தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday, 19 September 2013

நியாயத்தை மறந்த நீதிமன்றத் தீர்ப்பு



பற்றியெரிந்துகொண்டிருக்கும் எரிபொருள் விலை பிரச்சனையில் டீசல் ஊற்றுவது போன்றதொரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது. பெரும் அளவில் டீசல் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மானிய விலையில் அதனை வழங்க முடியாது என்ற மத்திய அரசின் முடிவு சரியானதுதான் என்று செவ்வாய்க்கிழ மையன்று (செப்.17) உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்படுவது போக்குவரத்து நிறுவனங்கள்தான் - குறிப்பாக அனைத்து மாநிலங்களி லும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங் களும் மத்திய அரசின் பொறுப்பில் உள்ள ரயில்வே துறையும்தான். சரியாகச் சொல்வதென்றால், இந்த முடிவின் சுமை அழுத்தப்போவது பொதுப் போக்குவரத்தையே பெரிதும் சார்ந்துள்ள பொதுமக்களைத்தான். அதைப்பற்றிய கவலை இல்லாத ஒரு தீர்ப்பை நாட்டின் மிக உயர்நிலை நீதிமன்றம் அளித்திருப்பது கடுமையான விமர் சனத்திற்கு உரியதாகும்.

போக்குவரத்துக் கழகங்கள் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் நாட்டின் பொருளாதாரம் மோச மான நிலையில் இருப்பதை மனதில் கொள்ள வேண்டும், மானியம் இல்லாமலே தாக்குப் பிடிப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண் டும் என்று நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வுக்குழு கூறியிருக்கிறது.

பொருளாதார சரிவுக்கான முக்கியமான காரணங் களில் ஒன்று உள்நாட்டில் பெட்ரோலிய விலை கட்டுப்பாடு கைவிடப்பட்டதுதான் என்று மக்கள் இயக்கங்கள் சுட்டிக்காட்டியிருக்கின் றன. நீதிமன்றம் அதை மனதில் கொண்டு தனது தீர்ப்பை அளித்திருக்க வேண்டும். மாறாக, பொருளாதாரச் சிக்கலுக்கான தீர்வாக பெட்ரோலிய விலை கட்டுப்பாட்டை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவது என்ற அரசுக்கொள்கைக்கு ஆதரவளித்திருப்பது மக்களைக் கைவிடுகிற செயல்தான்.


உலகமய - தாராளமய - தனியார் மய பொருளாதாரக் கொள்கைகளின் பிடியி லிருந்து நீதித்துறையும் தப்பவில்லை என் பதற்கு இது ஒரு சாட்சியம்.பொதுப்போக்குவரத்தை ஊக்குவிப்பதே உண்மையில் பெட்ரோல் - டீசல் பயன்பாட் டைப் பெரிதும் குறைப்பதற்கான வழியாகும். மக்கள் பேருந்துகளையும் ரயில்களையும் எவ்வளவுக்கெவ்வளவு கூடுதலாக பயன்படுத்துகிறார்களோ அந்த அளவுக்கு சாலைகளில் மற்ற வாகனங்களின் நடமாட்டம் குறையும்; அந்த அளவுக்கு எரிபொருள் சேமிக்கப் படும்.

அது தேசத்தின் பொருளாதாரத்திற்கும் பேருதவியாக அமையும். இந்த எளிய அறிவியலை ஆட்சியாளர்களும் உணரவில்லை, அரசின் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்குகிற முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களும் புரிந்துகொள்ளவில்லை. நீதிமன்றமும் விளங் கிக்கொள்ளவில்லை. அதனால்தான், மக்க ளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள் ளிட்ட நடவடிக்கைகளை போக்குவரத்துக் கழகங்கள் மேற்கொள்ளலாம் என்று அறிவுரை கூறியிருக்கிறது.

செயல்முறைச் செலவைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளைப் போக்குவரத்துக் கழகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று, அந்தக் கழகங்களுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது.

உள்நாட்டு - வெளி நாட்டுத் தனியார் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக, எளிய மக்களைக் கைவிடுகிற நிலை பாட்டை எதிரொலிக்கும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுவது அவசியம். அதே வேளையில், ஒட்டுமொத்த பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மத்திய அரசின் கொள்கை யை எதிர்த்து மாபெரும் மக்கள் போராட்ட இயக்கம் வலுப்பெறுவதே சரியான தீர்ப்புகளுக்கும் தீர்வுகளுக்கும் வழிவகுக்கும்.

No comments:

Post a Comment