் தொடர்பு உள்ளதாக நிலக்கரித் துறை அமைச்சகத் தரப்பு தகவல்கள் உணர்த்துகின்றன. மொத்தம் 218 நிலக்கரிப்படுகைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கும் நிலக்கரிப்படுகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு விவரங்களை பொது கணக்குக்குழு ஆய்வு செய்தது. இதில் 55 மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட படுகைள் ஒதுக்கீடு செய்யப்பட் டிருப்பது தெரிய வந்தது.

இதில் 28 நிறுவனங்கள் தனியார் துறையை சார்ந்ததாக உள்ளன. நிலக்கரிப் படுகை ஒதுக்கீடு தன்னிச்சையாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
(பிடிஐ)