நிதி அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான
BSNL,
MTNL புத்தாக்கத்திற்கான அமைச்சரவைக்
குழு
இன்று (12.09.2013) மாலை
கூடுகிறது.
இந்தக் குழு ஆகஸ்ட் 1 ம்
தேதி கூடி
ஓய்வூதியம் தொடர்பாக விவாதித்தது.
MTNL ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களுக்காக
ரூ.5925 கோடி தருவதற்கு DOT
சம்மதிப்பதாகத் தெரிகிறது.
BSNLல் 1 லட்சம் ஊழியர்களையும்
MTNLல் 20000 ஊழியர்களையும்
VRS மூலம் வீட்டுக்கு அனுப்ப DOT
திட்டமிட்டுள்ளது.
ஒப்படைத்த BWA
அலைக்கற்றைக்கான
கட்டணத்தைத் திரும்பப் பெறுதல்,
லாபமற்ற கிராமப்புற சேவைகளுக்கான
நிதி இழப்பீடு போன்ற முக்கியமான பிரச்சனைகளை
இந்தக் குழுவிடம் DOTம்
BSNL,
MTNL நிறுவனங்களும் வைத்துள்ளன.
BSNL, MTNL நிறுவனங்களின்
புத்தாக்கத்திற்காக
அமைச்சரவைக் குழு
உண்மையிலேயே அக்கறைப் படுமா?
அல்லது
வழக்கமாகக் கூடிக் கலையுமா?
No comments:
Post a Comment