தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday, 26 September 2013

மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு கண்டனம் : அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்



மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்தும்குறைந்தபட்சக் கூலி ரூ. 10 ஆயிரமாக  நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் புதனன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற இந்த மாபெரும் இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக முழக்கமிட் டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்  நலச் சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும், அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தேசியப் பாதுகாப்பு நிதி உருவாக்க வேண்டும், பொதுத் துறைப்பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதை நிறுத்த வேண்டும். நிரந்தரத் தொழில்களில் காண்ட்ராக்ட் முறையை அமல்படுத்தக்கூடாது, ஒப்பந்தத் தொழிலாளருக்கும் நிரந்தரத் தொழிலாளி வாங்கும் அதே ஊதியம் இதர பயன்களை வழங்க வேண்டும்.

சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியத்தை அமைப்புசாராத் தொழிலாளருக்கும் வழங்கிடச் சட்டம் கொண்டு வரவேண்டியும், போனஸ்-வைப்பு நிதி உச்சவரம்பை நீக்க வேண்டும், அனைவருக்கும் ஓய்வூதிய உத்தரவாதம் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிற்சங்கப்பதிவுக்கு விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் தொழிற் சங்கங்களை கட்டாயம் பதிவு செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் புதன் கிழமை மாநிலத்தின் பல் வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன.

சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, ஏஐசிசிடியு, யுடியுசி, எல்பிஎப் ஆகிய மத்திய தொழிற்சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

இதன் ஒரு பகுதியாக காரைக்குடியில்
BSNL பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு
தோழர். M.பூமிநாதன், மாவட்டச் செயலர் BSNLEU,
தோழர். V.மாரி, மாவட்டச் செயலர், NFTE ஆகியோர்
தலைமை வகித்து உரையாற்றினர்.
தோழர். சிவாஜி காந்தி, அகில இந்திய இளைஞர் பெருமன்றம்,
விஞ்ஞானி டாக்டர். ரகுபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தோழர். சுப்ரமணியன், மாவட்டச் செயலர் AIBDPA,
தோழர். பூபதி AIBSNLOA ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
தோழர். சரவணன் நன்றியுரைத்தார்.
ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட பல தோழர்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

காட்சிகள் சில:





No comments:

Post a Comment