தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 6 September 2013

விலை உயர்ந்தாலும் கவலை இல்லை : பெரும் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்வதே முதல் வேலை ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் ரகுராம் ராஜன் அறிவிப்பு




அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரும் என்ற அபாயம் ஏற்பட்டாலும், வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு பெருமுதலாளிகள் முதலாளிகளது முதலீடுகளுக்கு உரிய லாபம் கிடைக்கும் வகையில் பார்த்துக் கொள்வோம் என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்றுள்ள ரகுராம் ராஜன் கூறினார்.

லாபம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று அதி காரப்பூர்வமாக உத்தரவாதம் கிடைத்த நிலையில், இந்தியாவில் முதலீடுகள் செய்யத்திட்டமிட்டுள்ள வெளிநாட்டு மற் றும் உள்நாட்டு முதலாளிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியின் விளைவாக, ரூபாய் மதிப்பு சில புள்ளிகள் உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் தீவிரமடைந்தாலும், இந்தியா வில் மன்மோகன் அரசு ஏற்கனவே பின்பற்றி வரும் நாசகரப் பொருளாதார தாராளமயக் கொள்கைகளால் ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந் துள்ள போதிலும், அதே கொள்கைகளை இன்னும் தீவிரமாக அமலாக்குவது என காங்கிரஸ் கூட்டணி அரசு காரியங்களை ஆற்றி வரு கிறது.

அதன் ஒரு பகுதியாகவே ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தையில் வைத்து சூறையாடுவதற்கு அனுமதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது உள்பட பல நடவடிக்கைகளை அரசு மேற் கொண்டுள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக தங்களது திட்டங்களையெல்லாம் மறுப்பேதும் கூறாமல் அமல்படுத்துகிற விதத்தில் தங்களுக்கு நம்பகமான நபரான ரகுராம் ராஜனை மத்திய அரசு நியமித்தது. பன்னாட்டு நிதி நிறுவனத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ரகு ராம் ராஜன், புதனன்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்றார்.


பேட்டி பதவியேற்றவுடன் ரகுராம் ராஜன் கூறியதாவது-பணவீக்கத்தை கட்டுப் படுத்துவது முக்கியம் தான். அதற்காக நாட்டின் வளர்ச்சியையே அது முடக்கிவிடக் கூடாது. இதனால் இதில் மாறுபட்ட அணுகுமுறை தேவை. என்னைப் பொறுத்தவரை நாட்டின் வளர்ச்சி, பணவீக் கத்தை கட்டுக்குள் வைப்பது, ரூபாய் மதிப்பை உயர்த்துதல் ஆகியவையே உடனடியான பணிகள். இதற்காக நான் எடுக்கும் சில நடவடிக்கைகள் கடுமையானதாக இருக்காலம். நமது உடனடித் தேவை அதிகமான வெளிநாட்டு முதலீடுகள். முதலீட்டாளர்கள் விரும்பும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணவீக்கம் ஏற்பட்டாலும் முதலீட்டுக்கு உரிய லாபம் கிடைக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப் படும். வங்கிகள் வெளிநாடுகளில் இருந்து நிதி ஆதாரத்தைத் திரட்டுவதில் உள்ள தடைகள்  நீக்கப்படும்.

சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் நிதிக்கான வட்டி குறைக்கப் படும். புதிய வங்கிகளுக்கு லைசென்ஸ் வழங்கும் நடைமுறை கள் எளிதாக்கப்படும். கிராமப் பகுதிகளிலும் அதிக வங்கிக் கிளைகள் தொடங்க இது வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கவும், வெளிநாடுகளில் முதலீடு செய்யவும் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். வங்கிகளின் வராக் கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்க புதிய குழு அமைத்து அவர்களது பரிந்துரைகள் அமலாக்கப்படும். வெளிநாட்டு இந்தியர்களின் முதலீடுகளை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களது முதலீடுகளுக்கு உரிய பலன் கிடைக்கும் வகையில் திட்டங்கள் அமலாக்கப்படும்.

இந்த நடவடிக்கைகள் எல்லாமே மிக விரைவிலேயே அமலுக்கு வரும். அடுத்தடுத்த வாரங்களில் எல்லாமே நடந்தாக வேண்டும். மேலும் டாலரை மட்டுமே சார்ந்து இருக்காமல் ரூபாயை அடிப்படையாக வைத்து சர்வதேச வர்த் தகத்தை கையாளவும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார். ராஜனின் இந்தப் பேச்சு, உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் முதலாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாக பங்குச் சந்தைகளில்உற்சாகம்பரவி சென்செக்ஸ் 550 புள்ளிகள் அளவுக்குப் பரவியது. ரூபா யின் மதிப்பும் சற்று உயர்ந்து 65.54 என்ற நிலையை அடைந்தது.

No comments:

Post a Comment