தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday, 21 September 2013

நியாயத்தின் குரல்



சென்னை சொசைட்டியின் RGB கூட்டம் நேற்று (20.09.2013) நடைபெற்றது.
சோசைட்டி வாங்கியுள்ள வீட்டு மனையை,
மனையாகவே பிரித்துத்தருவது என்பது 
ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு. 
அந்த முடிவின் படி, விண்ணப்பதாரர்களுக்கான ஒப்புகைச் சீட்டும்
ஏற்கனவே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது, அதில் அடுக்கு மாடி குடியிருப்புகளைக் கட்டி
பிரித்துத் தரவேண்டும் என்ற புதிய குழப்பத்தை
உண்டுபண்ண சிலர் துடிக்கிறார்கள்.
சொசைட்டி வாங்கியுள்ள வீட்டு மனையை பிரித்தளிப்பது தான்
நேற்றைய கூட்டத்தின் முக்கிய விவாதப் பொருள்.
RGB கூட்டம் நடந்து கொண்டிருக்கும் இடையில்,
இயக்குநர்கள் குழு கூட்டத்தை நடத்தியதாகவும்
அடுக்கு மாடி குடியிருப்புகளைக் கட்டி
அவற்றை பிரித்துத் தருவது என்று
முடிவு எடுக்கப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.

நடைபெற்ற RGB கூட்டத்தில்

மனையாகவே பிரித்துத் தருவதில் உள்ள நியாயத்தை

NFTE சங்கத்தின் தோழர். சுந்தர்ராஜன், காரைக்குடி அவர்கள்

வெகு சிறப்பாக, வலுவாக எடுத்துரைத்தார்,

என்று செய்திகள் வந்துள்ளன.

நியாயத்தின் பக்கம் நிற்கும் தோழர். சுந்தர்ராஜனை

காரைக்குடி BSNLEU மாவட்டச் சங்கம் மனதாரப் பாராட்டுகிறது.

No comments:

Post a Comment